பதிவு செய்த நாள் :
'கலவர கருத்துக்கு
பிட்ரோடா வெட்கப்படணும்'

கன்னா: ''கடந்த, 1984ல் நடந்த, சீக்கியர் படுகொலை தொடர்பான கருத்துக்கு, கட்சியின் மூத்த தலைவர், சாம் பிட்ரோடா வெட்கப்பட வேண்டும்; அவர் நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளேன்,'' என, காங்கிரஸ் தலைவர், ராகுல் கூறியுள்ளார்.

கலவரம், கருத்து, பிட்ரோடா, வெட்கம், ராகுல் ,காங்


காங்.,கைச் சேர்ந்த முன்னாள் பிரதமர் இந்திரா, 1984ல், சீக்கியர் பாதுகாவலர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். அதைத் தொடர்ந்து, டில்லி, பஞ்சாப் உள்ளிட்ட இடங்களில் நடந்த வன்முறைகளில், 3,000க்கும் மேற்பட்ட சீக்கியர்கள் கொல்லப்பட்டனர்.

இது குறித்து, காங்., மூத்த தலைவர், சாம் பிட்ரோடா சமீபத்தில் கருத்து தெரிவித்திருந்தார். 'ஆமாம் நடந்தது நடந்து விட்டது, என்ன செய்ய...' என, அவர் கூறியது, பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. பா.ஜ., உள்ளிட்ட கட்சி கள், இதற்கு கண்டனம் தெரிவித்துள்ளன. காங்.,கைச் சேர்ந்த, பஞ்சாப் முதல்வர், அமரீந்தர் சிங், 'இந்தப் பேச்சு அதிர்ச்சி அளிக்கிறது' என, கூறியிருந்தார்.

இதையொட்டி, சமூக வலைதளத்தில் வெளியிட்ட செய்தியில், 'சீக்கியர் படுகொலை மிகவும் மோச மான சம்பவம் என்பதே, காங்.,கின் நிலைப்பாடு. 'அந்த படுகொலைக்காக, மன்னிப்பும் கேட்கப்பட்டு உள்ளது. இந்நிலையில், பிட்ரோடாவின் பேச்சை நிராகரிக்கிறேன். அவர் மன்னிப்பு கேட்க வேண்டும்' என, ராகுல் கூறியிருந்தார்.

இந்நிலையில், லோக்சபாவுக்கு, வரும், 19ல் நடக்கும் ஏழாவது கட்டத்தில் தேர்தலை

Advertisement

சந்திக்கும் பஞ்சாபின் கன்னா தொகுதியில், நேற்று நடந்த, காங்., பிரசார கூட்டத்தில், ராகுல் பேசியதாவது: சீக்கியர் படுகொலை தொடர்பான தன் பேச்சுக்கு, சாம் பிட்ரோடா வெட்கப்பட வேண்டும். அவருடைய பேச்சு முழுவதும் தவறானது. இதற்காக, நாட்டு மக்களிடம் அவர் மன்னிப்பு கேட்க வேண்டும். அவரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு இதை நான் கூறியுள்ளேன். இந்த பிரசார கூட்டத்திலும், அதை நான் வலியுறுத்துகிறேன். இவ்வாறு, அவர் பேசினார்.


Advertisement

வாசகர் கருத்து (11)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Krish Sami - Trivandrum,இந்தியா
14-மே-201913:52:32 IST Report Abuse

Krish Samiகொள்ளைக்கார குடும்பம் என்பதறிவோம், கொலைகார குடும்பம் என்பதும் அறிவோம், நாட்டை துண்டாட தூண்டும் வண்ணம் ஆட்சி செய்த எடுத்துக்காட்டு: நதி நீர் பங்கீடு கயமை குடும்பம் என்பதும் அறிவோம். இந்த கேடு கெட்ட குடும்பம் மீண்டும் ஆள வேண்டும் என்பது பேராசை, அப்படி நேர்ந்தால் அது நாட்டுக்கு நேர்ந்த மற்றோர் விபத்தாக அமையும். நேராதென நம்புவோம்.

Rate this:
ganapati sb - coimbatore,இந்தியா
14-மே-201912:21:08 IST Report Abuse

ganapati sbசீக்கிய படுகொலை காரணமான காங்கிரஸ் ஏற்கனவே மன்மோகனை பிரதமராக்கி பிராயச்சித்தம் செய்து விட்டது அதுபோல ஈழ தமிழர் படுகொலைக்கு காரணமான காங்கிரஸ் அழகிரியை பிரதமராக்கி பிராயச்சித்தம் செய்யவேண்டும்

Rate this:
Anand - chennai,இந்தியா
14-மே-201912:12:54 IST Report Abuse

Anandநீயே வெட்கப்படாமல் தொடர்ந்து பொய் பேசி திரியும் பொது, உன்னுடைய அடிவருடி மட்டும் எப்படி வெட்கப்படுவான். கெட்ட குருவுக்கு கேடுகெட்ட சிஷ்யன்.

Rate this:
மேலும் 8 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X