பொது செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
புதிய ரேஷன் கார்டு வினியோகம்
ஆணைய அனுமதிக்கு காத்திருப்பு

புதிய ரேஷன் கார்டுகளை, பயனாளிகளுக்கு வழங்க, தேர்தல் ஆணையத்திடம் உணவுத்துறை அனுமதி கோரியுள்ளது.

புதிய ரேஷன் கார்டு,வினியோகம்,தேர்தல் ஆணையம்,அனுமதி,காத்திருப்பு


தமிழக ரேஷன் கடைகளில், குறைந்த விலையில் வழங்கப்படும் உணவு பொருட்களை வாங்க, ரேஷன் கார்டு அவசியம். முகவரி சான்றுக்கு, ரேஷன் கார்டை கேட்கக் கூடாது என, அதை வழங்கும், உணவு வழங்கல் துறை தெரிவித்தும், வருவாய் உள்ளிட்ட துறைகள், முக்கிய ஆவணமாக கேட்கின்றன.

இந்த ஆண்டு ஜனவரி, பிப்ரவரி மாதங்களில், ரேஷன் கார்டுகளுக்கு விண்ணப்பித்தோருக்கு, புதிய கார்டுகள் மார்ச்சில் வழங்கப்பட இருந்தது.தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்ததால், இதுவரை, புதிய ரேஷன் கார்டுகள் வழங்கப்படவில்லை.

இதுகுறித்து, கூட்டுறவு மற்றும் உணவு துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: புதிய ரேஷன் கார்டுக்கு விண்ணப்பித்தோரின் வீடுகளில், ஆய்வு பணி முடிந்து, கார்டுகள் அச்சிட்டு தயாராக உள்ளன. தேர்தல் சமயத்தில், புதிய கார்டுகளை வழங்க கூடாது. தமிழகத்தில், 38 லோக்சபா தொகுதிகள் மற்றும், 18 சட்டசபை தொகுதிகளில், ஓட்டுப்பதிவு முடிந்து விட்டது. நான்கு சட்டசபை தொகுதிகளுக்கு, மே, 19ல் இடைத்தேர்தல் நடக்கிறது. ஓட்டு எண்ணிக்கை, வரும், 23ல் முடிந்தாலும், 27ம் தேதி வரை, நடத்தை விதிகள் அமலில் இருக்கும்.

Advertisement

தற்போது, புதிய கார்டு கேட்டு, பலரும் கோரிக்கை விடுத்து வருவதால், அதை வழங்க, தேர்தல் ஆணையத்திடம் அனுமதி கோரப்பட்டு உள்ளது. அது கிடைத்ததும், கார்டுகள், விரைவாக வழங்கப்படும். இவ்வாறு, அவர் கூறினார்.

- நமது நிருபர் -


Advertisement

வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
14-மே-201908:26:38 IST Report Abuse

Srinivasan Kannaiyaதேர்தல் விதிமுறைகள் நடைமுறையில் உள்ளதால் இனி மழை கூட பொழியக்கூடாது என்பார்கள் போல்

Rate this:
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
14-மே-201908:25:37 IST Report Abuse

Srinivasan Kannaiyaபுதியதாகதான் எதையும் செய்யக்கூடாது... ரேஷன் கார்டு வழங்கும் திட்டம் ஏற்கனவே நடைமுறையில் உள்ளது... நாலா ஆள்களுக்கு இதுதான் சாக்கு என்று இருந்து விடுவார்கள்

Rate this:
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
14-மே-201908:23:52 IST Report Abuse

Srinivasan Kannaiyaயானைக்கு அறம் என்றால் பூனைக்கு புறமா

Rate this:
மேலும் 1 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X