பொது செய்தி

இந்தியா

பதிவு செய்த நாள் :
இந்திய பிளவு சக்திகளின் தலைவர் மோடி
அமெரிக்க பத்திரிகை கடும் விமர்சனம்

புதுடில்லி: 'இந்திய பிளவுவாதிகளின் தலைவர் மோடி' என, அமெரிக்க பத்திரிகையான, 'டைம்ஸ்' விமர்சித்துள்ளது.

TIME,Modi,பிரதமர்,மோடி,அமெரிக்க பத்திரிகை,விமர்சனம்


அமெரிக்காவிலிருந்து வெளியாகும் சர்வதேச பத்திரிகை, டைம்ஸ். கடந்த, 2014, 2015, 2017-ம் ஆண்டுகளில், உலகின் 100 சக்திவாய்ந்த மனிதர்கள் பட்டியலில், பிரதமர் மோடியை தேர்ந்தெடுத்து கவுரவப்படுத்தியது. இப்போது, லோக்சபா தேர்தல் நடக்கும் நேரத்தில், பிரதமர் மோடியை விமர்சித்து, அது கட்டுரை வெளியிட்டு உள்ளது.

'இந்திய பிளவு சக்திகளின் தலைவர்' என்ற தலைப்பில் வெளிவந்துள்ள, அந்த கட்டுரையில் கூறியிருப்பதாவது: இந்தியாவில், 2014ல் நடந்த லோக்சபா தேர்தலின் போது, மோடி மக்களிடம் நம்பிக்கையை ஏற்படுத்தியிருந்தார்.

இந்தியாவின் எதிர்காலம், பிரகாசமாக இருக்கும் என, மக்கள் நம்பினர்.

சாதனை:
ஆனால், தனது உறுதிமொழிகளை செயல்படுத்தாத மோடி, 2019 தேர்தலில் மீண்டும் வெற்றி பெற, சாதாரண அரசியல்வாதி போல் பிரசாரம் செய்கிறார். மதம் சார்ந்த தேசியம் என்ற விஷத்தை, மக்களிடம் புகுத்தி வருகிறார். வளர்ச்சிக்கான தலைவராக கருதப்பட்டவர், இப்போது, இந்திய பிளவு சக்திகளின் தலைவராக உள்ளார். இந்திய மக்களிடம் ஒற்றுமை குறைந்து, வேற்றுமைகள் அதிகரித்திருப்பது தான், மோடி செய்த சாதனை.

காங்., தலைமையில், வலிமையற்ற கூட்டணி அமைந்திருப்பது, மோடியின் அதிர்ஷ்டம் என்றே கூற வேண்டும். மோடியை தோற்கடிப்பதை தவிர, வேறு எந்த கொள்கையும், எதிர்க்கட்சிகளின் கூட்டணிக்கு இல்லை. இவ்வாறு, அந்த கட்டுரையில் கூறப்பட்டுள்ளது.

சீர்திருத்தவாதி:
டைம்ஸ் பத்திரிகையில், 'சீர்திருத்தவாதி மோடி' என்ற தலைப்பில், பிரெம்மர் என்பவர்

Advertisement

எழுதியுள்ள இன்னொரு கட்டுரையில் கூறியிருப்பதாவது: இந்தியாவில், பிரதமர் மோடியின், பொருளாதார சீர்திருத்த நடவடிக்கைகள், பலன் கொடுக்க துவங்கியுள்ளன. இந்தியாவுக்கு இன்னும் மாற்றங்கள் தேவை. அதை மோடியால்தான் நிறைவேற்ற முடியும். சீனா, அமெரிக்கா, ஜப்பான் ஆகிய நாடுகளுடனான இந்திய உறவு, மோடி ஆட்சியில் வலிமை பெற்றுள்ளது.அவரது பொருளாதார நடவடிக்கைகளால், லட்சக்கணக்கான மக்களின் வாழ்க்கை தரம் உயர்ந்து உள்ளது.

ஜி.எஸ்.டி., எனப்படும், சரக்கு மற்றும் சேவை வரி அமலால், வருவாய் அதிகரித்துள்ளது. அதனால், உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த, வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. இவ்வாறு, அந்த கட்டுரையில் கூறியுள்ளார்.


Advertisement

வாசகர் கருத்து (157)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Vaithilingam Ahilathirunayagam - london,யுனைடெட் கிங்டம்
18-மே-201914:42:11 IST Report Abuse

Vaithilingam Ahilathirunayagamமுதலில், பிஜேபி சுப்ரமணியன் சுவாமி என்பவரை கழற்றி விடவேண்டும். இப்படிச் செய்தால் இந்தியாவுக்கு விமோசனம் உண்டு. தமிழகத்திலும், இவரைப் போன்ற குள்ளநரிகள் இருப்பதை மக்கள் அறிவார்கள்.

Rate this:
ramanathan - Ramanathapuram,இந்தியா
18-மே-201908:45:49 IST Report Abuse

ramanathan//Tamilan - California,யூ.எஸ்.ஏ 16-மே-2019 00:03 மோடி கூஜா தூக்கிகள் வந்துவிட்டார்களா??? காங்கிரஸ் ஒன்றும் யோக்கியமான கட்சி இல்லை தான்// உத்தமர் மோடி 15 லட்சம் ரூபாய் போடுவேன் என்று எந்த கூட்டத்திலும் செல்லப்படவில்லை. தவறுதலாக புரிந்து கொண்டு இந்திய கீழ்த்தரமான அரசியல்வாதி போல் எழுதி கருத்து கூற நினைப்பது அறிவு கெட்டதனமாக எண்ணத்தோன்றுகிறது

Rate this:
ramanathan - Ramanathapuram,இந்தியா
18-மே-201908:38:55 IST Report Abuse

ramanathan//மதம் சார்ந்த தேசியம் என்ற விஷத்தை, மக்களிடம் புகுத்தி வருகிறார். வளர்ச்சிக்கான தலைவராக கருதப்பட்டவர், இப்போது, இந்திய பிளவு சக்திகளின் தலைவராக உள்ளார்.//இது பொய் செய்தி. இது பாக்கிஸ்தானுக்கு எழுதப்பட்டது. இந்திய களவாணிகளும் திருடர்களும் அந்த களவாணி கூட்டமும் சேர்ந்து பணம் கொடுத்ததால் எழுதியிருக்கிறார்கள்.

Rate this:
மேலும் 154 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X