பொது செய்தி

தமிழ்நாடு

பிளாஸ்டிக் பேப்பரில் உணவுப்பண்டம் விற்பனை: புகார் தெரிவிக்க அழைப்பு

Added : மே 11, 2019
Share
Advertisement
நாமக்கல்: தினமும், மக்கள் அதிகம் கூடும் இடங்களான ஓட்டல்கள், டீக்கடைகளில் வழங்கப்படும் உணவுப் பதார்த்தங்கள், பழைய அச்சிடப்பட்ட காகிதம் மற்றும் பிளாஸ்டிக் பேப்பரில் பரிமாறப்படுவது, பொட்டலம் போடுவது, அரசால் தடை செய்யப்பட்டுள்ளது. அவ்வாறு அச்சிடப்பட்ட காகிதம் மற்றும் பிளாஸ்டிக் பேப்பரில் மடித்து வழங்கப்படும் உணவுப் பொருட்களால், உடல் நலத்துக்கு தீங்கு ஏற்படும். வடை,

நாமக்கல்: தினமும், மக்கள் அதிகம் கூடும் இடங்களான ஓட்டல்கள், டீக்கடைகளில் வழங்கப்படும் உணவுப் பதார்த்தங்கள், பழைய அச்சிடப்பட்ட காகிதம் மற்றும் பிளாஸ்டிக் பேப்பரில் பரிமாறப்படுவது, பொட்டலம் போடுவது, அரசால் தடை செய்யப்பட்டுள்ளது. அவ்வாறு அச்சிடப்பட்ட காகிதம் மற்றும் பிளாஸ்டிக் பேப்பரில் மடித்து வழங்கப்படும் உணவுப் பொருட்களால், உடல் நலத்துக்கு தீங்கு ஏற்படும். வடை, பஜ்ஜி, போண்டா, பக்கோடா, இறைச்சி, மீன்கள் போன்றவற்றை, அச்சிடப்பட்ட காகிதத்தில் வைத்து, எண்ணெய் பிழிந்து உட்கொள்வது, கொஞ்சம் கொஞ்சமாக, விஷத்தை உண்பதற்கு சமமாகும். அவை, அஜீரண கோளாறை உருவாக்குவதோடு, கடுமையான விஷத்தன்மையையும் ஏற்படுத்துகிறது. அவற்றை பயன்படுத்துவதால், வயதானவர்கள், குழந்தைகள், வளரின பருவத்தினர், நோய் எதிர்ப்பு சக்தி இழந்து, புற்றுநோய்க்கு ஆளாகின்றனர். டீக்கடைகள், ஓட்டல்கள், சிற்றுண்டி விடுதிகள், எண்ணெய் பலகாரக் கடைகளில், அச்சிடப்பட்ட காகிதம், பிளாஸ்டிக் பேப்பரில், உணவுப் பண்டங்களை விற்பனை செய்ய வேண்டாம். தடையை மீறி யாராவது விற்பனை செய்தால், மாவட்ட உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத்துறையினருக்கு, 94440 42322 என்ற, 'வாட்ஸ் ஆப்' எண்ணில் தகவல் தெரிவிக்கலாம். இவ்வாறு, கலெக்டர் ஆசியா மரியம் தெரிவித்துள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X