விவாதத்திற்கு தயாரா? ராகுல் சவால்

Updated : மே 11, 2019 | Added : மே 11, 2019 | கருத்துகள் (39)
Advertisement
Congress,Rahul,Rahul Gandhi,காங்கிரஸ்,ராகுல்,ராகுல் காந்தி, பா.ஜ., பிரதமர் மோடி

கார்கோன் : பிரதமர் மோடி தன்னுடன் விவாத்தில் கலந்து கொள்ள தயாரா என காங்கிரஸ் தலைவர் ராகுல் சவால் விடுத்தார்.


மத்திய பிரதேச மாநிலம் கார்கோன் என்ற இடத்தில் நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில் அவர் பேசியதாவது: பார்லிமென்ட் அல்லது குஜராத் என எங்குவேண்டுமானாலும், பிரதமர் மோடி என்னுடன் விவாதம் நடத்தட்டும். 15 நிமிடத்தில் அவர் உங்கள் முன் முகத்தை காட்ட முடியாது என நாட்டின் இளைஞர்களுக்கு உறுதியளிக்கிறேன். கடினமாக உழைக்கும் பிரதமர் மோடி, ரபேல் போர் விமான ஊழல் உள்ளிட்ட சில எளிமையான கேள்விகளுக்கு பதிலளிக்க முடியவில்லை. நீங்கள் கடினமாக உழைக்கிறீர்கள். என்னுடன் விவாதம் நடத்துங்கள். ரபேல் குறித்து நான் கேள்வி எழுப்பினால், மோடியால் பதிலளிக்க முடியவில்லை. 21 மணி நேரம் உழைத்தும் ரபேல் குறித்து பதிலளிக்க முடியவில்லை . இவ்வாறு அவர் பேசினார்.பாடம்

தனியார் டிவி ஒன்றுக்கு அளித்த பேட்டியில் ராகுல் கூறியதாவது: பிரதமர் மோடியை பார்த்து , நாட்டை எப்படி ஆட்சி நடத்தக்கூடாது என்பதை தெரிந்து கொண்டே்ன. மக்களின் குரலை கேட்காமல் ஆட்சி செய்தால், நாடு முறையாக செயல்படாது. நரேந்திர மோடி, பா.ஜ., ஆர்.எஸ்.எஸ்., அமைப்பிடமிருந்து பாடம் கற்ற கொண்டேன். பிரதமரின் பணி குறித்து பேசுவதாக மோடி நினைக்கிறார்.


மன்மோகன் சிங், நாட்டின் பொருளாதாரத்தை கவனமுடன் மேம்படுத்தினார். சுகாதாரம் மற்றும் கல்வித்துறையில், அதிக தரம்வாய்ந்த கல்வி நிறுவனங்களை உருவாக்குவதுடன், தற்போது இருக்கும் அமைப்புகளை தரம் உயர்த்த வேண்டும். ஒராண்டில், 22 லட்சம் அரசு வேலைகளை நாங்கள் வழங்குவோம். இதனை வெளிப்படையாக செய்வோம்.


பகுஜன் சமாஜ் தலைவர் மாயாவதி எங்கள் கட்சியை சேர்ந்தவர் அல்ல. அவர் நாட்டிற்காக ஒரு செய்தியை கொடுத்துள்ளார். அவரை மதிக்கிறேன். எங்களுக்கு இடையே அரசியல் மோதல் உள்ளது. காங்கிரஸ் கொள்கைகளுக்காக நாங்கள் போராடுகிறோம். நாட்டிற்கு அவர் அளித்த பங்களிப்புக்கு நான் மரியாதை செலுத்துகிறேன். இவ்வறு அவர் கூறியுள்ளார்.

