பொது செய்தி

தமிழ்நாடு

சொந்த செலவில் தூர்வாரும் இளைஞர்கள்

Added : மே 14, 2019 | கருத்துகள் (11)
Advertisement
சொந்த செலவில் தூர்வாரும் இளைஞர்கள்

புதுக்கோட்டை: ஆலங்குடி அருகே கொத்தமங்கலத்தில், இளைஞர்கள் சொந்த செலவில், நீர்நிலைகள், வரத்து கால்வாய்களை துார்வாரும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி பகுதியில், நிலத்தடி நீர்மட்டம் வெகுவாகக் குறைந்து வருகிறது. கொத்தமங்கலம், மறமடக்கி உள்ளிட்ட பகுதிகளில், 1,000 அடிக்கு மேல் ஆழ்குழாய் கிணறு அமைத்தும், நீரில்லாத நிலை ஏற்பட்டுள்ளது. அதே நேரம், நீர்நிலைகளை துார்வாரி, பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள, அரசு துறையினர் நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால், இளைஞர்கள் ஒன்றிணைந்து, சொந்த செலவில் அணைக்கட்டு, வரத்து கால்வாய்கள், குளங்களை துார்வாரி, பராமரிக்க முடிவு செய்தனர்.

முதல் கட்டமாக, கொத்தமங்கலத்தில், காமராஜர் காலத்தில் கட்டப்பட்ட அம்புலி ஆறு அணை, அதன் வரத்து கால்வாய்களை துார்வாரி சீரமைக்கும் பணியை, துவங்கி உள்ளனர்.

இளைஞர்கள் கூறியதாவது: அம்புலி ஆற்றில், தண்ணீர் சென்ற காலங்களில், கிணற்றில் தண்ணீர் கிடைத்தது. அதைப் பயன்படுத்தி, விவசாயமும் நடந்தது. மழை குறைந்ததால், கிணறுகளில் நீரில்லாமல் போனது. ஆழ்குழாய் கிணறுகளிலும் தண்ணீர் இல்லை. நிலத்தடி நீரைச் சேமிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளோம். இந்த ஆண்டு பருவமழை பெய்தால், கொத்தமங்கலத்தில் உள்ள அனைத்துக் குளங்களிலும் தண்ணீரைத் தேக்கி பாதுகாப்போம். கரையோரங்களில் மரக்கன்று நடுவதற்கும் திட்டமிட்டுள்ளோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து (11)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Darmavan - Chennai,இந்தியா
14-மே-201916:58:49 IST Report Abuse
Darmavan இதன் செலவை ஊர் மக்கள் தாங்கள் கட்டும் வரியில் பிடித்துக்கொள்ள வேண்டும்.
Rate this:
Share this comment
Visu - chennai,இந்தியா
18-மே-201912:24:14 IST Report Abuse
Visuஇதர்கு ஏற்கனவே பில் போட்டு காச ஆட்டைய போட்ருப்பானுக அரசியல்வாதிகளும் அரசு ஊழியர்களும்...
Rate this:
Share this comment
Cancel
14-மே-201913:11:22 IST Report Abuse
nanthuji,thailand. ॐ..மிக்க மகிழ்ச்சி.. பாராட்ட தக்க நல்ல முயற்சி.. முடங்கிய அரசு எந்திரத்தையோ, சோம்பிய அரசு அதிகாரிகளையோ, நம்பி கூப்பாடு போடாமல், இளம் காளையர் ஒன்றிணைந்து, தனது தாய் மண்ணை காக்க களமிறங்கியது, மற்றவர்க்கு உதாரணம்.. விரைவில் உங்கள் பகுதி செழிப்படையும்.. நன்றி...
Rate this:
Share this comment
Cancel
சுந்தரம் - Kuwait,குவைத்
14-மே-201912:34:02 IST Report Abuse
சுந்தரம் அரசின் உதவியை எதிர்பாராமல் கோவையில் சிறுதுளி அமைப்பு பல குளங்களை தூர்வாரி மேம்படுத்தி உள்ளது.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X