பொது செய்தி

இந்தியா

கார்த்தி சிதம்பரத்திற்கு எதிராக அப்ரூவராகும் இந்திராணி முகர்ஜி

Updated : மே 10, 2019 | Added : மே 10, 2019 | கருத்துகள் (42)
Advertisement

புதுடில்லி : ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் கார்த்தி சிதம்பரத்திற்கு எதிராக அப்ரூவராக மாற உள்ளார் இந்திராணி முகர்ஜி.





ஐஎன்எக்ஸ் மீடியா நிறுவனத்தின் இயக்குனரான இந்திராணி முகர்ஜி, தற்போது மகள் ஷீனா போரா கொலை வழக்கில் தண்டனை பெற்று சிறையில் இருந்து வருகிறார். ஐஎன்எக்ஸ் மீடியா நிறுவனத்திற்கு முறைகேடாக விதிகளை மீறி நேரடி அந்நிய முதலீட்டிற்கு உதவியதாக கார்த்தி சிதம்பரம் மீது சிபிஐ வழக்கு தொடர்ந்தது.
இந்த வழக்கில் கார்த்தி சிதம்பரத்திடமும், இந்திராணி முகர்ஜியிடமும் சிபிஐ பலமுறை விசாரித்தன. இதில் கார்த்தி சிதம்பரத்திற்கு தான் லஞ்சம் கொடுத்ததாக இந்திராணி முகர்ஜி கூறி இருந்தார்.




இந்த விவகாரத்தில் தான் அப்ரூவராக விரும்புவதாக கோர்ட்டில் ஏற்கனவே மனு அளித்திருந்தார். இது தொடர்பாக சிபிஐ.,யிடம் டில்லி பட்டியாலா ஹவுஸ் கோர்ட் கருத்து கேட்டிருந்தது.
இந்நிலையில், இவ்வழக்கில் இன்று பதில் மனு தாக்கல் செய்த சிபிஐ, இந்திராணி முகர்ஜி அப்ரூவராக மாறுவதில் தங்களுக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை என தெரிவித்துள்ளது. இதனையடுத்து ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் கார்த்தி சிதம்பரத்திற்கு எதிராக அப்ரூவராக மாறி வாக்குமூலம் அளிக்க மே 23 ம் தேதி பட்டியாலா ஹவுஸ் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட உள்ளார்.




ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் ஜாமின் பெற்று வெளியில் உள்ள கார்த்தி சிதம்பரம் காங்., சார்பில் லோக்சபா தேர்தலில் சிவகங்கை தொகுதியில் போட்டியிடுகிறார். கோர்ட்டில் அவ்வப்போது அனுமதி பெற்று வெளிநாடு சென்று வருகிறார்.
ஐஎன்எக்ஸ் வழக்கில் கார்த்தி சிதம்பரம் மற்றும் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தையும் கைது செய்வதற்கான தடையை சமீபத்தில் தான் டில்லி கோர்ட் நீட்டித்திருந்தது. இந்நிலையில் இந்திராணி முகர்ஜி அப்ரூவராகி வாக்குமூலம் அளிக்க உள்ள கார்த்தி சிதம்பரத்திற்கு சிக்கலை அதிகரித்துள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (42)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
karutthu - nainital,இந்தியா
16-மே-201913:24:49 IST Report Abuse
karutthu இவர்கள் குடும்பத்தையே திஹார் ஜெயிலில் தள்ளி சொத்துக்களை அரசு கஜானாவில் சேர்த்தால் அந்த பணத்தில் நாட்டுக்கு நிறைய நல்ல திட்டங்களை அமுல் படுத்தலாம்
Rate this:
Share this comment
Cancel
Swaminathan Chandramouli - Pondicherry,இந்தியா
14-மே-201912:43:37 IST Report Abuse
Swaminathan Chandramouli லட்ச கணக்கான வழக்குகள் தீர்வு காணாமல் நீதிமன்றங்களால் கிடப்பில் போடப்பட்டுள்ளன . கீழமை நீதிமன்றம் ஒரு வழக்கில் குற்றவாளிக்கு தண்டனை அளித்தால் உயர் நீதி மன்றம் மேல் முறையீட்டில் குற்றவாளியை குற்றமற்றவராக அறிவிக்கும் ஏன் என்றால் சட்டம் ஒரே போல் பார்க்க படுவதில்லை . சட்ட நுணுக்கங்கள் மேம்போக்காகத்தான் பார்க்க படுகிறது , நுண் அறிவுடன் ஆழமாக அலசப்படுவதில்லை ,
Rate this:
Share this comment
Cancel
ஜெய்ஹிந்த்புரம் - மதுரை,இந்தியா
12-மே-201908:15:55 IST Report Abuse
ஜெய்ஹிந்த்புரம் மகளோட கொலைவழக்கில் இருந்து விடுதலை தாறோமுன்னு சொன்னார்களா?
Rate this:
Share this comment
Valliappan - Chennai,இந்தியா
17-மே-201914:10:20 IST Report Abuse
Valliappanநீங்க அழாதீங்க.. ஒரு குற்றவாளியா காப்பாற்ற என்ன எண்ணம்.....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X