பட்டியல் போட்டு வசூலிக்கும் போலீசு!

Added : மே 14, 2019 | |
Advertisement
.பி.எல்., கோப்பையை சென்னை அணி பறிகொடுத்ததை நினைத்து, சோகத்தில் இருந்த மித்ரா, தனது அறையை விட்டு வெளியே வரவில்லை. இது தெரியாமல், மித்ராவின் வீட்டுக்கு வந்த சித்ரா, ''மித்து.. எங்கிருக்க. சீக்கரம் வாடி. ராகு காலம் முடியறதுக்குள்ள கோவிலுக்கு நெய் தீபம் வைக்கணும்,'' என்று குரல் கொடுத்தாள்.''அக்கா.. உள்ளே வாங்க!'' என்று ஈனஸ்வரத்தில் அழைத்தாள்.''ஏண்டி.. இப்படி இருக்கே. ஓ...
 பட்டியல் போட்டு வசூலிக்கும் போலீசு!

.பி.எல்., கோப்பையை சென்னை அணி பறிகொடுத்ததை நினைத்து, சோகத்தில் இருந்த மித்ரா, தனது அறையை விட்டு வெளியே வரவில்லை. இது தெரியாமல், மித்ராவின் வீட்டுக்கு வந்த சித்ரா, ''மித்து.. எங்கிருக்க. சீக்கரம் வாடி. ராகு காலம் முடியறதுக்குள்ள கோவிலுக்கு நெய் தீபம் வைக்கணும்,'' என்று குரல் கொடுத்தாள்.''அக்கா.. உள்ளே வாங்க!'' என்று ஈனஸ்வரத்தில் அழைத்தாள்.''ஏண்டி.. இப்படி இருக்கே. ஓ... சென்னை தோற்றதினாலா? அட... விடுடி. விளையாட்டில் இதெல்லாம் சகஜம்.
தையும் எளிதாக எடுத்துக்க பழகிட்டால், எந்த தோல்வியும் நம்மை பாதிக்காது,''''அக்கா.. தத்துவமெல்லாம், சூப்பரா சொல்றீங்க. இப்பதான், கொஞ்சம் ஆறுதலா இருக்கு,'' மித்ரா, சொல்லி கொண்டிருக்கும் போதே, ''ஏம்மா.. சித்ரா. ராகு காலம் முடியப்போகுது. சீக்கிரம் கிளம்புங்க,'' என்று சொன்னவாறு, டீ கொடுத்து சென்றார்.''அக்கா.. நீங்க டீயை குடிக்கறதுக்குள்ள, ரெடியாயிடுவேன்,'' என்று, பறந்தாள் மித்ரா.சொன்னது மாதிரி வந்த அவள், ''ராகு நேரத்துல அறிவிச்சாலும் அறிவிச்சாங்க, வரலாற்றுல இல்லாத மாதிரியெல்லாம் நடக்குதுக்கா?'' என்றாள்.''லோக்சபா தேர்தலைத்தானே சொல்ற, அதுல என்ன குறைய கண்டுபிடிச்சுட்ட,''''மறு ஓட்டுப்பதிவு விவகாரம்தான். காங்கயம், திருமங்கலம் மாதிரி, சில தொகுதியில மட்டும் மறு ஓட்டுப்பதிவு நடக்கப்போகுதே அதுதான்''''திருமங்கலத்துல உண்மையா என்ன நடந்துச்சு?''''அதைத்தான் சொல்ல வந்தேன்க்கா. மாதிரி ஓட்டுப்பதிவில், பதிவான, 50 ஓட்டுக்களை 'டெலிட்' பண்ணாம விட்டுட்டாங்க.
