பொது செய்தி

இந்தியா

ஒரே வீட்டில் 82 உறுப்பினர்கள்: 66 பேருக்கு ஓட்டுரிமை உள்ளது

Updated : மே 11, 2019 | Added : மே 11, 2019 | கருத்துகள் (17)
Advertisement
ஓட்டுரிமை, உ.பி.,

பிரயாக்ராஜ்: உத்தர பிரதேசத்தில், ஒரே வீட்டில், 82 பேர் ஒற்றுமையாக வசிக்கின்றனர். இவர்களில், 66 பேருக்கு ஓட்டுரிமை உள்ளது.

உத்தர பிரதேசத்தில், முதல்வர், யோகி ஆதித்யநாத் தலைமையில், பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்கு நாளை(மே11), ஆறாம் கட்ட தேர்தல் நடக்கிறது.


இங்குள்ள அலகாபாத் மாவட்டம், பக்ரைசியா கிராமத்தைச் சேர்ந்தவர், ராம் நரேஷ் புர்டியா, 98. விவசாயியான இவரது வீட்டில், மகன்கள், மகள்கள், பேரன், பேத்திகள், கொள்ளுப் பேரன், பேத்திகள் என, 82 பேர், ஒற்றுமையாக வசிக்கின்றனர். இவர்களில், 66 பேர், ஓட்டளிப்பதற்கான குறைந்தபட்ச வயதான, 18ஐ கடந்தவர்கள்.குடும்ப உறுப்பினர்களுக்கு, விவசாயம் தான் பிரதான தொழிலாக உள்ளது. சிலர், தனியார் நிறுவனங்களில் பணியாற்றுகின்றனர்.

தன் குடும்பம் பற்றி, ராம் நரேஷ் கூறியதாவது:எங்கள் வீட்டில், யாருக்கும் தனியாக போக வேண்டும் என்ற எண்ணம் இல்லை. வீட்டில் ஒரே ஒரு சமையல் அறை தான் உள்ளது. தினமும், 20 கிலோ காய்கறிகள், 15 கிலோ அரிசி, 10 கிலோ கோதுமை மாவு பயன்படுத்தி சமைக்கிறோம்.சமையல் வேலைகளை, வீட்டில் உள்ள பெண்கள் தான் பார்த்துக் கொள்கின்றனர்.எங்கள் குடும்பத்தை முன்னுதாரணமாக காட்டி, நம் நாடும், இப்படி தான் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்பதை வலியுறுத்துவதில், நான் பெருமையடைகிறேன்.எங்கள் வீட்டில், முதல் முறையாக, என் கொள்ளு பேரக்குழந்தைகள் எட்டு பேர், இம்முறை ஓட்டளிக்கின்றனர்.நாங்கள் எப்போதும், ஒன்றாக தான் ஓட்டளிக்க செல்வோம். அதுவும், மதிய உணவுக்கு பின் தான் செல்வோம். நாங்கள் ஓட்டளிக்க வரும்போது, தேர்தல் அதிகாரிகளே, எங்களை வரவேற்பர்.

நாங்கள், குடிசை வீட்டில் தான் வசிக்கிறோம். சிறந்த வீடு கட்ட ஆசைப்பட்டாலும், வீட்டுக்கு மேல் உயர் அழுத்த மின் கம்பிகள் செல்வதால், கட்ட முடியவில்லை.ஒவ்வொரு தேர்தலின் போதும், இந்த மின்கம்பிகளை அகற்ற, நாங்கள் கோரிக்கை விடுக்கிறோம். அனைத்து வேட்பாளர்களும், செய்கிறேன் என உறுதியளிப்பதுடன் சரி; பின், மறந்துவிடுகின்றனர்.இம்முறையும் கோரிக்கை வைத்துள்ளோம். நிறைவேற்றாவிட்டால், அதன் பின், எந்த தேர்தலிலும் ஓட்டு போட மாட்டோம். இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement
வாசகர் கருத்து (17)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
srinivasan - stockholm,சுவீடன்
16-மே-201915:07:46 IST Report Abuse
srinivasan 82 x 5000 = ஜன நாயகத்தின் ஆணி வேர்.
Rate this:
Share this comment
Cancel
rm -  ( Posted via: Dinamalar Android App )
13-மே-201909:30:29 IST Report Abuse
rm If they are in TN , for every vote Rs. 2000-5000 will be offered. Even more for 66 votes together.If they live in RK nagar chennai they could have got 66 cookers .pavam ! they are in UP.
Rate this:
Share this comment
Cancel
Ramesh M - COIMBATORE,இந்தியா
12-மே-201912:37:43 IST Report Abuse
Ramesh M நல்ல குடும்பம். அந்த குடும்ப உறுப்பினர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள். திருஷ்டி சுத்தி போடுங்க. எல்லோர் மனதிலும் நாம் அப்படி இல்லையே என தோன்றும்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X