பொது செய்தி

இந்தியா

திருச்சூரில் பூரம் விழா கோலாகலம்

Updated : மே 12, 2019 | Added : மே 12, 2019 | கருத்துகள் (6)
Share
Advertisement
திருச்சூர் : கேரள மாநிலம் திருச்சூரில் புகழ்பெற்ற பூரம் திருவிழா துவங்கி உள்ளது. அதற்கு முன்னோட்டமாக அங்கு வானவேடிக்கை நிகழ்ச்சிக்கான ஒத்திகை நடைபெற்றது.கேரள மாநிலம் திருச்சூரில் இன்று ( 12 ம் தேதி) பூரம் விழா நடைபெறுகிறது. இவ்விழாவில், கடந்தாண்டு பிப்ரவரி மாதத்தில் ராமச்சந்திரன் யானைக்கு மதம் பிடித்து, இரண்டு பேரை மிதித்துக் கொன்றதால் இந்த ஆண்டு பூரம்

திருச்சூர் : கேரள மாநிலம் திருச்சூரில் புகழ்பெற்ற பூரம் திருவிழா துவங்கி உள்ளது. அதற்கு முன்னோட்டமாக அங்கு வானவேடிக்கை நிகழ்ச்சிக்கான ஒத்திகை நடைபெற்றது.



latest tamil news



கேரள மாநிலம் திருச்சூரில் இன்று ( 12 ம் தேதி) பூரம் விழா நடைபெறுகிறது. இவ்விழாவில், கடந்தாண்டு பிப்ரவரி மாதத்தில் ராமச்சந்திரன் யானைக்கு மதம் பிடித்து, இரண்டு பேரை மிதித்துக் கொன்றதால் இந்த ஆண்டு பூரம் திருவிழாவில் ராமச்சந்திரன் யானை கலந்துக் கொள்ள அரசு நிர்வாகம் தடை விதித்தது.


latest tamil news



இதற்கு எதிர்ப்பு தெரிவித்து யானை உரிமையாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதையடுத்து, கேரள தேவசம் போர்டு அமைச்சர் கடகம்பள்ளி சுரேந்திரன், அரசுத் தரப்பில் அவர்களுடன் பேச்சு நடத்தினார். அதன் முடிவில், யானை ராமச்சந்திரன் செல்லும் பாதையில் பத்து மீட்டர் தூரத்திற்கு தடுப்புகள் அமைக்கப்பட்டு, பூரம் விழாவின் தொடக்கத்தில், ஒரு மணி நேரம் மட்டும் யானைகளின் அலங்கார அணிவகுப்பை ராமச்சந்திரன் யானை தலைமை தாங்கி செல்லும் என்று தெரிவிக்கப்பட்டது.


latest tamil news



இதனால், யானை உரிமையாளர்கள் சமாதானம் அடைந்து, யானைகளை பங்கேற்க செய்ய சம்மதம் தெரிவித்தனர். எனவே, வழக்கமான உற்சாகத்துடன் பூரம் திருவிழா தொடங்கியுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
sankar - new jersy,யூ.எஸ்.ஏ
13-மே-201906:47:08 IST Report Abuse
sankar ஆடி பூரத்தில் பெண் யணனியும் அனுமதிக்க வேண்டும் என்று பினாரயீ சார்பில் ஒரு ஸ்கேஸ் போடுவார்களா ??
Rate this:
Cancel
12-மே-201920:25:20 IST Report Abuse
ஆப்பு யானகளுக்குத்தான் திண்டாட்டம்...வேதனை....எல்லாம்
Rate this:
Cancel
Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா
12-மே-201918:15:21 IST Report Abuse
Pugazh V ஏன் எதிர்மறை யான இரண்டு கருத்து கள்? அதுவும் பாஜக வாசகர்களிடமிருந்து? இவர்களின் எதாச்சும் சதித்திட்டம் போட்டுவிட்டதா?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X