பயங்கரவாதிகளை சுட தேர்தல் கமிஷனில் உத்தரவு வாங்க வேண்டுமா?

Added : மே 12, 2019 | கருத்துகள் (58)
Advertisement

குஷிநகர்: பயங்கரவாதிகளை சுட தேர்தல் கமிஷனில் உத்தரவு வாங்க வேண்டுமா ? என எதிர்கட்சியினர் மீது பிரதமர் மோடி காட்டமாக தாக்கி பேசினார்.







ஊழலில் அகிலேஷ், மாயாவதி

உ பி., மாநிலம் குஷிநகர் பகுதியில் பங்கேற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் பிரதமர் மோடி மேலும் பேசியதாவது: தற்போது மக்கள் நேர்மையான, வலுவான ஆட்சியை தேர்வு செய்ய முடிவு செய்துள்ளனர். தேர்தலுக்கு பின் எதிர்கட்சியினர் பலம் இழப்பார்கள். எதிர்கட்சியினர் நிச்சயம் தோல்வியை சந்திப்பர். நான் குஜராத்தில் 2 முறை முதல்வராக இருந்தேன். என்மீது எவ்வித ஊழல் புகாரும் இல்லை. ஆனால் இங்கு முதல்வராக இருந்த அகிலேஷ், மாயாவதி ஆகியோர் மீது ஊழல் புகார் உள்ளது. ராஜஸ்தான் பாலியல் பலாத்கார வழக்கில் இருவரும் முதலைக்கண்ணீர் வடிக்கின்றனர்.






இன்று காலையில் காஷ்மீர் சோபியான் மாவட்டத்தில் பயங்கரவாதிகள் மீது நமது ராணுவத்தினர் துப்பாக்கிச்சூடு நடத்தி 2 பேரை கொன்றனர். ஆனால் எதிர்கட்சியினர் தேர்தல் நேரத்தில் தாக்குதல் நடத்துவதை கேள்வி எழுப்புகின்றனர். பயங்கரவாதிகளை சுடுவதற்கு முன்னர் தேர்தல் கமிஷனில் அனுமதி வாங்க வேண்டுமா? எதிர்கட்சியினரின் நாடகம் வெளிப்படையாக தெரிகிறது. இவ்வாறு மோடி பேசினார்.

Advertisement




வாசகர் கருத்து (58)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
13-மே-201900:56:05 IST Report Abuse
ருத்ரா நாட்டின் பாதுகாப்பை கூட தேர்தல் விளம்பரம் என்று நினைக்கும் சில கட்சிகளின் கூவல் பற்றி கவலை படாமல், அனுமதிக்கு காத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை. PM G.
Rate this:
Share this comment
தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
13-மே-201911:21:27 IST Report Abuse
தமிழ்வேல் இவரு எந்த ஆணியும் பிடுங்கவேண்டாம் . எப்போதும்போல ராணுவம் பார்த்துக்கும்....
Rate this:
Share this comment
Cancel
Anandan - chennai,இந்தியா
13-மே-201900:43:07 IST Report Abuse
Anandan ராணுவத்திற்க்கே இவர்தான் அறிவுரை கூறியது போல பொய்யுரைக்கிறார் பாவம் மக்கள்.
Rate this:
Share this comment
Cancel
ஜெய்ஹிந்த்புரம் - மதுரை,இந்தியா
13-மே-201900:42:39 IST Report Abuse
ஜெய்ஹிந்த்புரம் தீவிரவாதிகளை ராணுவ வீரர்கள் சுட்டால், அதை உமது சாகசமாக வாயிலே வடை சுடவேண்டாம் என்று தான் சொல்கிறார்கள்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X