துச்சமாக எண்ணி தம்மைச் தூறுசெய்த போதினும்...

Updated : மே 13, 2019 | Added : மே 13, 2019 | கருத்துகள் (15)
Share
Advertisement
துச்சமாக எண்ணி தம்மைச் தூறுசெய்த போதினும்...


அரசியலுக்கு அப்பாற்பட்டு அனைவராலும் ஆர்என்கே என்று அன்புடன் அழைக்கப்படும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரான ஆர்.நல்லகண்ணு தனது 93 வயதில் வசிக்க வீடின்றி அவதிப்பட்டு வருகிறார்.


latest tamil newsஅவரது கதையை தெரிந்து கொண்டால் பலர் அவரவர் வசிக்கும் வீட்டையே அவருக்கு விட்டுக்கொடுப்பர்.

ஸ்ரீ வைகுண்டத்தில் பிறந்தவரான நல்லகண்ணுவிற்கு பள்ளிப்படிப்பின் போதே மக்கள் நலனிற்காக போராடும் குணம் வந்துவிட்டது.

பள்ளியில் பிரிட்டிஷாருக்கு ஆதரவாக நாடகம் நடந்த போது அதை தடுத்துநிறுத்தியவர்.அதே குணத்துடன் கல்லுாரியில் காலடி எடுத்துவைத்தவர் ‛வெள்ளையனே வெளியேறு' போராட்டதில் மிகத்தீவிரமாக கலந்துகொண்டார்.

பொதுவுடமைக் கொள்கையால் ஈர்க்கப்பட்டு கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்தவர், இன்று வரை ஒரே கட்சி ஒரே கொடி ஒரே தலைமை என்று வாழ்ந்து வருபவர்.

ஒரு கட்டத்தில் கம்யூனிஸ்ட் இயக்கம் தடை செய்யப்பட இவர் உள்பட பல தலைவர்கள் தலைமறைவானார்கள்.ஊர் ஊராக மிருகங்களை வேட்டையாடுவது போல வேட்டையாடி தலைவர்களை போலீசார் கைது செய்தனர் அப்படி கைது செய்யப்பட்டவர்களி்ல் நல்லகண்ணுவும் ஒருவர்.

அவரை சிறையில் வைத்து சித்திரவதை செய்த போலீசார் சிகரெட்டால் மீசையை சுட்டுப்பொசுக்கினர் பின்னும் உடம்பு எங்கும் கங்குகளால் சுட்டனர்.

அதுவரை பெரிய மீசை வைத்திருந்த நல்லகண்ணு அதன்பிறகு மீசை வைக்கும் வழக்கத்தை விட்டொழித்தார், இல்லாத மீசையை பார்க்கும் போதெல்லாம் பொய்யாய் பழி போட்டு புரட்டி எடுத்த போலீசின் அடக்குமுறையை அழித்தொழிக்கும் எண்ணம் வரவேண்டும் என்பார்.

இவருடன் கைது செய்யப்பட்டவர்கள் எல்லாம் விடுதலை செய்யப்பட்ட போதும் இவர் மட்டும் நீண்ட காலம் விடுதலை செய்யப்படாமல் சிறையில் இருந்தார், அதற்காக அவர் கவலைப்படவில்லை மாறாக எனக்கு புத்தகம் வாசிக்க கிடைத்த வாய்ப்பு என்றார்.இந்த வாசி்ப்பு பழக்கம் பின்னாளில் இவர் பல புத்தகங்கள் எழுதுவதற்கும், இன்று வரை சங்ககால இலக்கியம் முதல் சமகால கவிதைகள் வரை பேசவும் துணையாக இருக்கிறது.

அப்போது ஆரம்பித்த புத்தக வாசிப்பு பழக்கம் இப்போது வரை தொடர்கிறது, எப்போதும் பாரதியும் பாரதிதாசனும்தான் இவரது பயண வழித்தோழர்கள் பாரதி மீதான பற்றின் காரணமாக தனது இரு மகள்களில் ஒருவருக்கு ‛காசி பாரதி' என்றே பெயர் வைத்தவர்.

மகளுக்கு காது குத்த வேண்டும் எங்கே தோடு? என்று கேட்ட போது, ‛இதோ வாங்கி வந்து விடுகிறேன்' என்று சொல்லி வெளியே போய் தன் நண்பரிடம் கடன் வாங்கி ‛கவரிங் தோடு' வாங்கி வந்து கொடுத்து இதை குத்துங்கள் போதும் என்றவர்.

எப்போதுமே பணத்தின் மீதோ பொருள்கள் மீதோ பற்றில்லாதவர். இவரது அர்ப்பணி்ப்பை பாராட்டி கட்சி இவருக்கு ஒரு கோடி ரூபாய் கொடுத்த போது, ‛எனக்கு எதற்கு இவ்வளவு பணம் இதை வைத்து நான் என்ன செய்யப்போகிறேன்' என்று சொல்லி அதே மேடையில் வைத்து அந்த பணத்தை அப்படியே கட்சிக்கு திரும்பக் கொடுத்துவிட்டார்.

இவரது மாமனார் அண்ணாசாமி சாதி வெறியர்களால் வெட்டிக் கொல்லப்பட்ட போது கொஞ்சமும் பதட்டப்படாமல், அதைவைத்து அரசியல் பண்ணாமல் ஊர் நலனும் அமைதியுமே முக்கியம் என்று செயல்பட்டவர்.அண்ணாசாமிக்கு இழப்பாக அரசாங்கம் வழங்கிய தொகையை விவசாயிகள் சங்கத்திற்கு வழங்கியவர்.

இவர் மீது பற்றும் பாசமும் கொண்ட அரசியல் தலைவர் ஒருவர் இவருக்கு முன்அறிவிப்பின்றி கார் ஒன்றை பரிசளித்தார், உங்கள் பாசமும் அன்பும் மட்டும் போதும் என்று ஒரு கடிதத்தையும், காரையும் மறுநாளே திரும்பக் கொடுத்துவிட்டார்.

இவர் வீடு இல்லாமல் சிரமப்படுவதை அறிந்து 12 வருடத்திற்கு முன் அரசாங்கம் இவருக்கு வீடு ஒன்றை இலவசமாக வழங்கியது.இலவசமாக ஏற்க மனமில்லை வாடகைக்கு இருந்து கொள்கிறேன் என்று சொல்லிவிட்டு 3ஆயிரத்து 500 ரூபாய் வாடகை கொடுத்து அந்த வீட்டில் வசித்துவந்தார்.

ஒடுக்கப்பட்ட மக்கள் ஆலய பிரேவேசம் செய்திடவும்,செருப்பணிந்து பொதுத்ததெருக்களில் நடக்கவும்,வீடுகளில் நிலை வைத்துக் கொள்ளவும் வேண்டி பல போராட்டங்களை நடத்தியவர் இப்போதும் தாமிரபரணி ஆற்றில் மணல் அள்ளுவதை தடுக்கும் போராட்டம் வரை நடத்திக்கொண்டு இருப்பவர் இப்படி போராட்டத்தையே வாழ்க்கையாக்கிக் கொண்டவர் தனது மணைவி ரஞ்சிதம் மறைவிற்கு வீட்டில் உள்ள புத்தகங்கள் மற்றும் கட்சி தொண்டர்கள் தோழர்கள் அழைக்கும் விழாக்கள் கூட்டங்கள் போராட்டங்களுக்கு சென்று வந்து கொண்டிருந்தார்,ஒரே நி்ம்மதி இவர் தங்கியிருந்த வீடுதான்.

புதிய திட்டம் அமலாவதால் வீட்டை காலி செய்யுங்கள் என்று நல்ல கண்ணுவிடம் நோட்டீஸ் கொடு்க்காமல்,மாற்று வீடு வழங்காமல்,வாய் வார்த்தையாக வீட்டு வசதி வாரியத்தினர் சொல்லியிருக்கின்றனர்.

நல்லகண்ணு ஒன்றுமே சொல்லவில்லை தனது சொத்தான புத்தகங்களையும் மாற்று வேட்டி சட்டையை மட்டும் எடுத்துக் கொண்டு நண்பரின் கேகேநகர் வீட்டிற்கு தற்காலிகமாக வந்துவிட்டார்.

ஒரே ஒரு வார்த்தை சொன்னார் அதுவும் தனக்காக இல்லை. என்னைப் போலவே முன்னாள் அமைச்சர் கக்கன் குடும்பத்தினர் இங்குதான் வசிக்கின்றனர் அந்த வீடு எம்ஜிஆர் இலவசமாக கொடுத்தது. அவர்களுக்கு இதைவிட்டால் போக்கிடம் கிடையாது ஆகவே அவர்களுக்கு கண்ணியமாக வாழ வழிகாட்டுங்கள் என்று மட்டும் சொல்லியிருக்கிறார்.

ஒரு முறை கட்சி கூட்டம் முடிந்து கடைசி பஸ்சும் சென்றுவிட்ட நிலையில் கொஞ்சமும் தயங்காமல் துண்டை விரித்து பஸ் நிலையத்திலே படுத்துவிட்டார். இதைப் பார்த்த பிரமுகர் ஒருவர் பதறிப் போய் கார் எடுத்துக்கொண்டு போய் இவரை அழைக்க, ‛இது எனக்கு சகஜமான ஒன்றுதான் சுற்றிலும் எவ்வளவு பேர் துாங்குகிறார்கள் அவ்வளவு பேரையும் உங்கள் காரில் ஏற்றிக் கொள்வதாக இருந்தால் நானும் கடைசி ஆளாக ஏறிக்கொள்கிறேன்' என்று சொல்லிவிட்டு துாக்கத்தை தொடர்ந்தவர்.

அந்த வகையில் வாரியம் சொன்னதே என்று வீட்டைக் காலி செய்துவிட்டு பஸ் நிலையத்தில் போய் படுக்கவில்லை அப்படி படுத்திருந்தால் அதை விட அவமானம் இந்த அரசுக்கு வேறு எதுவும் இல்லை.

உற்றார், உறவினர் பினாமிகளின் கணக்குகளில் தனக்கு எத்தனை ஆயிரம் கோடிகளுக்கு சொத்து இருக்கிறது என்றே தெரியாத அரசியல்வாதிகளுக்கு மத்தியில் குடியிருந்த வாடகை வீட்டையும் விட்டு வெளியேறி
தற்காலிகமாக நண்பர் வீட்டில் தஞ்சம் புகுந்திருக்கிறார் நல்லகண்ணு ஐயா.,இதனால் நிம்மதி இழந்ததும் மன உளைச்சலுக்கும் ஆனதும் அவர் இல்லை கையறு நிலையில் உள்ள என்னைப் போன்றவர்கள்தான்.

-எல்.முருகராஜ்
murugaraj@dinamalar.in

Advertisement


வாசகர் கருத்து (15)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
30-நவ-201921:20:54 IST Report Abuse
Sarvanan Anbu great man
Rate this:
Cancel
S.R.Arul - Chennai,இந்தியா
19-மே-201910:11:44 IST Report Abuse
S.R.Arul Living legend Read few negative comments … this is not the time to Pinch someone when they are tired. Every human has positive & Negative. This legends positive is surplus. Just imagine spending days Jail ay younger age is equal to our brothers working in Arab countries after marriage…. Happy to know an Tamil legend.
Rate this:
Cancel
Nallavan Nallavan - இதே பெயரில் உலாத்தும் திமுக அடிமைக்கு நன்றி,இந்தியா
18-மே-201916:32:26 IST Report Abuse
Nallavan Nallavan
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X