மானாமதுரையில் சதாசிவ பிரம்மேந்திராள் ஆராதனை விழாவில் கோஷ்டி கானம் நிகழ்ச்சி| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

மானாமதுரையில் சதாசிவ பிரம்மேந்திராள் ஆராதனை விழாவில் கோஷ்டி கானம் நிகழ்ச்சி

Added : மே 14, 2019
மானாமதுரையில் சதாசிவ பிரம்மேந்திராள் ஆராதனை விழாவில் கோஷ்டி கானம் நிகழ்ச்சி

மானாமதுரை: மானாமதுரையில் கர்நாடக இசைக்கலைஞர்களின் குருவாக போற்றப்படும் சதாசிவ பிரம்மேந்திராள் 39ம் ஆண்டு ஆராதனை விழா மற்றும் இசைக்கச்சேரி நேற்று(மே 13) துவங்கியது. தொடர்ந்து 2 நாள்கள் விழாவில் நுாற்றுக்கணக்கான கர்நாடக இசைக்கலைஞர்கள் பங்கேற்க உள்ளனர்.
மானாமதுரையில் சதாசிவ பிரம்மேந்திராள் ஆராதனை விழா வருடந்தோறும்நடைபெறுவது வழக்கம், நேற்று காலை 7:00 மணிக்கு வேதபாராயணம், உஞ்சவ்ருத்தி ,தீபாராதனை ஆகியவற்றுடன் நிகழ்ச்சி துவங்கியது, விழாவில் ஏராளமான இசைக் கலைஞர்கள் கலந்து கொண்டு கச்சேரிகளை நடத்தினர் மாலை பாராட்டு விழா நடைபெற்றது, இதனைத் தொடர்ந்து பிரபல மாண்டலின் இசைக் கலைஞர் ராஜேஷ் பங்கேற்று இசை கச்சேரி நடத்தினார். இதனை ஏராளமானவர்கள் கண்டு ரசித்தனர்.
இன்று (மே 14) காலை7 மணிக்கு பூஜை உஞ்சவிருத்தியும்,9:00 மணிக்கு குரு அஞ்சலி,கோஷ்டி கானமும் நடைபெற்றது.இதனைத் தொடர்ந்து விக்னேஷ்வரபூஜை, வடுகபூஜை, கன்யாபூஜை, வாசினிபூஜை, தம்பதிபூஜை, தீபஆராதனையும் நடைபெற உள்ளது இதற்கான ஏற்பாடுகளை சதாசிவ பிரம்மேந்திராள் ஆராதனை கமிட்டியினர் செய்துவருகின்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X