சூலுாரில் நடக்குது ஆர்.கே.நகர் பாலிசி! | Dinamalar

சூலுாரில் நடக்குது ஆர்.கே.நகர் 'பாலிசி!'

Added : மே 14, 2019
Share
'டிவி'யில் ஒளிபரப்பாகிக் கொண்டிருந்த, தேர்தல் செய்திகளை உன்னிப்பாக கவனித்துக் கொண்டிருந்தாள் சித்ரா.மார்க்கெட் சென்றிருந்த மித்ரா, முனகிக் கொண்டே, காய்கறி பையுடன் வீட்டுக்குள் நுழைந்தாள்.''என்ன, முனகல் சத்தம் ஜாஸ்தியா இருக்கே, என்னாச்சு,'' என, கேட்டாள் சித்ரா.''ஸ்மார்ட் சிட்டின்னு பேருக்குதான் சொல்றாங்க போலிருக்கு. எங்க பாத்தாலும் குப்பையா கெடக்கு.
 சூலுாரில் நடக்குது ஆர்.கே.நகர் 'பாலிசி!'

'டிவி'யில் ஒளிபரப்பாகிக் கொண்டிருந்த, தேர்தல் செய்திகளை உன்னிப்பாக கவனித்துக் கொண்டிருந்தாள் சித்ரா.மார்க்கெட் சென்றிருந்த மித்ரா, முனகிக் கொண்டே, காய்கறி பையுடன் வீட்டுக்குள் நுழைந்தாள்.''என்ன, முனகல் சத்தம் ஜாஸ்தியா இருக்கே, என்னாச்சு,'' என, கேட்டாள் சித்ரா.''ஸ்மார்ட் சிட்டின்னு பேருக்குதான் சொல்றாங்க போலிருக்கு. எங்க பாத்தாலும் குப்பையா கெடக்கு. கோடிக்கணக்குல 'பிளான்' போடுறாங்க.
ஆனா, மார்க்கெட்டுக்குள்ள போயிட்டு வர முடியலை,'' என புலம்பித் தள்ளினாள் மித்ரா.''கார்ப்பரேஷன்ல சுகாதார ஆய்வாளரா இருக்கறவங்க, 15 வருஷமா, குறிப்பிட்ட சில வார்டுகள்ல வேலை பார்க்குறாங்க. எந்த வேலையும் உருப்படியா நடக்குறதில்ல. பிளாஸ்டிக் 'ரெய்டு' கூட மேலோட்டமா செய்றாங்க. வேண்டப்பட்டவங்க கடைகளா இருந்தா கண்டுக்காம விட்டுடுறாங்க,'' என்றாள் சித்ரா.''அப்ப என்னதான் தீர்வு,'' என்று கேட்டாள் மித்ரா.''அவுங்கள, வார்டு விட்டு வார்டு மாத்துனா போதும்; ஊரும் சுத்தமாகும். கார்ப்பரேஷன் வேலையும் 'மளமள'ன்னு நடக்கும்,'' என்றாள் சித்ரா.''கொஞ்ச நாளைக்கு முன்னாடி, கார்ப்பரேஷன் ஆபீசுக்கு போயிருந்தேன். உயரதிகாரிகளுக்கு எதுக்கு இவ்ளோ 'ஓ.ஏ.,'க்கள் இருக்காங்க. ஒரு அதிகாரிக்கு ஒருத்தர் இருந்தா, போதாதா?'' என்று கேட்டாள் மித்ரா.அதற்கு சித்ரா, ''ஆமா, நானும் பார்த்திருக்கேன். கமிஷனர், துணை கமிஷனர், நகர பொறியாளர், நிர்வாக பொறியாளர், நகர் நல அலுவலர், உதவி கமிஷனருக்கு (வருவாய்) மட்டும், மூணு பேருக்கு மேல உதவியாளர் இருக்காங்க,'' என்றாள்.உடனே மித்ரா, ''சரியா சொன்னே. டவுன்ஹால் ஆபீசுல, சிட்டி இன்ஜினியருக்கு ரெண்டு ரூம் இருக்கு.
