2வயது குழந்தைக்கு உதவிய பிரியங்கா

Updated : மே 12, 2019 | Added : மே 12, 2019 | கருத்துகள் (79)
Share
Advertisement
புதுடில்லி : உ.பி.,யை சேர்ந்த 2 வயது ஏழைக்குழந்தைக்கு மூளையில் கட்டி (பிரைய்ன் டியூமர்) இருந்துள்ளது. அவரை தன் விமானத்தியே அழைத்து வந்து சிகிச்சைக்காக எய்ம்ஸ் மருத்துவமனையில் சேர்த்து உதவினார், பிரியங்கா.சிறுமி அன்சுபால் :உ.பி., யில் ரேபரேலி சோனியா காந்தியின் தொகுதியாகும். அங்கு பிரசாரத்தில் இருந்த பிரியங்கா, அலகாபாத்தில் உள்ள கமலா நேரு மருத்துவமனையில்

புதுடில்லி : உ.பி.,யை சேர்ந்த 2 வயது ஏழைக்குழந்தைக்கு மூளையில் கட்டி (பிரைய்ன் டியூமர்) இருந்துள்ளது. அவரை தன் விமானத்தியே அழைத்து வந்து சிகிச்சைக்காக எய்ம்ஸ் மருத்துவமனையில் சேர்த்து உதவினார், பிரியங்கா.



latest tamil news




சிறுமி அன்சுபால் :


உ.பி., யில் ரேபரேலி சோனியா காந்தியின் தொகுதியாகும். அங்கு பிரசாரத்தில் இருந்த பிரியங்கா, அலகாபாத்தில் உள்ள கமலா நேரு மருத்துவமனையில் மூளைக்கட்டி பிரச்னைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த, அன்சுபால் என்ற 2 வயது பெண் குழந்தையை தனது சிறிய ரக விமானத்தில், எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அழைத்து வந்தார்.


latest tamil news




கமலா நேரு மருத்துவமனை ;


கமலா நேரு மருத்துவமனையில் டிரஸ்டியாக பிரியங்கா, ராகுல், சோனியா உள்ளனர். இது 1941ல், நேருவால், தனது மனைவையின் பெயரில் துவங்கப்பட்ட மருத்துவமனையாகும்.


latest tamil news



சிறுமி அன்சுபால், அலகாபாத் தொகுதியின் பிசாரியா கிராமத்தின் ரதிபட்டேல் என்பவரின் மகள் ஆவார். இவர்கள் மிகவும் ஏழைக் குடும்பத்தை சேர்ந்தவர்கள். அவர்கள் ரேபரேலியிலிருந்து அலகாபாத் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சேர்ந்தனர். ஆனால், கமலா நேரு மருத்துவமனையில் அன்சுபாலுக்கான சிகிச்சையில் முன்னேற்றமில்லை.


latest tamil news




டில்லி எய்ம்ஸ் :


காங்கிரஸ் நிர்வாகிகளிடம் இதனை விசாரித்து அறிந்த பிரியங்கா, குழந்தையை உடனடியாக புதுடில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சேர்க்க ஏற்பாடு செய்தார். அலகாபாத் காங்., வேட்பாளர் யோகேஷ் சுக்லா இந்த தகவல்களை நிருபர்களிடம் தெரிவித்தார்.


மனிதநேயம் :


மேலும், குழந்தையுடன் விமானத்தில் முன்னாள் கிரிக்கெட் வீரர் முகமது அசாரூதின், குஜராத் இளம் தலைவர் ஹர்திக் பட்டேல், அன்சுபாலின் தாயார் நீத்தா தேவி, பாட்டி ராஜ்பதி தேவி ஆகியோர் பிரியங்காவுடன் நேற்று நள்ளிரவில் புதுடில்லி வந்தனர். உடனடியாக எய்ம்ஸ் மருத்துவமனையில் சிறுமி சேர்க்கப்பட்டு, அங்கு தயாராக இருந்த டாக்டர்கள் குழந்தைக்கு தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

பிரியங்காவின் மனிதநேயம், இப்போது டில்லி அரசியல் தலைவர்களிடையே பரபரப்பான பேசும்பொருளாக மாறியிருக்கிறது.

Advertisement




வாசகர் கருத்து (79)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
K. Shanmugasundararaj - Tirunelveli,இந்தியா
13-மே-201908:15:08 IST Report Abuse
K.   Shanmugasundararaj மோடியின் ஆயுஷ்மான் பாரத் என்னாச்சு . பேப்பரில் சீனி என்று எழுதிய கதையாக தான் மோடியின் ஆயுஷ்மான் பாரத் என்ற சுகாதார திட்டம் உள்ளது என்பது உள்ளங்கை நெல்லிக்கனியாக உள்ளது.
Rate this:
Cancel
Natarajan Ramanathan - தேவகோட்டை,இந்தியா
13-மே-201907:54:21 IST Report Abuse
Natarajan Ramanathan கண்ட நாயை எல்லாம் மேன்மக்கள் என்று குறிப்பிடும் அளவுக்கு நாம் கீழ் மக்களாக ஆகிவிட்டோம்.
Rate this:
Cancel
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
13-மே-201907:36:25 IST Report Abuse
Srinivasan Kannaiya இந்த செயகை மக்கள் மத்தயில் அவர் மதிப்புகூடலாம்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X