பொது செய்தி

தமிழ்நாடு

மொழிப்பாடம் தேர்வு தவறான செய்தி: செங்கோட்டையன் விளக்கம்

Updated : மே 11, 2019 | Added : மே 11, 2019 | கருத்துகள் (8)
Share
Advertisement
சென்னை : +1, மற்றும் +2 வகுப்பு மாணவர்கள் தமிழ், ஆங்கிலம் பாடங்களில் ஏதாவது ஒரு மொழிப் பாடத்தை தேர்வு செய்து படிக்கலாம் என்று வெளியான செய்தி தவறானது என்று தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார்.அவர் கூறுகையில், +1. மற்றும் +2 வகுப்புகளுக்கு 6 பாடங்கள் உள்ளன. மாணவர்களின் விருப்ப அடிப்படையில் தமிழ் அல்லது ஆங்கிலத்தில் ஏதாவது ஒரு மொழியை தேர்வு செய்ய
இருமொழி, மொழிப்பாடம், செங்கோட்டையன்

சென்னை : +1, மற்றும் +2 வகுப்பு மாணவர்கள் தமிழ், ஆங்கிலம் பாடங்களில் ஏதாவது ஒரு மொழிப் பாடத்தை தேர்வு செய்து படிக்கலாம் என்று வெளியான செய்தி தவறானது என்று தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார்.

அவர் கூறுகையில், +1. மற்றும் +2 வகுப்புகளுக்கு 6 பாடங்கள் உள்ளன. மாணவர்களின் விருப்ப அடிப்படையில் தமிழ் அல்லது ஆங்கிலத்தில் ஏதாவது ஒரு மொழியை தேர்வு செய்ய பள்ளிக்கல்வித்துறை பரிந்துரைத்து உள்ளதாக வெளியான தகவல் முற்றிலும் தவறானது, ஆதாரமற்றது என்றும் கூறியுள்ளார்.

பாடங்களுக்கான மொத்த மதிப்பெண்ணை 600 - ல் இருந்து ஐநூறாக குறைக்கும் திட்டமும் இல்லை. அப்படி எந்த ஒரு ஆலோசனையும் நடைபெறவே இல்லை. இரு மொழி கொள்கையில் தமிழக அரசு உறுதியாக உள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
வழக்கம் போல 6 பாடங்களும் மாணவர்களுக்கு கற்றுக் கொடுக்கும் நடைமுறையை பள்ளிக் கல்வித்துறை பின்பற்றும் என்றும் அவர் உறுதி அளித்துள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (8)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Uma Sridharan - Chennai,இந்தியா
11-மே-201914:21:56 IST Report Abuse
Uma Sridharan மொழி பாடம் என்பதே வேண்டாம். மொழியில் ஆர்வம் உள்ளவர்கள் மட்டும் அந்தந்த மொழியை எடுத்து படிப்பது போன்ற பாட திட்டம் தேவை. கல்லூரியிலும் அதே போல் செய்யலாம்.
Rate this:
Cancel
JIVAN - Cuddalore District,இந்தியா
11-மே-201911:58:44 IST Report Abuse
JIVAN மொழி பாடமே +1, மற்றும் +2 வகுப்பு மாணவர்களுக்கு தேவையில்லை அதே நேரத்தில் பத்தாம் வகுப்புவரை தரமான முறையில் தரலாம், மாணவர்களும் முதன்மை பாடங்களில் சிறப்பாக கவனம் செலுத்தமுடியும் .
Rate this:
Cancel
S.Baliah Seer - Chennai,இந்தியா
11-மே-201911:47:56 IST Report Abuse
S.Baliah Seer உலகில் இரண்டு மொழிகளை மட்டுமே மாணவர்கள் படிக்கவேண்டும்.முதலில் உலக பொது மொழியான ஆங்கிலம். இரண்டாவதாக அவர்களின் தாய் மொழி. அத்துடன் விஷயத்தை நிறுத்துங்கள். மத்திய அரசு ஆங்கிலத்தில் மட்டுமே சர்குலர் அனுப்பவேண்டும். இந்தியை இந்தியாவின் பொது மொழியாக ஏற்றுக்கொள்ள முடியாது.
Rate this:
DSM .S/o PLM - இந்து கவுண்டன் , கவுந்தப்பாடி ஈரோடு ,இந்தியா
11-மே-201917:08:28 IST Report Abuse
DSM .S/o PLM ஆங்கில அடிமை. அப்படி என்ன அந்த மொழி மீது விசுவாசம் ?...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X