வாயை மூடி பேசவும்| Dinamalar

வாயை மூடி பேசவும்

Updated : மே 12, 2019 | Added : மே 12, 2019 | கருத்துகள் (28)
Share

லோக்சபா தேர்தல் பிரசாரத்தில், வாய்க்கு வந்தபடி பேசி, வகையாக மாட்டிக் கொள்கின்றனர், வேட்பாளர்கள் மற்றும் தலைவர்கள். இதனால், யார் என்ன பேசுகின்றனர் என, அனைத்து கட்சிகளும், ஆட்களை வைத்து கண்காணிக்கின்றன.



latest tamil news



எந்த வேட்பாளரோ அல்லது கட்சித் தலைவரோ, எடக்கு மடக்காக பேசிவிட்டால், அதை வீடியோவாக எடுத்து, சமூக வலைதளங்களில் பரப்பி விடுகிறது எதிர் தரப்பு.இப்படித் தான், போபால் தொகுதியின், பா.ஜ., வேட்பாளரும், பெண் சாமியாருமான பிரக்யா தாக்குர், கண்டபடி உளறி மாட்டிக் கொண்டார். இவர் மீது, குண்டு வைத்தது சம்பந்தமான வழக்கு ஒன்று, நிலுவையில் உள்ளது. மும்பையில், 2008ல், பாகிஸ்தான் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில், ஹேமந்த் கர்கரே என்ற போலீஸ் அதிகாரி கொல்லப்பட்டார்.


latest tamil news




'குண்டு வெடிப்பு வழக்கில், என்னை அத்துமீறி துன்புறுத்தினார் இந்த அதிகாரி; என் சாபத்தால் தான், இவருக்கு இந்த கதி நேர்ந்தது' என, பிரசாரத்தில் சொல்லி விட்டார். இதை, காங்கிரஸ் உட்பட, அனைத்து எதிர்க்கட்சிகளும் பெரும் பிரச்னையாக்கி விட்டன. இதை சமாளிக்க, பா.ஜ., திண்டாடி விட்டது.இதே போல, பஞ்சாப் மாநிலம், குருதாஸ்பூரில் போட்டியிடும், பா.ஜ., வேட்பாளரும், ஹிந்தி நடிகருமான சன்னி தியோலிடம், பத்திரிகையாளர்கள், பாலகோட்டில் நடத்தப்பட்ட துல்லிய தாக்குதல் பற்றி கேட்டனர்.

'பாலகோடா, அது என்ன... எனக்கு தெரியாதே' என, சன்னி தியோல் பதில் சொன்னார்.அரசியலுக்கு புதியவரான இவர், செய்திகளை படிப்பதே கிடையாதாம். பாலகோட் தாக்குதலை நடத்தியது மோடி அரசு; ஆனால், பா.ஜ., வேட்பாளருக்கு அது கூட தெரியவில்லையே என, எதிர்க்கட்சிகள் கிண்டலடித்தன.இந்த சம்பவங்களுக்கு பின், பா.ஜ., தலைமை, தன் வேட்பாளர்களுக்கு ஒரு முக்கிய உத்தரவிட்டது. 'பிரசாரத்தின் போது, வெறுமனே கை கூப்புங்கள், கைகளை ஆட்டுங்கள், நமஸ்தே சொல்லுங்கள். இதற்கு மேல் யாரும் வாயைதிறக்க வேண்டாம்' என்றது. இதன் பிறகு சன்னி தியோலும், பிரக்யாவும் வாயை மூடிவிட்டனர்; கை மட்டுமேகூப்புகின்றனர்.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X