பொது செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
வட மாவட்டங்களை வாட்டுது 'அக்னி' வெயில்

சென்னை: அக்னி நட்சத்திர காலமான தற்போது தெற்கு மற்றும் மேற்கு மாவட்டங்களில் அவ்வப்போது மழை பெய்தாலும் வடக்கு மற்றும் டெல்டா மாவட்டங்களில் கோடை வெயிலும், வறட்சியும் வாட்டுகிறது.

வட மாவட்டங்கள்,அக்னி, வெயில்




கோடை வெயிலின் உச்சகட்டமான அக்னி நட்சத்திரத்தின் தாக்கம் தமிழகம் முழுவதும் வறுத்தெடுக்கிறது. அதிகபட்சமாக திருத்தணி, வேலுாரில் 44 டிகிரி செல்ஷியஸ் வரை வெயில் பதிவாகிறது.நேற்று மாலை 5:30 மணி நிலவரப்படி தமிழகத்தில் அதிகபட்சமாக

வேலுார் மற்றும் திருத்தணியில் 43 டிகிரி செல்ஷியஸ் வெப்பம் பதிவானது. திருச்சி 42; மதுரை, கரூர் பரமத்தி 41; சேலம் 40; தர்மபுரி 38 டிகிரி செல்ஷியஸ் பதிவானது.நாமக்கல், கோவை, சென்னை விமான நிலையம் 37; சென்னை நுங்கம்பாக்கம், பரங்கிப்பேட்டை, நாகை,கடலுார் 36; புதுச்சேரி, காரைக்கால் 35; துாத்துக்குடி, பாம்பன் 34; கன்னியாகுமரி 33; வால்பாறை 30 டிகிரி செல்ஷியஸ் வெயில் பதிவானது.


அதேநேரம் தமிழகத்தின் தெற்கு மற்றும் மேற்கு மாவட்டங்களை வெயில் வாட்டினாலும் அவ்வப்போது கோடை மழை கொட்டுகிறது. நேற்று காலை 8:30 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் கோத்தகிரியில் 7 செ.மீ., மழை பதிவாகியுள்ளது.கூடலுார், பெரியநாயக்கன் பாளையம் 3; ஊட்டி, சேரன்மகாதேவி, பேச்சிப்பாறை 2; தளி, கேத்தி, தேவாலா,சூலகிரி 1 செ.மீ., மழை பெய்துஉள்ளது. ஆனால் வட மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்கள் கோடை மழை இல்லாமல் கடும் வெப்ப தாக்குதலில் பாதிக்கப்பட்டுள்ளன.
தர்மபுரி, கிருஷ்ணகிரி, நாமக்கல், கோவை, நீலகிரி, தேனி, திண்டுக்கல், விருதுநகர்,

Advertisement

திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் இன்று சில இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துஉள்ளது.


சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, ஈரோடு, நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், விருதுநகர் மற்றும் திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் சில இடங்களில் மணிக்கு 50 கி.மீ., வேகத்தில் சுழல் காற்று வீசும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. சென்னையில் அதிகபட்சம் 39 டிகிரி செல்ஷியஸ் வரை வெயில் பதிவாகும்.


Advertisement

வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
oce - tokyo,ஜப்பான்
13-மே-201909:30:49 IST Report Abuse

oceமேஷ ராசியில் சூரியனருகில் சுழன்று நகரும் பூமிக்கு அருகிலிருக்கும் சூரியன் ஒளி மிகுந்த நட்ச்த்திரம் போல் தெரிவதால் அதை அக்னி நட்ச்த்திரம் என்று சொல்கிறார்கள்.

Rate this:
oce - tokyo,ஜப்பான்
13-மே-201909:27:39 IST Report Abuse

oceஜூன் முதல் செப்டம்பர் வரை தென் மேற்கு பருவ மழை. அக்டோபர் முதல் டிசம்பர் வரை வரை வடகிழக்கு பருவ மழை. இவ்விரண்டும் தென்னிந்தியாவின் பருவ மழைகள்.

Rate this:
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
13-மே-201908:11:31 IST Report Abuse

Srinivasan Kannaiyaஊழல் அரசியல்வாதிகள் பெறுக பெறுக இயற்கையின் சீற்றமும் அதிகமாகிறது

Rate this:
மேலும் 1 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X