அவரு, ஜே.என்.என்.யு.ஆர்.எம்., அலுவலக அறையை மட்டும் பயன்படுத்துறாரு. பழைய பில்டிங்குல இருக்கற ரூம் பக்கம் எட்டிப்பார்க்கறதே இல்லை. ஆனா, அங்க ஒரு எழுத்தரும், ஒரு உதவியாளரும் இருக்காங்க. அதிகாரியே இல்லை; எதுக்கு ரெண்டு பேர நியமிச்சிருக்காங்க. இதுல, ஒருத்தரு, 20 வருஷமா 'சிட்டி' இன்ஜினியருக்கு 'சேவை' செஞ்சிக்கிட்டு இருக்கறதா, பேசிக்கிறாங்க,'' என்று ஆவேசம் குறையாமல் அடுக்கினாள்.''அப்புறம்... எலக் ஷன் நிலவரம்லாம் எப்படி இருக்கு மித்து,''''எப்பவுமே, தேர்தல் பார்வையாளரா, வடமாநில அதிகாரிகள நியமிப்பாங்க.
அவுங்களும், எங்கயாவது ஜாலியா சுத்திப்பார்க்க விரும்புவாங்க. உள்ளூர் அதிகாரிங்க சொல்றதை கேட்டுட்டு, ஆய்வுக்கூட்டத்துல கலந்துக்கிட்டு, காலத்தை ஓட்டுவாங்க. விதிவிலக்கா, ஒரு சில அதிகாரிங்க கேள்வி கேட்பாங்க; தவறுகளை சுட்டிக்காட்டுவாங்க. அப்படிப்பட்ட ஒருத்தர், சூலுார் இடைத்தேர்தலுக்கு வந்துருக்கார்,'' என்று பெருமையாக கூறினாள் மித்ரா.''வெரிகுட்...அது யாரு''அதற்கு மித்ரா, ''மேற்குவங்கத்தை சேர்ந்த உண்ணிகிருஷ்ணன்ங்கிற வருமான வரித்துறை அதிகாரியை, செலவின பார்வையாளரா நியமிச்சிருக்காங்க. கேள்வி மேல கேள்வி கேட்டு, அதிகாரிங்கள வறுத்தெடுக்குறாராம். கட்சிக்காரங்க செய்ற செலவையும் கணக்கெடுத்துக்கிட்டு இருக்காரு. தனக்குனு ஒதுக்கியிருக்கிற வீடியோகிராபரை அழைச்சுக்கிட்டு, பிரசாரம் நடக்குற இடத்துக்கு போறாராம்,'' என்றாள்.''ஆனா, ஓட்டு எண்ணிக்கை முடிஞ்சதும், தேர்தல் கமிஷன் கண்டுக்காம விட்டுருதே... நிர்ணயிச்சதை விட அதிகமா செலவழிச்சவங்க மேல, ஏதாவது நடவடிக்கை எடுத்தாதானே, கட்சிக்காரங்க மத்தியில பயம் வரும்,'' - சந்தேகத்தை கிளப்பினாள் சித்ரா.''நீ சொல்றதும் கரெக்டுதான், செய்யணுமே...'' என்ற மித்ரா, ''சூலுார்ல கரன்சி மழை கொட்டப் போகுதுன்னு சொல்றாங்க... உண்மையா,'' என, நோண்டினாள்.அதற்கு மித்ரா, ''ஆமாக்கா, ஆளுங்கட்சி தரப்புல, மூவாயிரம் கொடுக்குறதுக்கு 'பிளான்' போட்டுருக்காங்க. தி.மு.க., தரப்புல ரெண்டாயிரமும், அ.மு.மு.க., தரப்புல, 'ஆர்.கே.நகர் பாலிசி' மாதிரி, டோக்கன் அட்வான்சும் கொடுக்கப் போறாங்களாம்,'' என்று பட்டியலிட்டாள்.''இன்னொண்ணு கேளு... தி.மு.க.,வும் மூவாயிரம் கொடுத்தா, ஆளுங்கட்சி தரப்புல, நாலாயிரம் குடுக்க ஐடியா வச்சிருக்காங்க. இது தவிர, எலக் ஷன் முடிஞ்சதும், பேங்க் அக்கவுன்ட்டுல ரெண்டாயிரம் கொடுப்போம்னு, பிரசாரம் செஞ்சுக்கிட்டு இருக்காங்க...'' என, பொரிந்து தள்ளினாள் மித்ரா.
