பதிவு செய்த நாள் :
ஆக்ரோஷம்!
பிரசாரத்தில் தனிநபர் தாக்குதல் அதிகரிப்பு
தேர்தலுக்கு பின் அரசியலில் மாற்றம் வருமா?

கட்சித் தலைவர்கள், பரஸ்பரம் தனிப்பட்ட முறையில் தாக்கி விமர்சனம் செய்வது, இந்த லோக்சபா தேர்தலில் அதிகரித்துள்ளது. தேர்தலுக்குப் பின், ஆதரவு தேவை என்ற சூழ்நிலையில், இந்தப் பேச்சு பாதிப்பை ஏற்படுத்துமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

ஆக்ரோஷம்,தேர்தல்,அரசியல்,மாற்றம் வருமா?,பிரசாரம், தனிநபர் தாக்குதல்,அதிகரிப்பு


லோக்சபாவுக்கு, ஏப்., 11ல் துவங்கி, வரும், 19ம் தேதி வரை, ஏழு கட்டங்களாக தேர்தல் நடக்கிறது. இதில், பா.ஜ., மற்றும் காங்கிரஸ் இடையே நேரடி போட்டி உள்ளது. அதே நேரத்தில், தேர்தலுக்குப் பின், ஆட்சி அமைவதில், மாநில கட்சிகள் முக்கிய பங்கு வகிக்கும் என்பதால், பெரும்பாலான மாநிலக் கட்சிகள் தனியாக போட்டியிடுகின்றன.

'மகாகட்பந்தன்' எனப்படும், மெகா கூட்டணி என்ற பேச்சு, ஒரு பக்கம் நடக்கிறது. அதே நேரத்தில், மாநிலக் கட்சிகளின் கூட்டணி என்ற பேச்சும் தனியாக நடந்து வருகிறது. தேர்தலுக்கு முந்தைய கூட்டணியில் இல்லாத இந்தக் கட்சிகள், தேர்த லுக்குப் பின் யாருக்கு ஆதரவு அளிக்கும் என்பதே, புதிய அரசு அமைவதை நிர்ணயிக்கும் சக்தியாக மாறி உள்ளன.

வார்த்தைப் போர்:


இந்நிலையில், இந்தக் கட்சிகளின் தலைவர்கள், தனிப்பட்ட முறையில், ஒருவரை ஒருவரை விமர்சித்து, பிரசார கூட்டங்களில் பேசி வருகின்றனர். அந்த வரிசையில், தற்போது, பிரதமர் நரேந்திர மோடி, பகுஜன் சமாஜ் தலைவர், மாயாவதி இடையே வார்த்தைப் போர் நடந்து வருகிறது. ராஜஸ்தானின், ஆல்வாரில், தலித் பெண்ணை, கூட்டாக பாலியல் பலாத்காரம் செய்த விவகாரம், அம்மாநில அரசியலில், பெரும் புயலை வீசி வருகிறது.

லோக்சபா தேர்தலில், ஏழாம் கட்ட ஓட்டுப் பதிவு நடக்கும் தொகுதி களில், பிரசாரம் சூடுபிடித்துள்ள நிலையில், உ.பி.,யில் பேசிய பிரதமர் மோடி, இந்த கொடூரத்தை குறிப்பிட்டார். 'ராஜஸ்தானில் உங்கள் ஆதரவுடன் நடைபெறும் ஆட்சியில் தானே இந்த அவலம்; நீங்கள் ஏன் ஆதரவை

வாபஸ் பெறக்கூடாது' என, உ.பி.,யில் உள்ள தலித் பெண்கள், மாயாவதியிடம் கேள்வி எழுப்ப வேண்டும் என்றார் மோடி. இந்த விமர்சனத்தால் காட்டமான பகுஜன் சமாஜ் தலைவர், மாயாவதி, கடுமையான வார்த்தை களால் பிரதமருக்கு பதிலடி தந்தார்.

அப்போது, அவர் கூறியதாவது: பிரதமருக்கு, திடீரென, தலித் மீது கரிசனம் பிறந்து உள்ளது. முன்பு, தலித் மீதான அடக்குமுறைகளின் போது மவுனம் காத்தவர், இப்போது இவ்விஷயத்தை வைத்து, அரசியல் செய்கிறார். அரசியல் சுயநலத்துக்காக மனைவியையே கைவிட்டவர், மற்ற பெண்களை எப்படி மதிப்பார். பா.ஜ.,வில் உள்ள மணமான பெண்கள் பலர், தங்களது கணவர்கள், மோடியோடு நெருக்கம் காட்டினாலே பயப்படுகின்றனர். கணவர்களை, தங்களிடமிருந்து மோடி பிரித்துவிடுவாரோ என, அவர்கள் அச்சப்படுவதாக கேள்விப்பட்டேன். இவ்வாறு, மாயாவதி கூறினார்.

