விவாதத்திற்கு தயாரா? ராகுல் சவால்| : Rahul Gandhi mocks 'workaholic' PM, dares him to debate | Dinamalar

விவாதத்திற்கு தயாரா? ராகுல் சவால்

Updated : மே 11, 2019 | Added : மே 11, 2019 | கருத்துகள் (39)
Share
Congress,Rahul,Rahul Gandhi,காங்கிரஸ்,ராகுல்,ராகுல் காந்தி, பா.ஜ., பிரதமர் மோடி

கார்கோன் : பிரதமர் மோடி தன்னுடன் விவாத்தில் கலந்து கொள்ள தயாரா என காங்கிரஸ் தலைவர் ராகுல் சவால் விடுத்தார்.


latest tamil news




மத்திய பிரதேச மாநிலம் கார்கோன் என்ற இடத்தில் நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில் அவர் பேசியதாவது: பார்லிமென்ட் அல்லது குஜராத் என எங்குவேண்டுமானாலும், பிரதமர் மோடி என்னுடன் விவாதம் நடத்தட்டும். 15 நிமிடத்தில் அவர் உங்கள் முன் முகத்தை காட்ட முடியாது என நாட்டின் இளைஞர்களுக்கு உறுதியளிக்கிறேன். கடினமாக உழைக்கும் பிரதமர் மோடி, ரபேல் போர் விமான ஊழல் உள்ளிட்ட சில எளிமையான கேள்விகளுக்கு பதிலளிக்க முடியவில்லை. நீங்கள் கடினமாக உழைக்கிறீர்கள். என்னுடன் விவாதம் நடத்துங்கள். ரபேல் குறித்து நான் கேள்வி எழுப்பினால், மோடியால் பதிலளிக்க முடியவில்லை. 21 மணி நேரம் உழைத்தும் ரபேல் குறித்து பதிலளிக்க முடியவில்லை . இவ்வாறு அவர் பேசினார்.


latest tamil news





பாடம்

தனியார் டிவி ஒன்றுக்கு அளித்த பேட்டியில் ராகுல் கூறியதாவது: பிரதமர் மோடியை பார்த்து , நாட்டை எப்படி ஆட்சி நடத்தக்கூடாது என்பதை தெரிந்து கொண்டே்ன. மக்களின் குரலை கேட்காமல் ஆட்சி செய்தால், நாடு முறையாக செயல்படாது. நரேந்திர மோடி, பா.ஜ., ஆர்.எஸ்.எஸ்., அமைப்பிடமிருந்து பாடம் கற்ற கொண்டேன். பிரதமரின் பணி குறித்து பேசுவதாக மோடி நினைக்கிறார்.


latest tamil news




மன்மோகன் சிங், நாட்டின் பொருளாதாரத்தை கவனமுடன் மேம்படுத்தினார். சுகாதாரம் மற்றும் கல்வித்துறையில், அதிக தரம்வாய்ந்த கல்வி நிறுவனங்களை உருவாக்குவதுடன், தற்போது இருக்கும் அமைப்புகளை தரம் உயர்த்த வேண்டும். ஒராண்டில், 22 லட்சம் அரசு வேலைகளை நாங்கள் வழங்குவோம். இதனை வெளிப்படையாக செய்வோம்.


latest tamil news




பகுஜன் சமாஜ் தலைவர் மாயாவதி எங்கள் கட்சியை சேர்ந்தவர் அல்ல. அவர் நாட்டிற்காக ஒரு செய்தியை கொடுத்துள்ளார். அவரை மதிக்கிறேன். எங்களுக்கு இடையே அரசியல் மோதல் உள்ளது. காங்கிரஸ் கொள்கைகளுக்காக நாங்கள் போராடுகிறோம். நாட்டிற்கு அவர் அளித்த பங்களிப்புக்கு நான் மரியாதை செலுத்துகிறேன். இவ்வறு அவர் கூறியுள்ளார்.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X