அரசியல் செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
முதல் தீவிரவாதி ஒரு ஹிந்து
கமல் சர்ச்சை பேச்சு

கரூர்: ''சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு ஹிந்து. அவர் பெயர் நாதுராம் கோட்சே'' என மக்கள் நீதி மையம் தலைவர் கமல்ஹாசன் பேசினார்.

தீவிரவாதி,ஹிந்து,கமல்,சர்ச்சை பேச்சு


கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி சட்டசபை தொகுதி வேட்பாளர் மோகன்ராஜை ஆதரித்து பள்ளப்பட்டியில் நேற்று முன்தினம் இரவு கமல் பேசியதாவது: பள்ளப்பட்டி ஷா நகரில் பேச வேண்டியது; அனுமதி இல்லை. எங்கெல்லாம் எனக்கு ஆதரவு இருக்கிறதோ அங்கெல்லாம் பேச அனுமதி மறுக்கப்படுகிறது. உத்தமர்கள் போல பேசிக் கொண்டிருக்கின்றனர்.

மூடை மூடையாக பணம் கண்டுபிடிக்கப்பட்டு போட்ட வழக்குகள் என்ன ஆனது. மாறி மாறி இரண்டு பேரும் கொள்ளை அடித்தது போக எஞ்சிய சக்கை தான் தமிழ்நாடு. மத நல்லிணக்கம் மத ஒற்றுமை என பேசுகின்றனர். பிரதமர் மோடியை விமர்சனம் செய்கின்றனர். தேசிய கொடியில் உள்ள மூன்று வண்ணங்களும் அப்படியே இருக்க வேண்டும்.

ஒரு வண்ணம் மட்டும் கொடியை நிரப்ப கூடாது. அது எந்த வண்ணமாக இருந்தாலும் சரி. தீவிரவாதம் எந்த மதத்தில் இருந்தாலும் தவறு தான். இங்கு முஸ்லிம்கள் அதிகம் இருப்பதால் இதை சொல்லவில்லை. காந்தி சிலை முன் சொல்கிறேன். சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு ஹிந்து. அவன் பெயர் நாதுராம் கோட்சே. நான் காந்தியின் மானசீக கொள்ளுப் பேரன்.

அந்த கொலைக்கு கேள்வி கேட்க வந்துள்ளேன். சமரச சமமான இந்தியாவாக இருக்க வேண்டும் என்பது நல்ல இந்தியர்களின் ஆசை. நான் நல்ல இந்தியன். மனிதர்களை நேசிக்கிறேன். அறிவார்ந்தவர்கள் எந்த ஜாதியில் இருந்தாலும் மதத்தில் இருந்தாலும் அவர்கள் என் உறவினர்கள். இவ்வாறு அவர் பேசினார். கமல் பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. பல்வேறு தரப்பிலும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

அன்று பணத்துக்காக மண்டியிட்டாரே!


'சுதந்திர இந்தியாவின் முதல் பயங்கரவாதி ஒரு ஹிந்து ' என்ற கமல்பேச்சுக்கு அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்; சிலர் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

தமிழக பா.ஜ. தலைவர் தமிழிசை: புதிய அரசியலை முன்னெடுப்பதாக சொல்லும் கமல் பழைய விஷமத்தனமான விஷம் பொருந்திய பிரித்தாளும் ஓட்டு அரசியலில் அப்பட்டமாக ஈடுபட்டு இருக்கிறார். வாழ்க்கையில் ஒழுக்கத்தை கடைப்பிடித்தவர் காந்தி. வாழ்வில் எந்த ஒழுக்கத்தையும் கடைப்பிடிக்காத கமல் தான் காந்தியின் கொள்ளுப் பேரன் என்று சொல்ல எந்தத் தகுதியும் இல்லாதவர். அரசியலில் நுழைந்து ஏதாவது ஒரு வகையில் மக்களை கவர வேண்டும் என்று பேசுவது கண்டிக்கத்தக்கது. அவர் மீது தேர்தல் ஆணையம் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். அவரது பிரசாரம் தடை செய்யப்பட வேண்டும். காவல் துறை அவர் மீது சட்டரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். தன் படத்திற்கு தடை ஏற்பட்டதால் 'நாட்டை விட்டே ஓடுவேன்' என்று தன் விஸ்வரூபத்தை காட்டிய கமல் இன்று நாட்டை பற்றியும் காந்தி குறித்தும் பேசுவது அப்பட்டமான அரசியல் நடிப்பு.

பா.ஜ., தேசிய செயலர் எச்.ராஜா: கமலை அடையாளம் காண்போம். மக்கள் நீதி மையம் முளையிலேயே கிள்ளி எறியப்பட வேண்டிய விஷச்செடி. சிறுபான்மையினர் ஓட்டுக்காக ஹிந்துக்களை இழிவுப்படுத்தும் செயலை பாருங்கள். கமலால் 1 சதவீத ஓட்டுகளை கூட வாங்க முடியாது. ஆனால் 'விஸ்வரூபம்' படத்திற்கு கேவலம் பணத்திற்காக மண்டியிட்டதை மறக்க முடியவில்லை. கமலை விட அரசியல் விஷம் வேறு யாரும் இருக்க முடியாது. தமிழக அரசியலில் மக்கள் இவரை நுழைய விட மாட்டார்கள்.

தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி: சுதந்திர இந்தியாவின் முதல் பயங்கரவாதி மட்டுமல்ல. நாட்டில் ஆர்.எஸ்.எஸ். ஜன சங்கம் ஹிந்து மகா சபை போன்றவற்றில் உள்ளவர்கள் மாற்று கருத்து உள்ளவர்களை அழிக்க வேண்டும் என்பதில் உறுதியான நம்பிக்கை உடையவர்கள். ஐ.எஸ். என்ற பயங்கரவாதம் இருப்பது போல அதற்கு இணையான அமைப்பு ஆர்.எஸ்.எஸ். எனவே கமல் கூறியதை ஆயிரம் சதவீதம் ஆதரிக்கிறேன்.

தி.க., தலைவர் வீரமணி: கோட்சே ஆர்.எஸ்.எஸ்.சில் பயிற்சி பெற்றவர். முதலும் அவர்கள் தான்; கடைசியும் அவர்கள் தான். அதைத் தான் கமல் கூறியுள்ளார்.

அமைச்சர் ராஜேந்திர பாலாஜி: கமலின் கொழுப்பேறிய நாக்கை அறுக்க வேண்டும். அவருக்கு தற்போது நாக்கில் சனி. பயங்கரவாதத்திற்கு மதம் கிடையாது. ஹிந்து முஸ்லிம் கிறிஸ்தவர் என்று கிடையாது. ஹிந்து முதல் பயங்கரவாதி எனக் கூறி சிறுபான்மையின மக்கள் ஓட்டுகளைப் பெற நடிக்கும் கமலின் நாக்கை ஒரு காலத்தில் அறுக்கத் தான் போகின்றனர்.

Advertisement

ஏனெனில் ரொம்ப பேசுகிறார். யாரையோ திருப்திப்படுத்த வார்த்தையை உளறி கொட்டுகிறார்; விஷத்தை கக்குகிறார். கமல் கட்சியை தடை செய்ய வேண்டும். அவர் மீது தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

விவேக் ஓபராய் எதிர்ப்பு:


'தயவு செய்து நாட்டை பிரிக்க வேண்டாம்' என கமலுக்கு நடிகர் விவேக் ஓபராய் வேண்டுகோள் விடுத்துள்ளார். கமல்பேச்சுக்கு அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்த நிலையில் திரையுலகிலும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. 'டுவிட்டர்' வலைதளத்தில் இது தொடர்பாக தனி பட்டிமன்றமே நடந்து வருகிறது.

ஹிந்தி நடிகர் விவேக் ஓபராய் 'டுவிட்டரில்' கூறியிருப்பதாவது: கமல் நீங்கள் ஒரு சிறந்த நடிகர். கலைக்கு எப்படி மதம் இல்லையோ அது போல பயங்கரவாதத்திற்கும் மதமில்லை. கோட்சேவை நீங்கள் பயங்கரவாதி என சொல்லலாம். ஆனால் ஏன் ஹிந்து என்பதை குறிப்பிட்டு சொல்ல வேண்டும்? நீங்கள் ஓட்டு சேகரிப்பது இஸ்லாமியர்கள் வாழும் பகுதி என்பதாலா? ஒரு சிறு நடிகனிடம் இருந்து பெரிய நடிகனுக்கு வேண்டுகோள். தயவு செய்து இந்த நாட்டை பிரிக்க வேண்டாம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

கமல் பிரசாரம் ரத்து:

இந்நிலையில் நேற்று நடக்கவிருந்த கமலின் இரண்டாம் நாள் பிரசாரம் ரத்து செய்யப்பட்டது. சர்ச்சை கருத்துதான் இதற்கு காரணம் என கூறப்பட்டது. இதுகுறித்து கட்சியின் மாவட்ட பொறுப்பாளர் புகழ் முருகன் கூறியதாவது: அரவக்குறிச்சியில் நேற்று முன்தினம் வேனில் நின்றபடி கமல்ஹாசன் பிரசாரம் செய்தார். நேற்று பிரசாரத்திற்கு நாங்கள் அனுமதிகோரிய நான்கு இடங்களை ஒட்டியுள்ள பகுதிகளில் முதல்வர் பழனிசாமி, வைகோ ஆகியோர் பிரசாரத்திற்கு முன் கூட்டியே அனுமதி பெற்றுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இதனால் நேற்றைய பிரசாரம் ரத்து செய்யப்பட்டது. கமல் சென்னை சென்று விட்டார். வரும் 16ம் தேதி வேலாயுதம்பாளையத்தில் பொதுக்கூட்டம் நடத்த முடிவு செய்துள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.


