பொது செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
மே 27 வரை நடத்தை விதிகள் அமல்
தேர்தல் அதிகாரி அறிவிப்பு

சென்னை: 'இடைத்தேர்தல் நடக்க உள்ள சட்டசபை தொகுதிகளில் வாக்காளர் அடையாள அட்டை இல்லாதவர்கள் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ள ஆவணங்களை காண்பித்து தேர்தலில் ஓட்டளிக்கலாம்' என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு தெரிவித்துள்ளார்.

நடத்தை விதிகள்,அமல்,தேர்தல்,அதிகாரி,அறிவிப்பு


அவரது அறிக்கை: இடைத்தேர்தல் நடக்கவுள்ள நான்கு சட்டசபை தொகுதிகளில் வாக்காளர் புகைப்பட அடையாள அட்டை வைத்துள்ள வாக்காளர்கள் அதை காண்பித்து ஓட்டளிக்க வேண்டும். வாக்காளர் அட்டை இல்லாதவர்கள் 'பாஸ்போர்ட்' மற்றும் ஓட்டுனர் உரிமம்

மத்திய அரசு நிறுவனங்கள் வழங்கியுள்ள புகைப்படத்துடன் கூடிய பணி அடையாள அட்டையை காண்பிக்கலாம்.

மேலும் புகைப்படத்துடன் கூடிய வங்கி அல்லது தபால் அலுவலக கணக்கு புத்தகங்கள், 'பான் கார்டு ஆதார் கார்டு' உட்பட தேர்தல் ஆணையம் அறிவித்துள்ள 11 ஆவணங்களை காண்பித்தும் ஓட்டளிக்கலாம். தேர்தல் ஆணையம் சார்பில் வழங்கப்படும் 'பூத் சிலிப்' அடையாள அட்டையாக ஏற்கப்படாது. வாக்காளர் பட்டியலில் பெயர் உள்ளோர் மட்டுமே ஓட்டளிக்க முடியும். வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாமல் வாக்காளர் அடையாள அட்டை வைத்திருந்தாலும் அவர் ஓட்டளிக்க முடியாது.

நடத்தை விதிகள்:
தமிழகத்தில் 39 லோக்சபா தொகுதிகளுக்கான பொதுத்தேர்தல்; 18 சட்டசபை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் அறிவிப்பை மார்ச் 10ல் தேர்தல் ஆணையம் வெளியிட்டது.

Advertisement

அன்று முதல் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்தன. இவற்றில் வேலுார் லோக்சபா தொகுதி தவிர மற்றவற்றுக்கு ஏப். 18ல் தேர்தல் முடிந்தது. நான்கு சட்டசபை தொகுதிகளுக்கு வரும் 19ம் தேதி தேர்தல் நடக்க உள்ளது.

அனைத்து தொகுதிகளுக்கான ஓட்டு எண்ணிக்கை வரும் 23ம் தேதி நடக்கிறது. தேர்தல் நடைமுறைகள் வரும் 27ல் முடிவுக்கு வரும். தேர்தல் நடைமுறைகள் முடிவுக்கு வரும் வரை அதாவது 27ம் தேதி வரை மாநிலம் முழுவதும் தேர்தல் நடத்தை விதிகளும் அமலில் இருக்கும். இவ்வாறு கூறியுள்ளார்.


Advertisement

வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
R chandar - chennai,இந்தியா
14-மே-201911:02:29 IST Report Abuse

R chandarThis rule is unwanted one

Rate this:
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
14-மே-201908:22:47 IST Report Abuse

Srinivasan Kannaiyaஒரு பயலும் கேக்காத ஒரு விதிமுறைகள்

Rate this:
Suresh - chennai,இந்தியா
14-மே-201907:47:08 IST Report Abuse

Sureshஎங்காவது ஒரு அறிவிப்பாளர் வேலைக்கு இந்த தேர்தல் அதிகாரி சாஹு போகலாம். ஒரு அதிகாரமும் இல்லாமல்,ஆளுங் கட்சி பேச்சை கேட்டு நடக்கும் இந்த மாதிரி அதிகாரி தேர்தல் ஆணையத்துக்கு தேவையில்லை. அட்டர் வேஸ்ட்.

Rate this:
மேலும் 3 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X