கொஞ்ச நேரத்துக்கு அப்புறமாத்தான் தெரிஞ்சிருக்கு. வயசான வாக்காளர் வருவாங்க, அவங்கள வச்சு சமாளிச்சுடலாம்னு ஐடியா பண்ணியிருக்காங்க''''ஆனா, அப்படியிருந்தும், 736 ஓட்டுப்பதிவாகியிருச்சு; ஓட்டுப்பதிவு மெஷினில், 777 ஓட்டு காட்டியிருக்கு. மத்த தொகுதி மாதிரி, 50 ஓட்டு அதிகமா இருந்தா; எண்ணி சரிபார்க்கலாம்னு சொல்லியிருப்பாங்க. இங்க, 41 ஓட்டு மட்டும் அதிகமா இருந்ததால, மறு ஓட்டுப்பதிவு நடக்கற அளவுக்கு போயிருக்கு,'' என்றாள் மித்ரா.பேசியபடி வந்த இருவரும், வண்டியில் பயணித்தனர்.''ஏன்... மித்து. லஞ்சம் இல்லாம, ஜி.எச்., ல கூட எந்த வேலையும் நடக்காது போலயிருக்கே''''என்னக்கா, தெரியாத மாதிரி பேசுறீங்களே?''''ஜி.எச்., ஊழியர்களுக்கு, அவங்க டிபார்ட்மென்ட்ல வேலை ஆகோணும்னா, மருத்துவ அலுவலர்கள் பரிந்துரை செய்யணும். இதுக்கு, ரெண்டாயிரம் ரூபா கொடுத்தா மட்டும்தான், வேலை நடக்குதாம்''''நோயாளிககிட்டத்தான், பணம் வசூல் பண்றாங்கனு கேள்விப்பட்டிருக்கோம். ஆனா, மருத்துவமனை ஊழியர்கள் நிலைமையே இப்படி இருக்கு. திருப்பூர் மாவட்டத்துல இருக்கற சில ஜி.எச்.,ல மட்டும்தான் இந்த பிரச்னை. விசாரிச்சு, நடவடிக்கை எடுத்தா தேவலை,'' என்றாள் சித்ரா.எல்.ஆர்.ஜி., கல்லுாரி வழியே இருவரும் பயணித்தனர். கல்லுாரியை பார்த்த மித்ரா, ''மதுரை கலெக்டர் மாட்டிய பின், நம்ம மாவட்டத்துலயும், ரொம்ப உஷாராகிட்டாங்க,''''ஏன்.. என்ன ஆச்சு?''''கலெக்டர் ஆபீசுல இருக்கற 'ஸ்ட்ராங்' ரூமில், தபால் ஓட்டுக்களை வச்சிருக்காங்க; தினமும் வர்ற தபால் ஓட்டுகளை, கண்காணிக்க 'நோடல்' ஆபீசர் அந்தபக்கம் வர்றதில்லை. மத்திய அலுவலர்கள், அதைய வாங்கி உள்ளே வைச்சு, 'சீல்' வைக்கறாங்க''''அதைக்கூட, போட்டோ எடுக்க கூடாதுனு, கெடுபிடி பண்றாங்க. தேர்தல் நடவடிக்கையும் இப்படித்தான், ரகசியமா இருக்குது. இதனால, வேட்பாளர்கள் டென்ஷனில், இருக்காங்க'' விளக்கினாள் மித்ரா.''இன்னும், பத்து நாள் தாண்டி இருக்குது. அப்புறம் எல்லா 'டென்ஷனும்' பறந்து போயிடும் பார்,'' என்று கூறி சிரித்த, கோவில் முன் வண்டியை பார்க் செய்தாள்.இருவரும், கோவிலுக்கு சென்று சுவாமி தரிசனம் செய்து விட்டு, இளைப்பாறி மண்டபத்தில் அமர்ந்தனர்.''ஏங்க்கா... காங்கயத்தில் பல இடங்களில், 'சிசிடிவி' வேலை செய்யறதில்லையாமா?''''ஆமாண்டி. இரு குழந்தையுடன் தாய் மாயமான விவகாரத்தில், கண்காணிப்பு கேமரா பதிவுகளை கொண்டு விசாரணையை தொடரலாம் என நினைத்தால், அந்த கேமரா செயல்படறதில்லையாம். ஆனால், போலீசார் கமுக்கமாக மறைத்து விட்டனர்.''அப்படின்னா, இதில் ஏதோ 'மேட்டர்' இருக்க வேண்டுமே. அதெப்படி மாதக்கணக்கில் கேமரா செயல்படாதது தெரியாமல் போயிருக்கும்,''''அக்கா... எல்லாம், 'சம்திங்' மேட்டர்தான். காங்கயம் முழுசும், கேமரா பொறுத்தும் பணியை மேற்கொள்ளும் நபரிடம், தங்களை 'கவனிக்க' வேண்டும் என, போலீசார் நச்சரித்துள்ளனர். அவரோ மறுத்துள்ளார்,
''இதனால், அவர் பேரை எப்படியாவது கெடுக்கோணும்னு, பழுதான கேமரா பத்தி சொல்லாம விட்டுட்டாங்களாம். இதனால், இரண்டு குழந்தையுடன், தாய் காணாமல் போன கேஸ் விசாரணையில் தொய்வு ஏற்பட்டிருக்கு,'' என்றாள் மித்ரா.''இப்படியுமுண்டா... சம்பந்தப்பட்ட போலீஸ் மேல, எஸ்.பி., நடவடிக்கை எடுத்தால் மட்டுமே, மறுபடியும் இதுபோல் நடக்காது, மித்து''''ஆமாங்க்கா... நீங்க சொல்றது உண்மைதான்,''''அதே மாதிரி, திருப்பூரிலும் போலீஸ் மத்தியில், வசூல் வேட்டை கலாச்சாரம் அதிகமாயிடுச்சுடி''''எப்படி சொல்றீங்க''''பணம் என்று சொன்னால், பிணம்' கூட, வாயை திறக்கும் என்ற பழமொழிக்கு எடுத்துக்காட்டாக, கமிஷனர் ஆபீசுக்கு பக்கத்துல இருக்கிற ஸ்டேஷனை சொல்லலாம்,''''தலைமையிடத்துக்கு பக்கத்துல இருந்து கொண்டே, குடும்ப பிரச்னை, கொடுக்கல் வாங்கல் பிரச்னை என, எந்த புகாரா இருந்தாலும், வைட்டமின் 'ப' இல்லாமல் எந்த காரியமும் நடக்கறதில்லையாம். சி.எஸ்.ஆர்., எப்.ஐ.ஆர்.,ன்னு என, ஒவ்வொன்னுக்கும் தனித்தனியா 'ரேட்' பிக்ஸ் பண்ணி வச்சிருக்காங்களாம்,''''ரொம்ப பக்கத்திலயே கமிஷனர் இருந்தும், அவருக்கு தெரியலையா?''''அதுதான், எனக்கும் புரியாத புதிராயிருக்கு''''அக்கா..
