அரசியல் செய்தி

தமிழ்நாடு

இந்தியாவின் முதல் பயங்கரவாதி ஒரு இந்து; கமல் கண்டுபிடிப்பு

Updated : மே 13, 2019 | Added : மே 13, 2019 | கருத்துகள் (311)
Advertisement

அரவக்குறிச்சி: சுதந்திரம் அடைந்த பின்னர் முதன் முதலாக உருவான பயங்கரவாதி கோட்சேதான், இந்தியாவின் முதல் பயங்கரவாதி ஒரு இந்து என மக்கள் நீதி மைய கட்சியின் தலைவர் கமல் பேசிய பேச்சு சர்ச்சையை கிளப்பியுள்ளது.


அரவக்குறிச்சி இடைத்தேர்தலில் கமல் தனது கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவு கேட்டு பிரசாரம் செய்து வருகிறார். திறந்தவேன் மூலம் நேற்று (12 ம் தேதி ) இரவு புங்கம்பாடி கார்னர், ஈசநத்தம், பள்ளப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் மக்களிடம் ஓட்டு கேட்டு பேசினார்.

அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதி மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் மோகன்ராஜை ஆதரித்து பேசிய கமல்ஹாசன், சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து. அவர் பெயர் நாத்ராம் கோட்சே என்றார். முஸ்லிம்கள் நிறைய இருக்கும் பகுதி என்பதால் இதனை சொல்லவில்லை; காந்தி சிலைக்கு முன்னால் சொன்னேன் என்று அவர் குறிப்பிட்டார். தேசிய கொடி மூவர்ணமாகவே இருக்க வேண்டும். ஒரு வண்ணமாக மாற விரும்பவில்லை. பிரித்தாளும் சூழ்ச்சி வேண்டாம்; பிரிக்க நினைக்கும் சித்தாந்தம் அகற்றப்பட வேண்டும் என்றார். byte கமல்ஹாசனின் இந்த பேச்சுக்கு இந்து அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இந்நிலையில், திங்களன்று அரவக்குறிச்சியில் திட்டமிடப்படப்பட்டிருந்த கமலின் பிரச்சாரம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.ஹேராம் படத்தை பார்த்தால்.,பிரசார கூட்டத்தில் கமல் பேசியதாவது:

இது முஸ்லிம்கள் நிறைந்த பகுதி. இங்கு மக்கள் யாருக்கு வாக்களிக்க வேண்டும் என அவர்களுக்கு நன்றாக தெரியும். ஆதரவு இருக்கும் பகுதிகளில் எனக்கு அனுமதி மறுக்கப்படுகிறது. மக்கள் எங்கு பேசினாலும் கூடுவர். இது அவர்கள் என் மீது இருக்கும் அன்பை காட்டுகிறது. மோடியை நாடினால் நல்லது நடக்கும் என சிலர் நினைக்கின்றனர். உள்ளூர் மக்களுக்கு என்ன தேவையோ இதை பற்றியே பேச வேண்டும்.
இஸ்லாம் மக்களுக்கு தெரியும். பாபர் மசூதி இடிக்கப்பட்ட போது தமிழகத்தில் இருந்து தைரியமாக வெளி வந்த குரல் எதுவென்று அவர்களுக்கு நினைவு இருக்கும். பா.ஜ.,என்பது அப்போது இளம்கட்சி. நான் அப்போதே எதிர்பார்த்தேன் என்னுடைய ஹே ராம் படத்தை பார்த்தால் புரியும். இப்படியெல்லாம் பயங்கரம் நடக்குமோ என்று சொல்லபட்ட செய்தி.


தேசிய கொடி வண்ணம் மூவண்ணமாகவே இருக்க வேண்டும். ஒரு வண்ணமாக மாற விரும்பவில்லை. பிரித்தாளும் சூழ்ச்சி வேண்டாம். பிரிக்க நினைக்கும் சித்தாந்தம் அகற்றப்பட வேண்டும். பயங்கரவாதம் இரு தரப்பிலும் இருக்கிறது. எங்கிருந்தாலும் தவறுதான். இதனை முஸ்லிம்மக்கள் நம்புகின்றனர். அன்புதான் அவர்களின் அறம். நல்ல மதம் இதைத்தான் சொல்ல வேண்டும். இந்து தீவிரவாதம் என்று கூறினால் என் மீது பாய்கின்றனர். தூக்கில் போட வேண்டும் என்கின்றனர்.


கோட்சே தான் முதல்முஸ்லிம்கள் நிறைய இருக்கும் பகுதி என்பதால் இதனை சொல்லவில்லை. காந்தி சிலைக்கு முன்னால் சொன்னேன். சுதந்திர இந்தியாவின் முதல் பயங்கரவாதி ஒரு இந்து, அவர் பெயர் நாத்ராம் கோட்சே. அங்கு துவங்குகிறது அது. நான் காந்தியின் மானசீக கொள்ளுபேரன். அந்த கொலைக்கு கேள்வி கேட்க வந்திருக்கிறேன். இது சமரச இந்தியாவாக, சமமான இந்தியாவாக இருக்க வேண்டும் என்பது தான் நல்ல இந்தியனின் ஆசை. நான் நல்ல இந்தியன் என்பதை மார் தட்டி சொல்வேன். மனிதர்கள் மீது நான் நேசத்தை காட்டுகிறேன். இதனால் எங்கள் மக்கள் நீதி மையத்திற்கு நல்ல எதிர்காலம் உள்ளது. இவ்வாறு கமல் பேசினார்.

Advertisement
வாசகர் கருத்து (311)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
B.s. Pillai - MUMBAI,இந்தியா
16-மே-201906:31:00 IST Report Abuse
B.s. Pillai Whatever happened to our Father of Nation is regret and condemnable. But it happened in the back of Pakistan division and the hardships the Hindus and Muslims encountered during this period. And one fanatic did this killing can not be said that he is Hindu terrorist. Feelings overflowed and with him it has reached uncontrolable status. If Hindus are turning terrorists, no Muslim or Christian leader could spring up in Free India. Hindu principle is respect our guests and serve them food with love. " Anbe Sivam. "
Rate this:
Share this comment
Cancel
Parthasarathy Badrinarayanan - jakarta,இந்தோனேசியா
15-மே-201913:30:42 IST Report Abuse
Parthasarathy Badrinarayanan கிறிஸ்தவ நாய்களின் பணத்துக்கு குலைக்கிறான் இளங்கை தாக்குதலுக்கு கண்டனம் தெரிவிக்க தில் உண்டா
Rate this:
Share this comment
Cancel
Sundar - Chennai,இந்தியா
15-மே-201900:37:00 IST Report Abuse
Sundar ஒரு மனைவி இரு துணைவி போறாது என்று துணைவியின் மகளை பெண்டாள நினைத்த மாபாதகன் இவனாகத்தான் இருக்க முடியும். இவனிடமிருந்து என் மகளை காக்க வெளியேறுகிறேன் என்று இவன் மூன்றாவது துணைவி கூறியதை நினைவில் கொள்ளுங்கள்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X