கர்நாடகாவில் ஆட்சி மாற்றமா: இடைத்தேர்தலில் பா.ஜ., காங்., தீவிரம்

Updated : மே 13, 2019 | Added : மே 13, 2019 | கருத்துகள் (16)
Advertisement

பெங்களூரு:கர்நாடகா மாநிலம் குந்த்கோல், சிஞ்சோலி ஆகிய இரண்டு சட்டசபை தொகுதி
களின் இடைத்தேர்தல் கர்நாடக அரசியலில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும் என்பதால் பா.ஜ. மற்றும் காங்கிரஸ் தலைவர்களின் பிரசாரம் சூடுபிடித்துள்ளது.







கர்நாடகாவில் முதல்வர் குமாரசாமி தலைமையில் ம.ஜ.த. - காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது.நகராட்சி துறை அமைச்சராக இருந்த காங். கட்சியின் சி.எஸ்.சிவள்ளி இறப்பினால் தார்வாடின் குந்த்கோல் தொகுதி காலியாக அறிவிக்கப்பட்டது.இதே போல லபுரகியின் சிஞ்சோலி தொகுதி எம்.எல்.ஏ. உமேஷ் ஜாதவ் பதவியை ராஜினாமா செய்து பா.ஜ.வில் இணைந்தார். இதனால் இவ்விரு சட்டசபை தொகுதிகளுக்கு 19ம் தேதி இடைத்தேர்தல் நடக்கிறது.





சமீபத்தில் நடந்துமுடிந்த லோக்சபா தேர்தலின் போது ம.ஜ.த. மற்றும் காங். கட்சியினரிடையே சலசலப்பு எழுந்தது. கூட்டணி தர்மத்தின்படி செயல்படவில்லை என்ற பரஸ்பர புகாரால் இரு கட்சி தலைவர்களிடையே புகைச்சல் அதிகரித்து வருகிறது.அமைச்சர் பதவி கிடைக்காத காங்கிரஸ் அதிருப்தியாளர்கள் ஆட்சியை கவிழ்க்கும் முயற்சியில் திரைமறைவில் ஈடுபட்டுள்ளனர்.இதை சாதகமாக பயன்படுத்தி ஆட்சியை பிடிக்க 104 எம்.எல்.ஏ.க்களுடன் தனி பெரும் கட்சியாக திகழும் பா.ஜ. வியூகம் வகுத்து வருகிறது.

இந்த இரண்டு தொகுதி வெற்றி தான் மாநில அரசியலை மாற்ற போவதாக கர்நாடகா அரசியல் வட்டராத்தில் நம்பப்படுகிறது.இதனால் காங்கிரஸ் பா.ஜ.கட்சிகளின்முக்கிய தலைவர்கள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.

Advertisement




வாசகர் கருத்து (16)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Sadagopan Varadhachari - Hosur,இந்தியா
13-மே-201913:35:28 IST Report Abuse
Sadagopan Varadhachari ஒரு பக்கம் காங்கிரெஸ் மற்றும் பாஜகா அல்லாத 3 வது அணி என்று சந்த்ரசேகர ராவ் குமாரசாமியை சந்தித்து அச்சாரம் போட்டு இருக்கிறார்.குமாரசாமியோ காங்கிரெஸ் தயவில் கர்நாடகத்தை ஆண்டுகொண்டு இருக்கிறார்.கூழுக்கும் ஆசை மீசைக்கும் ஆசை என்பது போல மாநிலத்தையும் தன் குடும்பம் ஆளவேண்டும் அதே சமயம் மத்தியிலும் காங்கிரெஸ் அல்லாத அமைச்சரவையிலும் அங்கம் வகிக்க வேண்டும் என்பது பதவி வெறியை தவிர வேறு என்னவாக இருக்க முடியும்
Rate this:
Share this comment
Cancel
இந்தியன் kumar - chennai,இந்தியா
13-மே-201913:09:53 IST Report Abuse
இந்தியன் kumar உள்ளடி வேலைகளால் கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சி தோட்கும்
Rate this:
Share this comment
Cancel
Azhagan Azhagan - Chennai,இந்தியா
13-மே-201911:28:37 IST Report Abuse
Azhagan Azhagan அடடே ஆனந்து உமக்கு எப்பவும் நினைப்பில் பிஜேபி தான் வருது, இதுல அடுத்தவனை பேசுறீரு. யாரு அழுவுறா யாரு புலம்புறானு உமக்கு நல்லாவே தெரியும். கொண்ட தெரியுது மறைச்சுக்கோ.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X