தேசிய கொடியை மாற்றிய வாத்ரா

Updated : மே 14, 2019 | Added : மே 14, 2019 | கருத்துகள் (26)
Share
Advertisement
 தேசிய கொடியை  மாற்றிய வாத்ரா

புதுடில்லி, : தேர்தலில் ஓட்டளித்த உடன், சமூகதளத்தில் வெளியிட்ட செய்தியில், தேசியக் கொடியை மாற்றி, தென் அமெரிக்க நாடான, பராகுவேயின் கொடியை வெளியிட்ட, காங்., மூத்த தலைவர் சோனியாவின் மருமகன், ராபர்ட் வாத்ராவை, பலரும் கிண்டல் செய்தனர்.லோக்சபாவுக்கு, ஏழு கட்டங்களாக தேர்தல் நடந்து வருகிறது.

நேற்று முன்தினம், ஆறாம் கட்ட ஓட்டுப் பதிவு நடந்தது. அதில், காங்கிரஸ் மூத்த தலைவர், சோனியாவின் மருமகன், ராபர்ட் வாத்ரா, புதுடில்லியில் ஓட்டளித்தார்.ஓட்டளித்த பின், விரலில் வைக்கப்பட்ட மையுடன் கூடிய படத்துடன், சமூக வலைதளத்தில் ஒரு செய்தி வெளியிட்டார்.


latest tamil news


அதில், நம் தேசியக் கொடிக்கு பதிலாக, தென் அமெரிக்க நாடான, பராகுவேயின் தேசியக் கொடியின் படத்தை அவர் வெளியிட்டுள்ளார்.இதற்கு, சமூக வலைதளத்தில் பலரும் கிண்டலடித்து செய்தி வெளியிட்டனர். தன் தவறை உணர்ந்த அவர், அந்த செய்தியை நீக்கிவிட்டு, புதிய செய்தியை பதிவு செய்தார்.


Advertisement


வாசகர் கருத்து (26)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Vijay D Ratnam - Chennai,இந்தியா
14-மே-201913:53:00 IST Report Abuse
Vijay D Ratnam இந்தாளும் தற்குறிதான் போலிருக்குது. பாவம் இட்டாலியம்மா, வாய்ச்சதுக்கும் துப்பில்லை, வந்ததுக்கும் துப்பில்லை.
Rate this:
partha - chennai,இந்தியா
15-மே-201915:43:23 IST Report Abuse
partha...
Rate this:
Cancel
14-மே-201913:40:54 IST Report Abuse
அருண் பிரகாஷ் இதைத்தான் எல்லோரும் சொல்றாங்க.. சோனியா குடும்பத்துக்கு இந்திய நாட்டுப்பற்று என்ற ஒன்று இருக்க வாய்ப்பே இல்லை..10 வருடங்கள் ஆட்சியில் இருந்து நாங்கள் இதுவெல்லாம் செய்தோம் என்று கூறி ஓட்டு கேட்க முடியாத நிலை..எல்லாவற்றிலும் ஊழல்.பண பதுக்கல்,பண மோசடி,வருமான வரி ஏய்ப்பு,கருப்பப்பணம் அதிகரிப்பு,மக்கள் வாழ்வாதாரம் பாதிப்பு,பல பேருக்கு தகுந்த ஆவணங்கள் இல்லாமல் வங்கிக்கடன் வழங்கல் (மல்லையா,நிரவ்,சொக்ஷி) மீனவர் மரணம்,பயங்கரவாத தாக்குதல் மரணம்,இப்படி சொல்லிக்கொண்டே போகலாம்,இப்போ எல்லா வழக்கிலும் முன் ஜாமீன்..எப்படியாவது வெற்றி பெற்று வழக்குகளில் இருந்து விடுதலை செய்து கொள்ள வேண்டும்.அதற்காக ரபேல் என்று ஒன்றை மட்டும் வைத்து மக்களை குழப்பும் அரசியல்.இந்திய தேசியக்கொடி தெரியாது.ஜனகனமன தெரியுமா இல்லை அதுவும் தெரியாதா?எந்த நாடுப்பா நீங்கள், உண்மையை சொன்னால் கோபம் கொப்பளிக்கும்..
Rate this:
Cancel
Chowkidar NandaIndia - Vadodara,இந்தியா
14-மே-201913:08:26 IST Report Abuse
Chowkidar NandaIndia பராகுவேயில் சொந்த நிலம் வைத்திருப்போர் ஜாக்கிரதை என்று அந்நாட்டு மக்களுக்கு மறைமுகமாக விடுக்கப்பட்ட எச்சரிக்கையாக கூட இது இருக்கலாம்.
Rate this:
partha - chennai,இந்தியா
15-மே-201915:45:13 IST Report Abuse
parthaஅப்படியாவது பராகுவே போனால் இந்தியா நிம்மதி அடையும்...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X