டவுட் தனபாலு| Dinamalar

சிறப்பு பகுதிகள்

டவுட் தனபாலு

'டவுட்' தனபாலு

Added : மே 10, 2019 | கருத்துகள் (3)
 'டவுட்' தனபாலு

பிரதமர் நரேந்திர மோடி: நிதி நிறுவன மோசடி மூலம், ஏழைகளின் வயிற்றில் அடித்த, தன் சகாக்களை அறைய, அவருக்கு தைரியம் உள்ளதா என, மம்தாவை கேட்க விரும்புகிறேன்.

டவுட் தனபாலு: 'நீங்க குறிப்பிடும் நிதி நிறுவன மோசடி தொடர்பாக, சி.பி.ஐ., வளையத்தில் இருந்த, திரிணமுல் காங்., பொதுச் செயலர் முகுல் ராயை, மம்தா தானே, கட்சியில் இருந்து நீக்கினாங்க... இப்போ அவரு, பா.ஜ.,வில் தானே இருக்காரு... இவர், குற்றமற்றவர்னு, எதை வைத்து முடிவுக்கு வந்தீங்க'ன்னு, யாரும், 'டவுட்' எழுப்பினால், என்ன பதில் சொல்வீங்க...!

***

சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ்: காங்கிரஸ் கட்சிக்கு, மத்தியில் ஆட்சியை பிடிக்கும் ஆசையும் இல்லை; ஆர்வமும் இல்லை. உ.பி.,யில், அடுத்து நடக்கவுள்ள சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்று, ஆட்சி அமைக்கவே, அந்த கட்சி விரும்புகிறது.

டவுட் தனபாலு: காங்கிரசின் ஆசையைப் பற்றி எல்லாம் அலசுறீங்க... அடுத்த சட்டசபை தேர்தலில், உ.பி.,யில், பகுஜன் சமாஜ் கட்சியுடனான உங்களின் இந்தக் கூட்டணி, அப்படியே தொடருமா... முதல்வர் வேட்பாளராக, யாரை முன்னிறுத்துவீங்க என்ற, 'டவுட்'டுக்கு, என்ன பதில் சொல்லப் போறீங்க...!

***

மத்திய நிதியமைச்சர் அருண்ஜெட்லி: கடந்த, 1991ல் நடந்த தற்கொலைப் படை தாக்குதலில், ராஜிவ் உயிரிழந்தபோது, அவருடைய மரணத்துக்கு, தி.மு.க.,வே காரணம் என, காங்., கூறி வந்தது. ஆனால், தற்போது, அந்தக் கட்சியுடன் தேர்தல் கூட்டணி வைத்துள்ளனர்.

டவுட் தனபாலு: ராஜிவ் படுகொலையில், தி.மு.க.,வுக்கு எந்த சம்பந்தமும் இல்லை என்பதை, வழக்கின் தீர்ப்பு உணர்த்தலையா... கிட்டத்தட்ட, 30 வருஷத்துக்கு முன்னர் வைத்த விமர்சனத்தை, இப்போ கிளறுறீங்களே... அதைத் தொடர்ந்து, எத்தனை முறை, இருவரும் கூட்டணி அமைத்து விட்டனர்... கொஞ்சமாவது, 'லாஜிக்' பார்த்து, விமர்சித்தால் என்னங்கறது தான், மக்களின், 'டவுட்'டாக இருக்கு...!

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X