விமர்சனம்:


பிரதமர் மீதான மாயாவதியின் விமர்சனத்திற்கு, பா.ஜ., பொங்கி எழுந்துள்ளது. கட்சியின் மூத்த தலைவரும், மத்திய நிதியமைச்சருமான அருண் ஜெட்லி, 'டுவிட்டர்' சமூக வலைதளத்தில் கூறியுள்ளதாவது: பிரதமராக வேண்டும் என்பதில், மாயாவதி தீவிரமாக உள்ளார். ஆனால், அவரது பேச்சு, பண்பாடு கீழ்த்தரமாக உள்ளது. பிரதமர் மீது தொடுத்துள்ள தனி நபர் தாக்குதல் மூலம், மாயாவதி, பொதுவாழ்க்கைக்கு பொருத்தமானவர் இல்லை என்பது அம்பலமாகியுள்ளது. இவ்வாறு, அவர் குறிப்பிட்டுள்ளார்.

அரசியல் நோக்கர் கள் கூறியதாவது: வரும், 23ல் நடக்கும் ஓட்டு எண்ணிக்கைக்குப் பின், டில்லியில், மிகப்பெரிய அரசியல் நாடகம் நடக்கவிருக்கிறது. யார் எந்தப் பக்கம் செல்வர் என, தற்போது கணிக்க முடியாத நிலை உள்ளது. இதில், மிக முக்கியமானவர், மாயாவதி. பா.ஜ., மற்றும் காங்., தலைமையிலான கூட்டணிகளுக்கு பெரும்பான்மை கிடைக்காத நிலை ஏற்பட்டால், மாநிலக் கட்சிகளின் ஆதரவு அவர்களுக்கு தேவைப்படும். அப்போது, மாயாவதிக்கான முக்கியத்துவம் அதிகரிக்கும். இதுவே மற்றக் கட்சித் தலைவர்களின் நிலையும்.

தற்போது, தனிப்பட்ட முறையில் கடுமையாக விமர்சித்து வரும் நிலையில், தேர்தலுக்குப் பின், இந்தக் கட்சித் தலைவர்கள்,

Advertisement

பழையதை மறந்து, ஆதரவு அளிப்பரா என்பது கேள்விக் குறியே. இந்தத் தேர்தலுக்குப் பின், தேசிய அரசியலில் மிகப் பெரிய மாற்றத்தை எதிர்பார்க்கலாம். இவ்வாறு, அவர்கள் கூறினர்.

பா.ஜ., - திரிணமுல் மோதல்:

மேற்கு வங்கத்தில், பா.ஜ., தேசியத் தலைவர், அமித் ஷா பங்கேற்க இருந்த, தேர்தல் பிரசார கூட்டத்தில் அனுமதி மறுக்கப்பட்டதால், ரத்து செய்யப்பட்டது. அதையடுத்து, பா.ஜ., மற்றும் மாநிலத்தில் ஆளும், திரிணமுல் காங்., தொண்டர் கள் இடையே மோதல் ஏற்பட்டு உள்ளது. பா.ஜ., தேசிய பொதுச் செயலர், கைலாஷ் விஜய்வர்கியா கூறியதாவது: பரூய்புரில் பிரசார கூட்டத்தில் பங்கேற்பதற்காக, அமித் ஷாவின் ஹெலிகாப்டர் தரையிறங்க, மாவட்ட நிர்வாகம் அனுமதி மறுத்தது. அதேபோல், பிரசார கூட்டத்துக்கான அனுமதி வழங்குவதிலும், மாவட்ட நிர்வாகம் திட்டமிட்டே முடிவை அறிவிக்காமல் இழுபறி செய்தது. இதற்கிடையே, பிரசார கூட்டம் நடக்கும் இடத்தின் உரிமையாளர், கடைசி நேரத்தில், அதற்காக அளித்த அனுமதியை திரும்பப் பெற்றார். திரிணமுல் துாண்டுதலால் தான் இது நடந்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார். ஆனால் இதை, திரிணமுல் காங்., மறுத்துள்ளது. அக்கட்சியின் பொதுச் செயலர், பார்த்தா சாட்டர்ஜி கூறியதாவது: பிரசார கூட்டத்துக்கு அதிக கூட்டம் வராது என்பதால், பா.ஜ., அந்தக் கூட்டத்தை ரத்து செய்துள்ளது. ஆனால், எங்கள் கட்சி மீது, பொய்யான குற்றச்சாட்டை கூறுகின்றனர். இவ்வாறு, அவர் கூறினார். இதற்கிடையே, பரூய் புரில், பா.ஜ., மற்றும் திரிணமுல் காங்., தொண்டர்கள் இடையே, மோதல் ஏற்பட்டு உள்ளது. அங்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது.


