மத்தியில் வலிமையான அரசு தேவை: பிரதமர்

Updated : மே 11, 2019 | Added : மே 11, 2019 | கருத்துகள் (33)
Share
Advertisement
பிரதமர் மோடி, எதிர்க்கட்சிகள், பா.ஜ., பாஜ

சோன்பத்ரா: மத்தியில் வலிமையான அரசு இருந்தால் தான் நாட்டின் பாதுகாப்பிற்கு எதை செய்ய வேண்டுமானாலும் செய்யும் என பிரதமர் மோடி கூறியுள்ளார்.

உ.பி.,யின் சோன்பத்ரா என்ற இடத்தில் நடந்த பிரசார கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியதாவது: சமாஜ்வாதி மற்றும் பகுஜன் சமாஜ் கட்சிகள் உ.பி.,யை சீரழித்தன. தற்போது பா.ஜ.,வை பார்த்து ஒன்று சேர்ந்துள்ளன. அவர்கள் தங்களை காத்து கொள்ளவும், அழிவிலிருந்து தப்பித்து கொள்ளவுமே ஒன்று சேர்ந்துள்ளனர். அவை கலப்பட கூட்டணி. தற்போது அவர்கள் மோடியின் ஜாதி என்ன என கேட்க துவங்கியுள்ளனர். ஏழை மக்கள் என்ன ஜாதியோ, அந்த ஜாதியை சேர்ந்தவன் நான்.


latest tamil news


6-வது கட்ட லோக்சபா தேர்தல் 7 மாநிலங்களுக்கு உட்பட்ட 59 தொகுதிகளில் ஞாயிறன்று நடக்கிறது. உத்தரப்பிரதேசத்தில் நடந்த பிரசாரக்கூட்டங்களில் பிரதமர் மோடி உரையாற்றினார். 21 ஆண்டுகளுக்கு முன் இதே மே 11ம்தேதி பொக்ரானில் அணு ஆயுத சோதனையை வாஜ்பாய் நடத்தினார். அவருக்கு முன் ஆட்சி செய்த யாருக்கும் இந்த துணிச்சல் இல்லை என்று பிரதமர் கூறினார்.முந்தைய அரசுகள் ,நமது உளவுத்துறை அமைப்புகளை பலவீனப்படுத்தின. இதனை முன்னர் அங்கு பணிபுரிந்த அதிகாரிகள் எழுதியுள்ளனர். மத்தியில் எதிர்க்கட்சிகள் கூட்டணி சேர்ந்து ஆட்சி அமைக்கும் போது, நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படுகிறது.


latest tamil news
21 ஆண்டுக்கு முன்னர் இந்த நாளில், இந்தியா வெற்றிகரமாக அணுகுண்டு சோதனை நடத்தியது. ஆபரேசன் சக்தியை வெற்றிகரமாக செய்து முடித்த விஞ்ஞானிகளுக்கு பாராட்டு தெரிவித்து கொள்கிறேன். 1998 ல் நடந்த இந்த வரலாற்று நிகழ்வு, வலிமையான தலைமை, நாட்டின் பாதுகாப்புக்கு எதை வேண்டுமானாலும் செய்யும். முந்தைய மன்மோகன் ஆட்சியில், நாட்டிற்கு அவப்பெயரை ஏற்படுத்தியது. பல ஊழல்கள் நடந்தன. இவ்வாறு அவர் பேசினார்.

Advertisement
வாசகர் கருத்து (33)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
S.Baliah Seer - Chennai,இந்தியா
12-மே-201911:36:21 IST Report Abuse
S.Baliah Seer எளியோரைத் தாழ்த்தி வலியோரை வாழ்த்த மத்தியில் வலிமையான ஆட்சி தேவைதான்.ஒரு 6 மாதம் மத்தியில் ஜனாதிபதி ஆட்சி இருந்தால் இந்தியாவில் கொள்ளைப்போகும் சுமார் 5 -லட்சம் கோடி ரூபாய் மக்கள் பணம் தடுக்கப்படும்.
Rate this:
Cancel
venkat - chennai,இந்தியா
12-மே-201911:05:57 IST Report Abuse
venkat எல்லோருக்கும், இலவச மானிய சலுகை வீடு, கழிப்பறை, மின்னிணைப்பு, 8 கோடி ஏழை இல்லத்தரசிகளுக்கு இலவச காஸ் சிலிண்டர், பல கோடி ஏழைகளுக்கு முத்ரா வாங்கி கடனுதவி 50 கோடி இந்திய மக்களுக்கு வருடம் 5 லட்சம் வரை modicare மருத்துவ காப்புறுதி, எல்லா பெரிய கிராமங்களுக்கும் இனைய இணைப்பு, எல்லா மாவட்டங்களையும் திறந்த வெளி கழிப்பிடம் இல்லாமை ஆக்குதல், எல்லா ரயில் பாதைகளையும் மின்மயமாக்குதல், எல்லா பெரு நகரங்களுக்கும் சலுகை கட்டண விமான வசதி, உள்நாட்டு நதி நீர் போக்குவரத்து, நதி நீர் இணைப்பு, இந்தியாவில் மின் தடையின்றி உபரி மின் உற்பத்தி, லஞ்ச தாமத எல்லை டோல் கேட் ஒழிப்பு, வரி குறைப்பு, விலைவாசி கட்டுப்பாடு, மின் ஊர்தி சூரிய ஒளி மின்சாரம் ஊக்குவிப்பு போன்ற பல வளர்ச்சித் திட்டங்களை முன்னெடுத்து நடத்தும் ஊழலற்ற அப்பழுக்கற்ற செயல் வீரர் பி ஜெ பி nda தலைமை பிரதமர் மோடி ஆட்சியில், உலக வல்லரசு அமெரிக்கா பிற்போக்கு தீவிரவாத பாகிஸ்தானை தூக்கி எறிந்து இந்தியாவுடன் நட்பு பாராட்டியது, அமெரிக்கா, ஜப்பான், ஆஸ்திரேலியா, கொரியா, சிங்கப்பூர், வியட்நாமுடன் மோடியின் நட்பை பார்த்து சீனாவும் அடங்கியது. இலங்கையால் தமிழக மீனவர் சிறை பிடிப்பு செய்தி குறைந்தது. பாக்கிஸ்தான் எல்லையில் குண்டு போடுவதும், எல்லை தாண்டிய பயங்கரவாதிகள் கூட்டமும் அடங்கியது. அரபு நாடுகளும் இந்தியாவுடன் நட்பை பலப்படுத்தின. உள்நாட்டு வரி செலுத்துவோர் எண்ணிக்கை 70 சதவிகிதம் அதிகமாகியது. மோடியின் வலிமைக்கு இன்னும் பல சான்றுகள் உள்ளன. .
Rate this:
Cancel
Mohan Sundarrajarao - Dindigul,இந்தியா
12-மே-201909:04:05 IST Report Abuse
Mohan Sundarrajarao valimaiyaana madhdhiya arasu irunthaal, ethechathigaaram thaan nadakkum.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X