Advertisement
வாசகர் கருத்து (39)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
SIVA. THIYAGARAJAN - POLUR -TIRUVANNAMALAI,இந்தியா
12-மே-201917:12:14 IST Report Abuse
SIVA. THIYAGARAJAN ஒப்புக்கு கட்டித்தழுவி கண்ண்டித்த மேதாவி ஆச்சே நீர். சவால் விடுவது ஆச்சரியமல்லவே....விளக்கு அணையும் போது உயர்ந்தே அணையும் ஏன் அது இறைவன் செயல் என்போம்.
Rate this:
Share this comment
Cancel
venkat - chennai,இந்தியா
12-மே-201910:54:02 IST Report Abuse
venkat தூய்மை பிரதமர் மோடி பற்றி ரபால் ஒப்பந்தத்தில் பொது மேடைகளில் மீண்டும் மீண்டும் பொய்யுரைத்து பின் உச்ச நீதிமன்றத்தில் மீண்டும் மீண்டும் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்ட பொய்யர் ராகுல் கேட்டதற்கு செயல் வீரர் ஊழலற்ற பிரதமர் மோடி தனியே பதில் சொல்ல ஒன்றுமில்லை. தான் மன்னிப்பு கேட்ட உச்ச நீதிமன்ற 141218 தீர்ப்பை கோயபல்ஸ் ராகுல் யாரேனும் படித்துக் கேட்கவும். உச்சநீதிமன்ற தீர்ப்பு விவரம்: There is no occasion to doubt the decision-making process in the deal. There is a necessity to induct fourth and fifth generation fighter aircraft and the country cannot remain without these .. Not the court's job to deal with the comparative details of of the pricing when the need and quality of aircraft is not in டவுட் No substantial matter to interfere with the issue of procurement, pricing and offset partner. No material to show that the deal is commercial favouritism. No wrongdoing in the ion of Indian offset partners by Dassault Aviation. Questions raised on Rafale deal only after ex-French President François Hollande came out with a statement, which can't be the basis of judicial review. The decision to procure 36 or 126 fighter jets lies with the government, can't compel the government. Nobody questioned procurement of jets when the deal was finalised in September 2016. Personal perception of people on the deal matters little ...when nation's adversaries have inducted fourth and fifth generation fighter jets compared to none by India. சுருக்கமாகச் சொன்னால் உச்சநீதிமன்றம் ரபால் கொள்முதல் விஷயத்தில் பி ஜெ பி nda அரசின் முடிவுகள் யாவும் சந்தேகத்திற்கு அப்பாற்பட்டவை, குற்ற உள்நோக்கு அற்றவை, என்று தெளிவாக தீர்ப்பு சொல்லியுள்ளது ராகுலுக்கு பொய்ய தவிர வேறு பேச தெரியாது என்றே தோன்றுகிறது. ஒரு தமிழக ஆங்கில பத்திரிக்கை போபார்ஸ் ஊழலில் இவர்களது இத்தாலி தோழர் கமிஷன் பெற்றதை சான்றுகளோடு பிரசுரித்த அதே சமயத்தில் , தரகர் இல்லை, கமிஷன் இல்லை என்று பொய் கூறியவர் பரம்பரையில் வந்தவர் ஆயிற்றே எல்லோருக்கும், இலவச மானிய சலுகை வீடு, கழிப்பறை, மின்னிணைப்பு, 8 கோடி ஏழை இல்லத்தரசிகளுக்கு இலவச காஸ் சிலிண்டர், பல கோடி ஏழைகளுக்கு முத்ரா வாங்கி கடனுதவி 50 கோடி இந்திய மக்களுக்கு வருடம் 5 லட்சம் வரை modicare மருத்துவ காப்புறுதி, எல்லா பெரிய கிராமங்களுக்கும் இனைய இணைப்பு, எல்லா மாவட்டங்களையும் திறந்த வெளி கழிப்பிடம் இல்லாமை ஆக்குதல், எல்லா ரயில் பாதைகளையும் மின்மயமாக்குதல், எல்லா பெரு நகரங்களுக்கும் சலுகை கட்டண விமான வசதி, உள்நாட்டு நதி நீர் போக்குவரத்து, நதி நீர் இணைப்பு, இந்தியாவில் மின் தடையின்றி அப்படி மின் உற்பத்தி, லஞ்ச தாமத எல்லை டோல் கேட் ஒழிப்பு, வரி குறைப்பு, விலைவாசி கட்டுப்பாடு, மின் ஊர்தி சூரிய ஒளி மின்சாரம் ஊக்குவிப்பு போன்ற பல வளர்ச்சித் திட்டங்களை முன்னெடுத்து நடத்தும் ஊழலற்ற அப்பழுக்கற்ற செயல் வீரர் பி ஜெ பி nda தலைமை பிரதமர் மோடியைப் பாராட்டாவிட்டாலும், கோயபல்ஸ் வேலை காட்டாமல் ராகுல் இருக்கலாம்.
Rate this:
Share this comment
Cancel
swami - houston,யூ.எஸ்.ஏ
12-மே-201910:41:53 IST Report Abuse
swami intha biscothu papphuvhukhu suiya bhuthi yhum kidiyathu sol buthiyhum kidiyathu .intha manghaa madiyanukhu eatha jaalrha kuja sombhu thunhu cheethu sudali thaathaa.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X