டவுட் தனபாலு| Dinamalar

சிறப்பு பகுதிகள்

டவுட் தனபாலு

'டவுட்' தனபாலு

Updated : மே 13, 2019 | Added : மே 12, 2019 | கருத்துகள் (1)
'டவுட்' தனபாலு

தி.மு.க., பொருளாளர் துரைமுருகன்: நான் காட்பாடி தொகுதியில், 11 முறை தேர்தலில் நின்றுள்ளேன். 12வது முறையும் நான் தான் நிற்பேன்; நான் தான் ஜெயிப்பேன். என்ன காரணம் என்றால், காட்பாடி தொகுதிக்கு பாலாறு தண்ணீர் தந்தேன்.
டவுட் தனபாலு: காட்பாடி தொகுதியை, வேறு யாரும் கற்பனை கூட பண்ணிப் பார்க்கக் கூடாதுன்னு, தி.மு.க.,வினருக்குச் சொல்றீங்களா... தலைமைக்கே சொல்றீங்களா... தேர்ந்தெடுத்த மக்களுக்கு உருப்படியாக ஏதாவது செய்திருந்தால், ஒரே தொகுதியில் தைரியமாகப் போட்டியிடலாம்னு, நீங்க, யாரைக் குத்திக் காட்டுறீங்க என்ற, 'டவுட்' வருதே...!

த.மா.கா., என்ற கட்சியின், இளைஞரணி தலைமை பொறுப்பில் உள்ள, யுவராஜா என்பவர்: தேச நலன் கருதி, 2002ல், காங்கிரசோடு,த.மா.கா., இணைந்தது. பின், எங்கள் தொண்டர்களுக்கு உரிய அங்கீகாரம் கிடைக்காததால், மீண்டும், த.மா.கா.,உருவானது.
டவுட் தனபாலு: கடந்த, 2002ல் இருந்து, 2014 வரையிலும், கட்சியிலும், ஆட்சியிலும், வாசனுக்கு எவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருந்தது என்பது, ஊர் உலகத்துக்கே தெரியுமே... கட்சியின் உறுப்பினர் அட்டையில்,மூப்பனார் படம் இல்லை என்பதை சொல்லித்தானே, மீண்டும் தனிக்கட்சி துவங்கினாரு... இதுல, தொண்டர்கள் எங்கிருந்து வந்தனர் என்பதுதான், என்னோட, 'டவுட்!'

தெலுங்கு தேசம் கட்சியை சேர்ந்த, ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு: ஜனநாயகத்தை கொன்றதற்காக, பிரதமர் நரேந்திர மோடிக்கு மக்கள் பாடம் புகட்ட உள்ளனர்.
டவுட் தனபாலு: நரேந்திர மோடி, ஜனநாயகத்தை கொன்றார் என்றால், கடந்த ஆண்டு வரை, அவரோடு கைக்குலுக்கி, அவருக்கு ஆதரவாகப் பேசி வந்த உங்களுக்கும், அதில் பங்கு இருக்குதே... உங்களை மட்டும் மக்கள் எப்படி விட்டு வைப்பாங்க என்ற, 'டவுட்' வருதே...!

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X