கட்டிச்சோத்துக்குள்ள பெருச்சாளி இருக்கற கதை தெரியுமா?''''என்னடி... தொடர் கதை எழுத்தாளர் மாதிரி பேசுறே''''நம்ம சவுத் ரேஞ்ச் ஆபீசில், வைட்டமின் 'ப' மழையில், முன்னொரு காலத்தில் பயங்கரமாக நனஞ்சு வந்த ஒருவர், தற்போது எதையும் செய்ய முடியாம திக்குமுக்காடி வருகிறாராம். அவருக்கு, எந்த வேலையும் தெரியலைன்னாலும் கூட, அங்கேயே 'டூயிங் டியூட்டி'ன்னு, ஓ.பி., அடிச்சிட்டு இருக்கிறாராம். அவரை, ஏன் அங்கேயே வச்சிகிட்டு இருக்காங்கன்னு தெரியலை''''அட.. கமிஷனருக்கு இதெல்லாம் தெரியாது போலிருக்கு. பத்தாக்குறைக்கு, அவர் ரொம்ப 'அப்செட்' ஆயிருக்காரு,'' என்று சித்ரா சொன்னவுடன், அவளது மொபைல் போன் ஒலித்தது, ''ஹலோ, பூபதி அங்கிள் நல்லாருக்கீங்களா? டிரான்ஸ்பர்னு கேள்விப்பட்டேன்,'' என, இரண்டு நிமிடம் பேசி விட்டு வைத்தாள் சித்ரா
''அக்கா... கமிஷனரு, ஏதோ.. அப்செட்டுன்னு சொன்னீங்களே?''''சிட்டிக்கு, தேவையான வசதிகளை, போலீஸ் குறைகளை தீர்க்கணும்னு சொல்லி நிறைய விஷயங்களை செய்யணும்னு நினைச்சு செஞ்சுட்டு இருக்கிறார். ஆனா, போலீஸ்காரங்க, அவரை ஏமாத்திட்டு, பல விஷயத்தை அவருக்கு தெரியாம மறைச்சிட்டோம்னு நினைக்கிறாங்க''''ஆனா, அவரோ, ஒவ்வொரு விஷயத்தையும் உன்னிப்பா கவனிக்கிறாராம். சில இன்ஸ்பெக்டர்களின் நடவடிக்கை சரியில்லாமல் இருக்கிறதால, எலக்ஷன் ரிசல்ட்டுக்கு அப்புறம், அதிரடி நடவடிக்கை எடுக்கப்போறதா பேச்சு உலா வருது,''''ஓ.. அப்படியா.. அப்ப 'பலே' கமிஷனருன்னு சொல்லுங்க. அக்கா.. சிறப்பு படை போலீஸ்காரங்க பல பேருக்கு, தபால் ஓட்டு வரலைன்னு, ரொம்ப பேரு புலம்பறாங்க''''அப்புறம் எப்படி, நுாறு சதவீத ஓட்டுப்பதிவாகும்?''''அக்கா.. எலக்ஷன் பத்தி இன்னொரு மேட்டர் இருக்கு?''''என்னடி அது?''''தாராபுரம், காங்கயத்தில் தேர்தல் வேலை செய்த வீடியோ கேமராமேன்களுக்கு பேசின பணம் கொடுக்கலையாம். இத பத்தி, சிலர், கலெக்டர் ஆபீசில் கம்ப்ளைன்ட் செஞ்சிருக்காங்க. அதனால, 'செக்' கொடுத்து இருக்காங்க''''
அடடே.. பரவாயில்லையே''''அக்கா... முழுசையும் கேளுங்க. அப்புறம் பாராட்டுங்க. கொடுத்த 'செக்' பூராவும், அக்கவுன்டில், பணம் இல்லைன்னு ரிட்டர்ன் ஆயிடுச்சாம். இதனால், கேமராமேன்கள், கலெக்டர் ஆபீசை முற்றுகையிட பிளான் போட்டிருக்காங்களாம்,'' மித்ரா சொன்னதும், ''என்னப்பா.. எலக்ஷன் கமிஷன் நடவடிக்கையை, ஆஹா... ஓேஹான்னு சொல்றாங்க. இந்த மேட்டரில், இப்டி பண்றாங்களேம்மா,'' என்று சிரித்த சித்ரா, ''சரி... வாடி போகலாம். மழை வர்ற மாதிரி இருக்கு''''ஓ.கே., அக்கா... புறப்படலாம்,'' என மித்ராவும் எழுந்தாள். அப்போது கோவிலில், 'முருகா... நீ...! வரவேண்டும்...' என, டி.எம்.எஸ்.,ஸின் குரல், காற்றில் கரைந்தது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X