பதிவு செய்த நாள் :
'ஒவ்வொரு வீட்டிலும் மோடி அலை'
தேர்தல் பிரசாரத்தில், பிரதமர் பெருமிதம்

ரட்லம்: ''இந்த தேர்தலில், நாடு முழுவதும், ஒவ்வொரு வீட்டில் இருந்தும், மோடி அலை பொங்கிப் பிரவாகமெடுத்துள்ளது,'' என, பிரதமர் மோடி தெரிவித்து உள்ளார்.

மோடி அலை, பிரதமர், மோடி, பிரசாரம், பெருமிதம், Modi, BJP, பா.ஜ


மத்திய பிரதேசத்தில், ரட்லம், இந்துார் லோக்சபா தொகுதிகளிலும், ஹிமாச்சலப் பிரதேசத்திலும், மோடி தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசியதாவது: அரசியல் மேதாவிகளும், டில்லியில் கட்டுக் கதைகளை பரப்புவோரும், இந்த தேர்தலில் மோடி அலை வீசவில்லை என, முதலில் கூறினர்.

சாதனைகள்:


தற்போது, ஓட்டு சதவீதம் அதிகரித்ததும் அவர்கள் கவலை அடைந்து உள்ளனர். அவர்களுக்கு, சாதனைகளை உருவாக்கும், இரு தரப்பு மக்களை பற்றி தெரியவில்லை. முதல் முறையாக ஓட்டு போடுவோரும், என் தாய்மார்கள்

மற்றும் சகோதரிகள் தான், அந்த இரு தரப்பினர். பாலியல் கொடூரத்துக்கு, துாக்கு தண்டனையை உறுதி செய்த, இந்த சகோதரனை மீண்டும் பிரதமராக்க, அவர்கள் முடிவெடுத்து விட்டனர். அதற்காகவே, சாரை சாரையாக ஓட்டுச் சாவடிக்கு வந்து ஓட்டளிக்கின்றனர்.

நாடு முழுவதும், ஒவ்வொரு வீட்டில் இருந்தும், மோடி அலை வெள்ளமாக பொங்கிப் பிரவாகமெடுத்துள்ளது. சீக்கியர் கலவரத்தை, 'நடந்தது நடந்து விட்டது, என்ன செய்ய...' என, காங்கிரஸ் தலைவர், சாம் பிட்ரோடா தெரிவித்துள்ளார். போபால் விஷவாயு துயரம், 'காமன் வெல்த்' விளையாட்டு ஊழல், '2ஜி' ஊழல் என, அனைத்திலும், இதே மனப்பான்மையில் தான் காங்கிரஸ் உள்ளது.

பதிலடி:


இந்த ஆணவ பேச்சுக்கு, காங்கிரஸ் ஆட்சியில் வீடு, மின்சாரம், சமையல் எரிவாயு சிலிண்டர், கழிப்பறை இல்லாமல் அவதிப்பட்ட மக்கள், 'பட்டதெல்லாம் போதும்' என, தற்போது பதிலடி தருகின்றனர். நான், மக்களை கடவுளாக மதிக்கிறேன். ஆனால், மத்திய பிரதேச காங்கிரஸ் அரசு, உறுதி அளித்தபடி, விவசாய கடன்களை தள்ளுபடி செய்யாமல், மக்களாகிய கடவுளை ஏமாற்றி விட்டது.

Advertisement

நான், ஜனாதிபதி, துணை ஜனாதிபதி என, எல்லாரும் ஓட்டளித்து, ஜனநாயக கடமை ஆற்றினோம். ஆனால், போபாலில் போட்டியிடும், காங்., விஜய் சிங், ஓட்டு போடாமல், மிகப் பெரிய ஜனநாயக பாவத்தை செய்து உள்ளார். லோக்சபா சபாநாயகர், சுமித்ரா மகாஜன், கடுமையான உழைப்பாளி. இந்துார் தொகுதி மக்களால், 'தாய்' என அன்போடு அழைக்கப்படுபவர். கட்சியில், என்னை அன்போடு கடிந்து கொள்ளும் நபர் ஒருவர் உண்டென்றால், அது, தாய் தான்.

நம் ராணுவத்திற்கான தளவாடங்களில், 70 சதவீதம் வெளிநாடுகளில் தான் கொள்முதல் செய்கிறோம். இதை, முந்தைய காங்கிரஸ் அரசு, ஏ.டி.எம்., போல பயன்படுத்தி வந்தது. இதன் காரணமாகத்தான், நம் வீரர்களுக்கு, குண்டு துளைக்காத ஜாக்கெட்கள் வாங்கும் ஒப்பந்தத்தை, ஆறு ஆண்டுகள் தாமதப்படுத்தியது. இவ்வாறு, அவர் பேசினார்.


Advertisement

வாசகர் கருத்து (41)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ஜெய்ஹிந்த்புரம் - மதுரை,இந்தியா
19-மே-201900:24:00 IST Report Abuse

ஜெய்ஹிந்த்புரம்இந்த மோடியால் மக்கள் அலையோ அலைன்னு அலையிறதை தன இப்படி சொல்லுறாரு.. கையில் இருக்கும் காசு செல்லா காசாகி சில்லறைக்கு அலைஞ்சதில் ஆரம்பித்து, கேஸுக்கு அலைவது, பெட்ரோல் போட காசில்லாமல் அலைவது, ரெயிலுக்கு அலைவது, பஸ்ஸுக்கு அலைவது, ஒரு வாய் குடிநீருக்கு அலையிறது, விவசாயி வாழ்வாதாரத்திற்கு அலையிறது, படிச்சவன் வேலையில்லாமல் வேலையை தேடி அலைவது, என்று அலையோ அலை தான்.. அதை தான் மோடி அலைன்னு சொல்லுறாரு இந்த மோடி.

Rate this:
Arachi - Chennai,இந்தியா
14-மே-201918:06:51 IST Report Abuse

Arachi. இந்த முறை உம் பருப்பு வேகாது.

Rate this:
Ab Cd - Dammam,சவுதி அரேபியா
14-மே-201912:24:47 IST Report Abuse

Ab Cdஒவ்வொரு வீட்டிலும் மோடி அலை ஆனால் அது ஓட்டில் பிரதிபலிக்காது

Rate this:
மேலும் 38 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X