''சீட் கெடைக்காததால, செ.ம.வேலுசாமி ஒதுங்கி இருந்தாரே... ஆளுங்கட்சி ஓட்டு வங்கி பாதிக்காதா,'' மாஜியை மறக்காமல் கேட்டாள் சித்ரா.''அதிருப்தியில இருக்கற எல்லாத்தையுமே, சரிக்கட்டிட்டாங்களாம். இறுதி கட்ட பிரசாரத்துக்கு சி.எம்., தொகுதிக்குள்ள வரும்போது, செ.ம.,வும் கூடவே வருவாருன்னு சொல்றாங்க. தன்னோட ஆதரவாளர்கள, தேர்தல் வேலை செய்யச்சொல்லி, அறிவுறுத்தி இருக்காராம்,'' என்றாள் மித்ரா.''அதெல்லாம் சரி, அந்த ஊர்ல விஜிலென்ஸ் அதிகாரிங்க 'ரெய்டு' நடத்தியும், இன்னும் லஞ்சம் குறைஞ்சபாடு இல்லையே...''அதற்கு மித்ரா, ''அதுவா, சூலுார்ல இருக்கற மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகத்துல, கொஞ்ச நாளைக்கு முன்னாடி, சோதனை நடத்தி, ரெண்டு அதிகாரிகள்ட்ட இருந்து, பணம் பறிமுதல் செஞ்சாங்க. கண்காணிப்பாளரா இருந்த செல்விங்கிற அதிகாரியை, வேற ஊருக்கு 'டிரான்ஸ்பர்' செஞ்சாங்க. இன்னொரு அதிகாரியை வேற ஊருக்கு மாத்தி, 'ஆர்டர்' போட்டிருக்காங்க. அவரு, இன்னைக்கு வரைக்கும், 'டிரான்ஸ்பர்' ஆகி போகலை. லஞ்சம் வாங்குறது கொஞ்சம் கூட குறையலையாம்,'' என்றாள்.''அப்புறம்... போலீஸ் மேட்டர் ஏதுமில்லையா...,''''போலீஸ் ஸ்டேஷன்ல நடக்காத விஷயமா? செல்வபுரம் 'லிமிட்'டுல, மூணு நம்பர் லாட்டரி விற்பனை ஜோரா நடக்குதாம். ரத்தினபுரி, சரவணம்பட்டி ஸ்டேஷன் லிமிட்டுல 'பைனான்ஸ்' பஞ்சாயத்து, ஏகத்துக்கும் நடக்குதாம். பணம் மோசடி செஞ்சிட்டாங்கன்னு யாராவது புகார் கொடுத்தா, ஸ்டேஷன்ல இருந்தே, சம்பந்தப்பட்டவங்களுக்கு தகவல் போயிடுதாம். ரெண்டு தரப்பையும் கூப்பிட்டு, பஞ்சாயத்து பேசி, 'கணக்கு' தீர்த்து வைக்கிறாங்களாம்,'' என்று அடுக்கினாள் மித்ரா.தொடர்ந்த சித்ரா,
''கோவில்பாளையம் 'லிமிட்'டுல தேவம்பாளையத்துக்கு கிழக்கு பக்கத்துல, பணம் வச்சு, சேவல் சண்டை நடத்துறாங்களாம். ஆளுங்கட்சிக்காரங்க ஆதரவோட நடத்துறதுனால, போலீஸ்காரங்க கண்டுக்காம விட்டுடுறாங்க...,'' என்றாள்.நாளிதழ்களை அடுக்கிக் கொண்டிருந்த சித்ரா, ''பரளிக்காடு சூழல் சுற்றுலாவை பற்றி வந்திருந்த செய்தியை படித்து விட்டு, ''பரளிக்காடு பத்தி நியூஸ் வந்திருக்கு....'' என, ஆச்சரியத்துடன் படித்தாள்.''அதற்கு மித்ரா, அக்கா... கோடை விடுமுறைக்கு ஏகப்பட்ட பேரு, 'ஆன்லைன்'ல பதிவு செஞ்சு பரளிக்காடு போறாங்க. பல மலைகளை கடந்து, ரொம்பவும் கஷ்டப்பட்டு, போறாங்க.
