பதிவு செய்த நாள் :
இலங்கையில், 20 நாளுக்கு பின்,
'சர்ச்'களில் ஞாயிறு பிரார்த்தனை

கொழும்பு, : தொடர் குண்டு வெடிப்பை அடுத்து, இலங்கையில் மூடப்பட்ட தேவாலயங்கள், 20 நாட்களுக்கு பின், நேற்று திறக்கப்பட்டு, ஞாயிறு பிரார்த்தனை நிகழ்ச்சிகள் நடந்தன.


அண்டை நாடான இலங்கையில், கடந்த மாதம், ஈஸ்டர் பண்டிகை நாளான, 21ம் தேதியன்று, தேவாலயங்கள், ஓட்டல்கள் என, எட்டு இடங்களில், அடுத்தடுத்து, சக்தி வாய்ந்த குண்டுகள் வெடித்தன. இதில், 258 பேர் இறந்தனர்; 500க்கும் அதிகமானோர் படுகாயம் அடைந்தனர்.இந்த குண்டு வெடிப்புக்கு, ஐ.எஸ்., பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றது.

அந்த அமைப்புடன் தொடர்புடைய உள்ளூர் பயங்கரவாத அமைப்பு, குண்டு வெடிப்பை நிகழ்த்தியுள்ளது தெரிந்தது. இது தொடர்பாக, பலரை, இலங்கை போலீசார் கைது செய்துள்ளனர். தொடர் குண்டு வெடிப்பை அடுத்து, பிரார்த்தனைகள் ரத்து செய்யப்பட்டு, தேவாலயங்கள் மூடப்பட்டன. ஞாயிற்றுக் கிழமைகளில் நடக்கும், கூட்டு பிரார்த்தனை நிகழ்ச்சிகளும் நடத்தப்படவில்லை.'டிவி' சேனல்கொழும்பு ஆர்ச் பிஷப், கார்டினல் மால்கம் ரஞ்சித், தன் வீட்டிலிருந்தபடியே, ஞாயிற்றுக் கிழமைகளில்,கூட்டு பிரார்த்தனை நிகழ்ச்சிகளை நடத்தினார்.

இதை, இலங்கை தேசிய, 'டிவி' சேனல், நேரடியாக ஒளிபரப்பு செய்தது. இந்நிலையில், இலங்கையில் அமைதி திரும்பியுள்ளதையடுத்து, 20 நாட்களுக்கு பின், தேவாலயங்கள் நேற்று காலை திறக்கப்பட்டன; ஞாயிறு பிரார்த்தனை நிகழ்ச்சிகளும் நடந்தன.தேவாலயங்களை சுற்றி, பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது. கடுமையான சோதனைகளுக்கு பின், தேவாலயங்களுக்குள் பொது மக்கள் அனுப்பப்பட்டனர்.இதனிடையே, குண்டு வெடிப்பு சம்பவத்தால் மூடப்பட்டிருந்த கத்தோலிக்கப் பள்ளிகள், நாளை திறக்கப்படும் என,

Advertisement

அறிவிக்கப்பட்டுள்ளது.

முஸ்லிம் மதகுரு கைது

தொடர் குண்டு வெடிப்புக்கு பின், பயங்கரவாதத்தை ஆதரிக்கும் வகையிலோ, பதற்றத்தை ஏற்படுத்தும் வகையிலோ, எந்த செயல்பாடுகளும் கூடாது என, மசூதிகளுக்கு, இலங்கை அரசு உத்தரவிட்டிருந்தது. இலங்கை, வவுனியாவைச் சேர்ந்த, முஸ்லிம் மதகுரு ஒருவர், சமூக வலைதளங்களில், பயங்கரவாதத்தை ஆதரிக்கும் வகையில், 'வீடியோ'க்களை வெளியிட்டார். இதையடுத்து, அவரை கைது செய்ய, அரசு முடிவு செய்தது. ஆனால், அவர், மெக்காவுக்கு, ஹஜ் யாத்திரை சென்றுள்ளது தெரிய வந்தது.

இந்நிலையில், கொழும்பு விமான நிலையத்தில், நேற்று வந்திறங்கிய மதகுருவை, போலீசார் கைது செய்தனர். இலங்கையில், கிறிஸ்துவர்கள் அதிகமாக இருக்கும், சிலாபாதில், மசூதி மற்றும் முஸ்லிம்களுக்கு சொந்தமான சில கடைகள் மீது, நேற்று தாக்குதல் நடத்தப்பட்டது. இதையடுத்து, அங்கு பதற்றம் ஏற்பட்டது. கூடுதல் பாதுகாப்பு படையினர் வரவழைக்கப்பட்டு, பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இங்கு, இன்று காலை, 6:00 மணி வரையில், ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.


Advertisement

வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
13-மே-201908:13:20 IST Report Abuse

Srinivasan Kannaiyaசில இஸ்லாமியர்அல்லாஹ்வின் பேரையே கெடுத்து குட்டி சுவராக்கி விட்டார்கள்.. குரானில் இதை எல்லாமா சொல்லி இருக்கிறார்கள்

Rate this:
கதிரழகன், SSLC - சிவகங்கை, TN,இந்தியா
13-மே-201907:41:12 IST Report Abuse

கதிரழகன், SSLCஇந்த கழிசடைகள் எல்லாரையும் தொறத்தி அடிக்கணும்

Rate this:
blocked user - blocked,மயோட்
13-மே-201904:42:59 IST Report Abuse

blocked userஆபிரகாமிய மாதங்கள் வம்பைத்தான் போதிக்கின்றன. ஒருவர் பெரிய அளவில் செய்வார்கள். மற்றவர்கள் சின்ன அளவில் செய்வார்கள். ஒன்று மதமாற்றம் செய்வார்கள் அல்லது தீவிரவாதத்தில் இறங்குவார்கள். இவர்கள் திருந்தாதவரை உலக அமைதி என்பது கேள்விக்குறியே.

Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X