Advertisement

வாசகர் கருத்து (99)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
R S GOPHALA - Chennai,இந்தியா
17-மே-201916:21:01 IST Report Abuse

R S GOPHALAபோடா பொறம்போக்கு. பைசா செலவில்லாம "விளம்பரம்" தேடிகிட்ட. நீ ஒரு "அல்பம்". இப்புடி ஒரு பொழப்பு தேவையா ஒனக்கு ? கஞ்ச கருமாந்திரம்... பிச்சைக்காரா.

Rate this:
Vasanth - Chennai,இந்தியா
17-மே-201903:25:00 IST Report Abuse

Vasanthஇங்கு சில கமலின் அனுதாபிகள், அவர் கூறியது உண்மை என சாதிக்கின்றனர். சரி எதை ஆதாரமாக வைத்து இந்து தீவிரவாதி என கமல் கூறுகிறார் என்று நாமும்தான் பார்ப்போமே அதற்கு முன்னாள் கோட்சே யார் என்பதையும் ஒரு முறை சுருக்கமாக பார்த்துவிடுவோம்... கோட்சே, காந்தியின் கொள்கையினால் ஈர்க்கப்பட்டு இந்து தேசியவாதத்தின் வலதுசாரி ஆதரவாளராக இருந்தார். பல்லாயிரக்கணக்கான இந்து ஆண்கள் கொல்லப்பட்டும், பெண்கள், குழந்தைகள் இந்திய பிரிவினையால் பிரிக்கப்பட்ட இடத்திலிருந்து துரத்தப்பட்டும், விற்கப்பட்டும், துன்பபடுவதையும் பார்த்து மிகவும் வருந்தினார். காந்தி இந்தியப் பிரிவினைக்கு ஆதரவாக செயல்படுவதை எதிர்த்து இக்கொலைச் செயல் புரிந்தார். இச்செய்தி ஆல் இந்திய ரேடியோவில் "Gandhi was killed by as assassin's bullet today. The assassin was a Hindu." இதுதான் அன்று உண்மையில் நடந்த நிகழ்ச்சி. இதில் "assassin" என்ற வார்த்தைக்கு பொருள் "கொலையாளி" என்பதாகும் "தீவிரவாதி அல்ல". அப்போதைய சூழலில் மதக்கலவரம் கடுமையாக இருந்தது. உண்மை தெரியாமல், இந்துக்களால் ஏதும் பிரச்சினையும் வந்துவிடகூடாது என்பதற்காகவே கொலையாளி "assassin was Hindu" என்ற வார்த்தையை பயன்படுத்தினர்... இந்த சரித்திர நிகழ்ச்சியைத்தான் கமல் தன் அரசியல் ஓட்டு வங்கிக்காக "Hindu" என்ற வார்தையினை எடுத்துக் கொண்டு, "assassin" என்ற வார்த்தையினை "terrorist" எனவும் திரித்து கூறினார். கூடவே ஒரு துணைக்கு காந்தியின் பேரன் என்ற உறவு முறையினையும் கூறிக்கொண்டார். தன் சொந்த பெற்றோரை, உடன் பிறந்தோரை, உறவுகளை வெறுத்து ஒதுங்கி வந்தவருக்கு திடீரென்று கொள்ளு தாத்தாவின் மீது பாசம் எங்கிருந்து வந்தது என்று தெரியவில்லை.. ஒரேஒரு கேள்வி கமல் பிரச்சாரம் செய்த இடம் நீதிமன்றமும் இல்லை, அங்கு இவரின் குடும்பம் மற்றும் மதம் தொடர்பானவர்களும் இல்லை. பிறகு யாரிடம் இந்த கொள்ளு பேரன் தன் தாத்தாவிற்காக நீதி கேட்டார்? கமலின் ஆதரவாளர்களே இப்பொழுதாவது மனதார சிந்தியுங்கள். வரலாற்று உண்மையினை இணைய தளத்தில் தேடி படியுங்கள். "இந்துக்கள்" என்றால் ஒருசாராரை மட்டும் அல்ல ஒட்டுமொத்த இந்துமக்கள் அனைவரையுமே குறிக்கும். முதல் இந்து தீவிரவாதி என்றால் இந்துக்கள் அனைவருமே தீவிரவாதி என்கிறார். அதற்காகத்தான் இந்துக்ககள் கோபபடுகிறோம். அவருடைய ஒவ்வரு படங்களையும் ரசிகராக மட்டும் பார்க்காமல் அவரின் உள்நோக்கத்தினை அறிந்துகொள்ளும் நோக்கோடு பாருங்கள். உங்கள் குடும்பத்தினர்களை நினைத்து பாருங்கள்.

Rate this:
Nethiadi - Chennai ,இந்தியா
16-மே-201910:37:25 IST Report Abuse

Nethiadi உண்மையா சொன்னதுக்கு எதுக்கு அலப்பறை?

Rate this:
மேலும் 96 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X