ஒரு கப் சுக்கு காபி கொடுத்திட்டு, 45 நிமிஷம் பரிசல் சவாரி கூட்டிட்டு போறாங்க.''மலையேற்றத்துக்கு அனுமதிக்கறதில்லை. மலைவாழ் மக்கள் தயாரிக்கற சாப்பாடுன்னு சொல்றாங்களாம். ஆனா, ஓட்டல் சாப்பாடு மாதிரி இருக்குதாம். துாரி விளையாடுறதுக்கும் வசதி இல்லாததால, குழந்தைங்க 'அப்செட்' ஆகிடுறாங்க. பவானி ஆத்துல குளிக்கிறதுக்கு, மலைப்பாதையில, 15 கி.மீ., தள்ளி அழைச்சிட்டுப் போறாங்க,'' என்றாள்.''அட...அப்புறம்,''''இன்னும் கேளு...அங்க, இடுப்பளவுக்குதான் தண்ணி தேங்கியிருக்கிறதுனால, டூர் போறவங்க ரொம்பவே ஏமாந்து போறாங்க. இனியாவது, 'ஸ்பெஷல் பர்மிஷன்' வாங்கி, நிறைய வசதி செஞ்சு கொடுக்க, வனத்துறை ஏற்பாடு செய்யணும்னு புலம்புறாங்க,'' என்று முடித்தாள் மித்ரா.
''நம்மூர்ல இருந்து, 50 ஓட்டிங் மெஷின் எடுத்துட்டு போனாங்களே. அதுல வில்லங்கம் இருக்கா...''''அதுவா, எனக்கு தெரிஞ்ச எலக் ஷன் ஆபீசர்கிட்ட விசாரிச்சேன். எல்லா தொகுதியிலும், 20 சதவீத ஓட்டு இயந்திரம் 'ரிசர்வ்'ல இருக்குமாம். தேனியிலும் இருக்கத்தான் செய்யும். அதை, 'யூஸ்' பண்ணலாம். அந்த தொகுதியில, ரெண்டே ரெண்டு ஓட்டுச்சாவடியிலதான், மறுஓட்டுப்பதிவு நடக்கப்போகுது. இங்கிருந்து எடுத்துட்டு போயிருக்கவே வேண்டியதில்லைன்னு சொன்னாரு...''''அப்படியா...?''''ஆனா... நடிகர் கமலும் தேர்தல் பிரசாரத்துக்கு வந்தப்ப, பேசுன பேச்ச பார்த்தியா,''''என்ன... என்ன பேசுனாரு, அவரு...'' என, அவசரப்பட்டாள் சித்ரா.
''மறுஓட்டுப்பதிவு நடக்குற இடத்துல பயன்படுத்துற இயந்திரங்கள, வேறொரு அறையில் பாதுகாப்பா வச்சு, 'சீல்' வைக்கணும். எக்காரணம் கொண்டும், ஏற்கனவே 'சீல்' வச்சிருக்கிற, 'ஸ்ட்ராங்' ரூமை திறக்கக்கூடாதுன்னு பேசியிருக்காரு. இதுல இருந்து, சூட்சுமம் புரியுதா...''''ஓ... சங்கதி அப்படிப்போகுதா... '' என, வாயைப்பிளந்த சித்ரா, ''இந்த தடவை தேர்தல் கமிஷன் ரொம்பவே விமர்சனத்துக்கு உள்ளாகியிருக்கு. இது எங்க போயி முடியுமோ...'' என்றவாறு, கிச்சனுக்குள் நுழைந்தாள்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X