முடிந்தால் கைது செய்யுங்கள்:

'ஜெய் ஸ்ரீராம்' என்று கூறினால், மேற்கு வங்க முதல்வர், மம்தா பானர்ஜிக்கு பிடிக்காது. உங்களுக்கு தைரியம் இருந்தால், என்னை கைது செய்யுங்கள். மம்தா பானர்ஜி, நடுக்கத்தில் உள்ளார். என் பிரசார கூட்டத்தை ரத்து செய்யலாம்; ஆனால், மாநிலத்தில், பா.ஜ.,வின் வெற்றியை தடுத்து நிறுத்த முடியாது.

-அமித் ஷா, தலைவர், பா.ஜ.,


- நமது டில்லி நிருபர்- -


Advertisement

வாசகர் கருத்து (10)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Ashanmugam - kuppamma,இந்தியா
14-மே-201910:34:58 IST Report Abuse

Ashanmugamதற்போது நாட்டில் நடந்து வரும் அரசியல் வியூகத்தை எண்ணி பார்த்தால் யாருக்கும் தனி பெரும் மெஜாரிட்டி கிடைத்து, தன்னிச்சையாக ஆட்சி அமைக்க வாய்ப்பில்லை என தோன்றுகிறது. காங்கிரஸும், பிஜேபியும் ஆட்சி அமைக்கும் வெறியில் கோடிகணக்கில் பணத்தை "குதிரை பேரம்" பேசி எதிர்கட்சி மற்றும் சுயேட்சை எம்பிக்களை வலை போட்டு இழப்பர். ஆக மொத்தம் இந்த நாடாளுமன்றத் தேர்தல் "தொங்கு" அரசுதான் ஏற்பட்டு அமளி துமளி என ஆளும் தொங்கு அரசுக்கும் எதிர் கட்சிக்கும் பார்லிமென்ட்லில் சர்ச்சைகள் ஏற்பட்டு பார்லிமென்ட் அன்றாட மக்கள் பணியும், நல திட்டமும் முடங்கி போகும். இதனால் பாதிக்கப்படபோவது " ஒட்டு" போட்ட ஒட்டு மொத்த இந்திய மக்கள். சந்தேகமே இல்லை. இந்த குதிரை பேரத்தில் சும்மா உட்கார்ந்த இடத்திலேயே சம்பாதிக்க போவது எதிர் கட்சி மற்றும் சுயேட்சை எம்.பிக்கள் ஆவர். ஏமாற போவது வேர்த்து வியர்த்து கீயூவில் மணிக்கணக்கில் நின்று ஓட்டு போட்டு " ஜனநாயக கடமையை நிறைவேற்றிய இந்திய தேச பாரத மக்கள்.

Rate this:
kurinjikilan - Madurai,இந்தியா
14-மே-201908:57:57 IST Report Abuse

kurinjikilanதகுதியற்றவர்களில் முதல்வராக இவர் இருக்கிறார்..அகிலேஷ் இப்போது சும்மா பில்ட் டப் தருகிறார்..இவர் கட்சிக்கு கிடைக்கும் தொகுதிகளை விட அகிலேஷுக்கே அதிகம் கிடைக்க வாய்ப்புள்ளது.. நிச்சயம் NDA க்கு தனிப்பெரும்பான்மை கிடைக்கும்..அதுவரை அனைவரும் வைகோ,சைமன்,குருமா வுக்கு கூட பிரதமர் கனவு காண தகுதியுள்ளது..

Rate this:
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
14-மே-201908:31:17 IST Report Abuse

Srinivasan Kannaiyaதேர்தலுக்குப் பின், ஆதரவு தேவை என்ற சூழ்நிலையில், இந்தப் பேச்சு பாதிப்பை ஏற்படுத்துமா என்ற கேள்வி எழுந்துள்ளது..........தற்கால அரசியவாதிகள் உணவில் உப்புபோட்டுகொள்ளுவதில்லை... எனவே யார்வந்தாலும் பதவி கொடுத்தால் பணம் சேர்க்க அந்த பக்கம் சென்றுவிடுவார்கள் என்பதில் ஐயமில்லை

Rate this:
மேலும் 7 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X