பதிவு செய்த நாள் :
மத்திய பெண் அமைச்சர் கவுர் தொகுதிக்குள் நுழைய முடியலை

வரும், 19ல் தேர்தலை சந்திக்கும், பஞ்சாபின், 13 தொகுதிகளில், பதின்டாவில் போட்டியிடும், மத்திய பெண் அமைச்சர், ஹர்சிம்ரத் கவுர் பாதல், கடும் எதிர்ப்பை சந்தித்து வருகிறார்.

அமைச்சர், தொகுதி, ஹர்சிம்ரத் கவுர் பாதல்இந்த தொகுதியின், தற்போதைய, எம்.பி.,யான இவர் மீது, தொகுதிக்கு திட்டங்கள் எதையும் செய்யவில்லை என்ற அதிருப்தி பலமாக

நிலவுகிறது. இதனால், பிரசாரத்திற்கு செல்லும் அவருக்கு, பலத்த எதிர்ப்பு காணப்படுகிறது.சில நாட்களுக்கு முன், பதின்டா கிராம பகுதிகளில் அவரை நுழைய விடாமல், காங்கிரசார் ரகளையில்ஈடுபட்டனர்.இதனால், அவரால் தொடர்ந்து செல்ல முடியவில்லை; வீட்டுக்கு திரும்பி விட்டார்.கடும் கோபமடைந்த அவர், மாநில, காங்., முதல்வர், அமரீந்தர் சிங்கையும், காங்கிரசாரையும், கடுமையாக சாடினார்.'தொகுதிக்கு பிரசாரத்திற்கு செல்ல விடாமல் தடுக்கும் அளவுக்கு, காங்கிரசார் அத்துமீறிநடந்து கொள்கின்றனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க, போலீசார் தயங்குகின்றனர்' என்றார்.இந்த முறை தான் அவர், தன் குடும்ப கட்சியான, சிரோன்மணி அகாலி தளம் ஆட்சியில் இல்லாத காலத்தில், தேர்தலில் போட்டியிடுகிறார் என்பது

Advertisement

குறிப்பிடத்தக்கது. இவரின் மாமனார், சிரோன்மணி அகாலி தளத்தின் தலைவரும், முன்னாள் முதல்வருமான, பிரகாஷ் சிங் பாதல். கணவர், முன்னாள் துணை முதல்வர், சுக்பிர் சிங் பாதல்.
- எஸ்.சர்மா
-சிறப்பு செய்தியாளர்


Advertisement

வாசகர் கருத்து (15)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
sahayadhas - chennai,இந்தியா
13-மே-201918:48:11 IST Report Abuse

sahayadhas70 ஆண்டு நன்றாக வாழும் போது தெரிந்திருக்குமே.

Rate this:
Chowkidar NandaIndia - Vadodara,இந்தியா
15-மே-201913:55:40 IST Report Abuse

Chowkidar NandaIndiaமக்கள் நன்றாக வாழ்ந்திருந்தால் இவர் எப்படி அங்கு வெற்றி பெற்றிருப்பார்? அறுபது வருடங்கள் நாசமாய் போனதால் தானே மக்கள் இவரை தேர்ந்தெடுத்தது? ...

Rate this:
தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
13-மே-201911:34:02 IST Report Abuse

தமிழ்வேல் இவங்க எந்த துறைக்கு அமைச்சர்ன்னு சொல்லாட்டி நாங்க எப்புடி தெரிஞ்சிக்கிறது ?

Rate this:
Dalda - Varanasi,இந்தியா
13-மே-201923:31:46 IST Report Abuse

DaldaMinistry of Food Processing Industries ...

Rate this:
Ambika. K - bangalore,இந்தியா
13-மே-201909:10:47 IST Report Abuse

Ambika. Kநாகர்கோயிலு சுரேஷு என்னவோ காங்கிரஸ் ரொம்ப நல்லவங்க நல்ல ஆட்சி தருவாங்க என்பது போல் உள்ளது உங்க கருத்து

Rate this:
மேலும் 10 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X