பள்ளிபாளையம்: சமயசங்கலி சுற்றுவட்டார பகுதியில், வரும் தை மாதம் அறுவடை செய்யயும் வகையில், கரும்பு சாகுபடியில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர். பள்ளிபாளையம் அடுத்த, சமயசங்கிலி, கரமேடு, ஆவத்திபாளையம், தொட்டிபாளையம், தடுப்பணை பகுதி மற்றும் சுற்று வட்டாரம் விவசாயம் நிறைந்த பகுதியாகும். ஒவ்வொரு ஆண்டும் பொங்கலுக்கு அரசு கரும்பு வழங்குவதால், இப்பகுதி விவசாயிகள் கரும்பு சாகுபடியில் ஆர்வம் காட்டி வருகின்றனர். தற்போது கரும்பு சாகுபடியில் தீவிரமாக இறங்கியுள்ளனர். இது குறித்து, கரமேடு விவசாயி ஒருவர் கூறுகையில், 'சித்திரையில் கரும்பு சாகுபடி செய்து, தை தொடக்கத்தில் அறுவடை செய்யும் வகையில் சாகுபடி நடக்கிறது. இந்தாண்டு, 300 ஏக்கருக்கு மேல் இப்பகுதியில் சாகுபடி செய்யப்படுகிறது' என்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE