சிறப்பு பகுதிகள்

டவுட் தனபாலு

'டவுட்' தனபாலு

Added : மே 13, 2019 | கருத்துகள் (2)
Advertisement
 'டவுட்' தனபாலு

பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர், மாயாவதி: ராஜஸ்தான் மாநிலம், அல்வாரில் நடந்த பலாத்கார சம்பவத்தை வைத்து, பிரதமர் மோடி, மோசமான அரசியல் செய்கிறார்.

டவுட் தனபாலு: நாட்டுல எங்கே தலித் மக்கள் மீதான தாக்குதலோ, பலாத்கார சம்பவமோ நடந்தால், பிரதமரின் மவுனம் குறித்து, கேள்வி எழுப்பி வந்தீங்க... இப்போ, உங்க ஆதரவில் ஆட்சி நடக்கும், ராஜஸ்தானில், இப்படி ஒரு சம்பவம் நடந்ததும், மூச்சு விடாமல் இருக்கீங்க... இது ஏன்னு, கேள்வி கேட்டது, மோசமான அரசியல் என்றால், இதுநாள் வரையிலும், நீங்க செய்து வந்ததற்கு என்ன பெயர் என்பதுதான், என்னோட, 'டவுட்!'

காங்., தலைவர் ராகுல்: இந்த தேர்தலில், காங்கிரஸ் மற்றும் பா.ஜ.,வுக்கு இடையே, நேரடி போட்டி நடக்கிறது. இந்த தேர்தலில், காங்கிரஸ் வெற்றி பெறப் போகிறது.

டவுட் தனபாலு: மிகத் தாமதமாக, இதைக் கண்டுபிடித்தீங்களா... இப்பவும் ஒண்ணும் கெட்டுப் போகலை... இன்னும், கடைசிக்கட்ட வாக்குப்பதிவு பாக்கி இருக்கு... அந்தத் தொகுதிகளிலாவது, உங்களை பிரதமராக முன்னிறுத்தி பிரசாரம் செய்வீங்களா... எதற்கு தயங்குறீங்க... இதுதான், உங்க கணிப்பின் மீது, 'டவுட்'டை கிளப்புது...!

பா.ஜ., தலைவர் அமித் ஷா: மத்தியில், பா.ஜ., கூட்டணி, மீண்டும் ஆட்சி அமைத்தால், ஜம்மு - காஷ்மீருக்கு, சிறப்பு அதிகாரம் வழங்கும், 370வது சட்டப்பிரிவை நீக்குவோம்.

டவுட் தனபாலு: இதே வாக்குறுதியை, 2014 தேர்தலின்போதும் சொன்னீங்க... அறுதிப்பெரும்பான்மையோடு, மத்தியிலும், ஆட்சியில் இருந்தீங்க... நடுவில், ஜம்மு - காஷ்மீர் அரசிலும், பங்கு பெற்றீங்க... இந்த நிலையில், இனிமேல் செய்வீங்க என்பதை எப்படி நம்புவது என்பதுதான், மக்களின், 'டவுட்!'

Advertisement


வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Sundar - Chennai,இந்தியா
15-மே-201900:41:11 IST Report Abuse
Sundar தவறான கருத்து. ராஜ்ஜியங்கள் அவையில் பெரும்பான்மை இல்லை. எப்படி சட்டம் இயற்ற முடியும்?
Rate this:
Share this comment
Cancel
D.Ambujavalli - Bengaluru,இந்தியா
14-மே-201906:17:40 IST Report Abuse
D.Ambujavalli 2014 மட்டுமில்லை, 2024 அடுத்தடுத்து வரும் தேர்தல்களிலும் இதே வாக்குறுதிதான் தொடரும். இன்று ஒன்று, நாளை ஒன்று என்று மாற்றி எல்லாம் பேச மாட்டோம்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X