பொது செய்தி

இந்தியா

விவிபேட் இயந்திரங்கள்: ஆஸி., தூதர் வியப்பு

Updated : மே 12, 2019 | Added : மே 12, 2019 | கருத்துகள் (17)
Share
Advertisement
புதுடில்லி: மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் தன்னை கவர்ந்துவிட்டதாகவும், விவிபேட் இயந்திரங்கள் பயன்படுத்தவது, நல்ல முன்னேற்றம் என இந்தியாவிற்கான ஆஸி., தூதர் ஹரிந்தர் சித்து கூறியுள்ளார்.இந்தியாவில் லோக்சபா தேர்தல்கள் மொத்தம் 7 கட்டங்களாக நடக்கின்றன. இதுவரை 5 கட்டத் தேர்தல்கள் முடிந்துள்ளன. இன்று (மே.12) தலைநகர் டில்லியின் 7 தொகுதிகள் உள்ளிட்ட, உ.பி., பஞ்சாப், மே.வங்கம்
விவிபேட், ஆஸி., தூதர் வியப்பு

புதுடில்லி: மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் தன்னை கவர்ந்துவிட்டதாகவும், விவிபேட் இயந்திரங்கள் பயன்படுத்தவது, நல்ல முன்னேற்றம் என இந்தியாவிற்கான ஆஸி., தூதர் ஹரிந்தர் சித்து கூறியுள்ளார்.

இந்தியாவில் லோக்சபா தேர்தல்கள் மொத்தம் 7 கட்டங்களாக நடக்கின்றன. இதுவரை 5 கட்டத் தேர்தல்கள் முடிந்துள்ளன. இன்று (மே.12) தலைநகர் டில்லியின் 7 தொகுதிகள் உள்ளிட்ட, உ.பி., பஞ்சாப், மே.வங்கம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் மொத்தம் 59 தொகுதிகளில் ஓட்டுப்பதிவு நடந்தது.


latest tamil news




டில்லியில் உள்ள ஓட்டுச்சாவடி ஒன்றில், ஓட்டுப்பதிவை பார்வையிட்ட இந்தியாவிற்கான ஆஸ்திரேலிய தூதர் ஹரிந்தர் சித்து கூறியதாவது: உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாட்டில், தேர்தலை பார்ப்பது, சிறந்த அனுபவத்தை தருகிறது. எப்படி, இந்தியாவில் நிறைய பேர் ஓட்டளிக்கின்றனர்? தேர்தல் ஆணையம் எடுத்த சிறந்த நடவடிக்கைகளே இதற்கு பதில். இது சிறந்த திட்டம். சிறப்பாக திட்டமிடப்பட்டது.மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரம் என்னை கவர்ந்துள்ளது. ஆஸ்திரேலியாவில் இது இல்லை. ஆஸ்திரேலியாவில் ஓட்டுச்சீட்டுகள் தான் பயன்படுத்தப்படுகின்றன. ஓட்டுப்பதிவை உறுதிப்படுத்தும் விவிபேட் இயந்திரங்கள் பயன்படுத்துவது நல்ல முன்னேற்றம்தான். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (17)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
sridhar - Chennai,இந்தியா
13-மே-201907:41:04 IST Report Abuse
sridhar நாராயண முத்து, ஜைஹிந்த்புரம் போன்ற உலக மேதைகளை பெற்ற பாரதம் பெருமை அடைகிறது. மெத்த படித்த Aussie தூதருக்கு தெரியாதது கூட உங்களுக்கு தெரிகிறதே. நீங்கள் உங்கள் அறிவை வெளிப்படுத்த சிறந்த இடம் அண்டார்டிகா தான் .
Rate this:
Cancel
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
13-மே-201907:32:43 IST Report Abuse
Srinivasan Kannaiya இது கொஞ்சம் அதிகமாகபடலே
Rate this:
Cancel
Sanny - sydney,ஆஸ்திரேலியா
13-மே-201907:06:07 IST Report Abuse
Sanny ஆஸ்திரேலியாவில் evm மூலம் ஓட்டுப்போட தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியது, ஆனால் அதில் தில்லு முள்ளு செய்யலாம் என்று நிரூபித்து ஆஸ்திரேலியா செனட் சபையே அங்கீகாரம் வழங்கவில்லை. வரும் 18 ஆம் திகதி பொது தேர்தல். தேர்தலுக்கு லீவுநாள் கிடையாது. தபால் மூலம் ஒட்டு பதிவு செய்யணும், அல்லது EARLY VOTING CENTER தேர்தலுக்கு மூன்று வாரத்துக்கு முன்னமே திறந்து விடுவார்கள். எமக்கு கிட்ட இருக்கும் எந்த CENTER இல் வசதியான நேரம் போய் உங்க தொகுதியை தெரிவுசெய்து தபால் மூலம் ஓட்டு போடலாம்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X