மோடியின் பிரதமர் கனவு பலிக்காது: மாயாவதி| Dinamalar

மோடியின் பிரதமர் கனவு பலிக்காது: மாயாவதி

Updated : மே 10, 2019 | Added : மே 10, 2019 | கருத்துகள் (32)

லக்னோ : மோடியின் பிரதமர் கனவு மீண்டும் பலிக்காது என பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி தெரிவித்துள்ளார்.






மாயாவதி வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், எங்களின் கூட்டணி சாதி அடிப்படையிலானது என கூறுவது நகைப்புக்குரிய, முதிர்ச்சியற்ற பேச்சு மட்டுமே. மோடி பிற்படுத்தப்பட்டோர் சமூகத்தில் பிறக்கவில்லை. அதனால் அவருக்கு சாதியவாதத்தால் ஏற்படும் வலியை அவர் எதிர்கொண்டிருக்க மாட்டார். இதற்காக எங்கள் கூட்டணியை ஒதுக்க வேண்டும் என கூறுவது சரியல்ல. மோடி தன்னை பிற்படுத்தப்பட்டவர் என கூறிக் கொள்கிறார். அவர் பிற்படுத்தப்பட்ட சமூகத்தை சேர்ந்தவராக இருந்தால், ஆர்எஸ்எஸ் அவரை பிரதமராக அனுமதிக்காது.





மோடி குஜராத்தை பார்க்கவில்லை. எனக்கு தெரிந்து குஜராத்தில் தலித்கள் யாரும் கவுரவமான வாழ்க்கை வாழ முடியாது. தலித்கள் திருமணத்தின் போது குதிரை சவாரி செய்ய அனுமதிக்கப்படுவதில்லை. குஜராத்தில் தலித்களுக்கு எதிராக அட்டூழியங்கள் நடக்கின்றன.





தேர்தலில் பா.ஜ., நிச்சயம் தோற்கும் என்பதையும், அக்கட்சி விரக்தியில் உள்ளது என்பதையுமே அக்கட்சியினரின் பேச்சுக்கள் காட்டுகின்றன. பா.ஜ., நினைப்பது போல் அக்கட்சி மீண்டும் ஆட்சிக்கு வராது. மீண்டும் பிரதமராவோம் என்ற மோடியின் கனவும் நிறைவேறாது இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X