அரசியல் செய்தி

தமிழ்நாடு

அரசியலை விட்டு விலக தயார்: தமிழிசைக்கு ஸ்டாலின் சவால்

Updated : மே 14, 2019 | Added : மே 14, 2019 | கருத்துகள் (78)
Advertisement
B.J.P,BJP,Bharatiya Janata Party,D.M.K,M.K.Stalin,Stalin,Tamilisai Soundararajan,தமிழிசை,தமிழிசை சௌந்தரராஜன்,தி.மு.க,பா.ஜ,ஸ்டாலின்

தூத்துக்குடி: திமுக தலைவர் ஸ்டாலின், பா.ஜ.,வுடனும் பேசி வருகிறார் என தமிழக பா.ஜ., தலைவர் தமிழிசை கூறியுள்ளார். இதனை மறுத்துள்ள ஸ்டாலின், இதனை நிநிரூபித்தால் அரசியலை விட்டு விலக தயாராக உள்ளதாக கூறியுள்ளார்.


நிறம் மாறுகிறது


திமுக தலைவர் ஸ்டாலின் பா.ஜ.வுடன் பேச்சு நடத்துவதாக தமிழிசை கூறினார். இதை மறுத்துள்ள ஸ்டாலின் தமிழிசை சொல்வது பச்சைப்பொய் என்று கண்டனம் தெரிவித்தார்.

தூத்துக்குடியில் நிருபர்களை சந்தித்த தமிழிசை கூறுகையில், திமுக தலைவர் ஸ்டாலின், பா.ஜ.,வுடன் பேசி கொண்டிருப்பதாக அமைச்சர் ஜெயக்குமார் கூறியது உண்மை. ஒரு பக்கம் ராகுல், மற்றொரு பக்கம் சந்திரசேகர ராவ், மறுபக்கம் மோடியுடன் ஒருவர் மூலமாக ஸ்டாலின் பேசி வருகிறார். திமுக நிறம் மாறுவது வாடிக்கை. முதலில் ராகுல் பிரதமர் எனக் கூறியவர், பின்னர் தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவுடன் பேசியுள்ளார். நட்பு ரீதியிலான சந்திப்பு எனக்கூறி, ஒன்றரை மணி நேரம் பேசியுள்ளார்.







வெற்றி உறுதி


கருத்து கணிப்புகள் எல்லாம் பா.ஜ.,வுக்கு ஆதரவாக உள்ளன. ஸ்டாலின் தான் குழப்பத்தில் உள்ளார். பா.ஜ., கூட்டணியில் எந்த குழப்பமும் இல்லை. தமிழகத்தில் தவறான முடிவு எடுப்பதற்கு ஒரு தலைவர் உண்டு என்றால் அவர் ஸ்டாலின் தான். தேர்தல் நேரத்தில் சோதனை நடத்துவது வாடிக்கை தான். தூத்துக்குடியில் தாமரை நிச்சயம் மலரும். இவ்வாறு அவர் கூறினார்.


வேதனை


இதனை மறுத்து திமுக தலைவர் ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கை: பா.ஜ.,வுடன் நான் பேசியதை நிருபித்து விட்டால், அரசியலில் இருந்து விலக தயார். இதனை நிருபிக்க தவறினால், தமிழிசையும், மோடியும் விலக தயாரா? மோடியுடன் நான் பேசியதாக பொய் கூறிய தமிழிசைக்கு கடும் கண்டனம் தெரிவித்து கொள்கிறேன். பாரம்பரியமான அரசியல் குடும்பத்தில் பிறந்த தமிழிசை பொய் பேட்டி அளித்ததற்கு வேதனைப்படுகிறேன். பொய் பேட்டி மூலம் தமிழிசை தரம் தாழ்த்தி கொண்டுள்ளார். தோல்வியின் விளிம்புக்கு சென்றுவிட்டதால், பா.ஜ., இது போன்ற குழப்பங்களை ஏற்படுத்தி வருகிறது.






கடைசி முயற்சி


ராகுலை பிரதமர் வேட்பாளராக முன்மொழிந்தது திமுக தான். திமுக முன்னெடுத்த பிரசாரத்தை மழுங்க செய்யும் முயற்சி. திமுக தலைமையிலான கொள்கை கூட்டணியில் குளத்தில் கல் எறியும் பா.ஜ., முயற்சி தோல்வி அடையும். தேர்தல் முடிவுக்கு பிறகு மோடி வீட்டிற்கு அனுப்பப்படுவார் என்பதை உறுதியுடன் தெரிவித்து கொள்கிறேன்.
திரைமறைவில் திமுக பேசியது கிடையாது. அதிமுக - பா.ஜ., போல் திரைமறைவில் தரகு பேசும் கட்சி திமுக அல்ல. மேலிட பாஜ தலைவர்களின் சுயநலனுக்கு, கடைசி பகடைக்காயாக தமிழிசை பயன்படுத்தப்பட்டுள்ளார். இவ்வாறு அந்த அறிக்கையில் ஸ்டாலின் கூறியுள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (78)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
15-மே-201910:44:44 IST Report Abuse
முருகேசன் நாயுடு சுக்குமல்லி காப்பி சாப்பிட தான் தலீவர் வீட்டுக்கு போனாராம்.
Rate this:
Share this comment
Cancel
சீனு, கூடுவாஞ்சேரி தமிழிசை தன்னுடைய குற்றச்சாட்டை நிறுபிக்க தேவையில்லை. திமுகவைப் பற்றி அனைவருக்கும் தெரிந்தது தான். எப்போது வேண்டுமானாலும் கொள்கையை மாற்றுவார்கள். இல்லையென்றால் பதினைந்து ஆண்டுகள் தொடர்ந்து மத்தியில் ஊழல் செய்து ஆட்சி சுகத்தை அனுபவித்த ஒரே கட்சி அல்லவா அவர்கள். மே 23க்கு பிறகு சொல்லாமலேயே காணாமல் போய் விடுவார்கள்.
Rate this:
Share this comment
Cancel
Matt P - nashville,tn ,யூ.எஸ்.ஏ
15-மே-201906:41:19 IST Report Abuse
Matt P ஆக்க பொறுத்தவனுக்கு ஆற பொறுக்கலை...தாமரை மலரும் சூரியன் உதிக்கும். . வாக்குகளை பத்திரமா பூட்டி வைச்சிருக்காங்க ..பத்தாம் வகுப்பு படித்த புள்ளைக கூட பொறுமையா இருக்கும் தேர்வு பதில் தெரிய . இவங்களுக்கு தூக்கமே இருக்காது போலிருக்கு முடிவு தெரியும் வரை ..முடிவு தெரிஞ்சவுடன் தேவையென்றால் நாங்க வந்து ஒட்டிப்போம் என்று சொல்லலாமே யாரிடமும் .
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X