பொது செய்தி

தமிழ்நாடு

அன்னதான சேவையில் அசராத பயணம்

Added : மே 12, 2019 | கருத்துகள் (5)
Advertisement
அன்னதான சேவையில்  அசராத பயணம்

'தானத்தில் சிறந்தது, அன்னதானம்' என்பர்; அதிலும், வாரத்துக்கு, 100 பேருக்கு அறுசுவை உணவுடன் அன்னதானம் வழங்குவதும், அதில், 100வது வாரத்தை எட்டி பிடித்திருப்பதும், அசாத்திய சாதனை தானே.

இன்டர்நேஷனல் ஒய்ஸ்மென் சங்கம், கோவை தான், இச்சாதனைக்கு சொந்தம். இச்சங்கத்தினர், 'வாரம் ஒரு முறையேனும் ஒரு நேர உணவு' என்ற கொள்கை அடிப்படையில், கடந்த, 2 ஆண்டாக ஏழை, எளியோருக்கு ஒவ்வொரு வாரமும் ஒரு நேர உணவை அன்னதானமாக வழங்கி வருகின்றனர். இதன், 100வது வாரம், திருப்பூர் ஏ.கே.ஆர்., குரூப் நிறுவனத்தின் பி.அம்மாசையப்ப உடையார் அறக்கட்டளையுடன் இணைந்து, 1,000 பேருக்கு இலவச மதிய உணவு வழங்கும் விழாவாக, திருமுருகன்பூண்டி, அணைப்புதுார், ஏ.கே.ஆர் பெட்ரோல் பங்க் வளாகத்தில் நடந்தது.

விழாவுக்கு ஏ.கே.ஆர்., அகாடமி பள்ளி தாளாளரும், பி.அம்மாசையப்ப உடையார் அறக்கட்டளை செயலாளருமான லட்சுமிநாராயணன் தலைமை வகித்தார். சர்வதேச ஒய்ஸ்மெனஸ் சங்க மேற்கு மாவட்ட ஆளுநர் வெங்கடேசன், நிகழ்ச்சியை தொடக்கி வைத்து பேசியதாவது;சர்வதேச ஒய்ஸ்மென் சங்கம், கோவை சார்பில், கோவை அரசு தலைமை மருத்துவமனை, ரயில்வே ஸ்டேஷன் மற்றும் மக்கள் கூடும் இடங்களுக்கு சென்று உணவு வழங்கி வருகிறோம். கேரள வெள்ளத்தின் போது, 11 லட்சம் ரூபாய் மதிப்பில் நலத்திட்ட பணி மேற்கொண்டோம். கஜா புயலின் போது, நாகப்பட்டினம், வேளாங்கண்ணி அருகே உள்ள கத்திரிப்புலம் கிராமத்தில், பாதிக்கப்பட்ட மக்களுக்கு, 26 லட்சம் ரூபாய் மதிப்பில், 10 வீடுகள் கட்டிக் கொடுத்துள்ளோம். கடந்தாண்டில், இரண்டு ஆம்புலன்ஸ் மற்றும் ஈமக்கிரியை செய்ய ஒரு டெம்போ வேனை சேவை நிறுவனங்களுக்கு வழங்கியுள்ளோம்.இவ்வாறு, அவர் பேசினார்.

நிகழ்ச்சிக்கு, பி.அம்மாசையப்ப உடையார் அறக்கட்டளை தலைவர் குப்புசாமி, ஒய்ஸ்மென் சங்கம், கோவை தலைவர் வெங்கடாச்சலம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். செல்வராஜ், அனைவரையும் வரவேற்றார். முன்னாள் ஆளுநர் சரவணன், துணை மண்டல இயக்குனர் பாலமுருகன் ஆகியோர் வாழ்த்தி பேசினர். முடிவில், திட்ட இயக்குனர் செல்வகுமார் நன்றி கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
T M S GOVINDARAJAN - Madurai,இந்தியா
12-மே-201916:19:49 IST Report Abuse
T M S GOVINDARAJAN மதுரைக்கு அருகிலுள்ள திருப்புவனம் என்ற ஊரில் ஸ்ரீ ஆதி கோரக்க நாதர் திருக்கோயிலில் அமாவாசை பவுர்ணமி தினங்களில் அன்னதானம் நடைபெறுகிறது
Rate this:
Share this comment
Cancel
Bhaskaran - Chennai,இந்தியா
12-மே-201912:48:28 IST Report Abuse
Bhaskaran கோவில்களில் அன்னதானம் செய்யாமல் மருத்துவமனை பேரூந்துநிலையம் ரயில்நிலையம் போன்ற இடங்களில் தகுதியுள்ளவருக்கு செய்வது பாராட்டத்தக்கது கோவிலில் செய்தால் சோம்பேறிகள் அதிகமாகிறார்கள் மயிலை சாய்பாபா ஆலயத்தில் தினமும் நடக்கும் அன்னதானத்தில் வழக்கமாக சாப்பிட்டு வாசலில் ஐம்பதுபேர் பிச்சையெடுக்கின்றனர்
Rate this:
Share this comment
சுந்தரம் - Kuwait,குவைத்
12-மே-201913:54:25 IST Report Abuse
சுந்தரம் மாறுபடுவதற்கு மன்னிக்கவும். கோவை ரயில் நிலையம் அருகே நிரந்தர பிச்சைக்காரர்கள் நடை பாதையில் அமர்ந்திருக்கிறார்கள். இவர்களுக்கு சில தன்னார்வலர்கள் அன்றாடம் உணவு வழங்கிவிடுகிறார்கள்....
Rate this:
Share this comment
கதிரழகன், SSLC - சிவகங்கை, TN,இந்தியா
13-மே-201907:10:27 IST Report Abuse
கதிரழகன், SSLCதகுதி உள்ளவருக்கு எங்க செஞ்சா என்ன? உனக்கேன் கோவில்ல செஞ்சா வலிக்குது? தசமபாக வரிவசூல் கும்பலோ? நம்ம சாமி பேரையே வெச்சுக்கிட்டு நம்ம சாமிக்கே துரோகம் செய்யறது அவனுகதான்...
Rate this:
Share this comment
Cancel
சுந்தரம் - Kuwait,குவைத்
12-மே-201910:47:50 IST Report Abuse
சுந்தரம் தினமலர் கோவை வாசகர்களின் தகவலுக்கு: கோவை வேடப்பட்டியில் ( அஜ்ஜனுர் சாலை) உள்ள வேத மாதா காயத்ரி ஆலயத்தில் ஒவ்வொரு மாதமும் இரண்டாம் ஞாயிற்றுக்கிழமை உலக நன்மைக்காக அனைத்து ஹோமங்களும் நடைபெறுகிறது. அன்று அன்னதானமும் உண்டு. ( இந்த நிகழ்வு கடந்த பதினைந்து ஆண்டுகளாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது)
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X