பதிவு செய்த நாள் :
எச்சரிக்கை!
'வாட்ஸ் ஆப்' தகவலை திருட முயற்சி...
உடனே, 'அப்டேட்' செய்ய அறிவுறுத்தல்

சான் பிரான்சிஸ்கோ: 'வாட்ஸ் ஆப்' சமூக வலைதளத்தில், 'ஹேக்கர்ஸ்' எனப்படும், இணைய உளவாளிகள் ஊடுருவி, தகவல்களை திருட முயற்சிப்பதாகவும், இதை தவிர்க்க, பயனாளிகள், உடனடியாக, செயலியை, 'அப்டேட்' செய்யும்படியும், அந்த நிறுவனம் எச்சரித்துள்ளது.

whatsapp,வாட்ஸ்அப், ஸ்பைவேர் வைரஸ், தகவல், பயனாளிகள், ஹேக்கர்


'வாட்ஸ் ஆப்' எனப்படும் தகவல் பரிமாற்ற சமூக வலைதளத்தை, உலகம் முழுவதும், 150 கோடி பேர் பயன்படுத்தி வருகின்றனர். இந்த செயலி வாயிலாக, தகவல்கள், புகைப்படங்கள், 'வீடியோ' ஆகியவை பகிரப்பட்டு வருகின்றன.

பயனாளர்கள்


மேலும், இதில் உள்ள, 'வாய்ஸ் காலிங்' வசதி மூலம், உலகின் எந்த மூலையில் இருப்பவரையும் தொடர்பு கொண்டு, கட்டணமின்றி பேசவும் முடியும். அதிக பயனாளர்களை உடைய செயலி என்பதால், இதில் ஊடுருவி, பயனாளிகளின் தகவல்களை திருட, 'ஹேக்கர்கள்' எனப்படும் இணைய உளவாளிகள் அடிக்கடி முயற்சி செய்து வருகின்றனர். எனவே, இந்த

செயலியின் பாதுகாப்பு அம்சங்களை உறுதி செய்வதில், இந்நிறுவனம் அதிக கவனம் செலுத்தி வருகிறது.

இந்நிலையில், வாட்ஸ் ஆப் செயலிக்குள் ஊடுருவ, சிலர் முயன்றதாக, அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. இது குறித்து, வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: தகவல் தொழில்நுட்பத்தில் நிபுணத்துவம் பெற்ற, திறமை வாய்ந்த இணைய உளவாளிகளை வைத்து, சில குறிப்பிட்ட பயனாளர்களின் செயலியை ஊடுருவும் முயற்சி நடந்துள்ளதை கண்டுபிடித்துள்ளோம். யாருடைய கணக்குகள் ஊடுருவப்பட வேண்டுமோ, அவர்களின், 'மொபைல் போன்களுக்கு, 'வாட்ஸ் ஆப் காலிங்' வசதி மூலம், இணைய உளவாளிகள் அழைப்பு விடுக்கின்றனர்.

பதிவிறக்கம்


அழைப்பை ஏற்றவுடன், அந்த, மொபைல் போனில், உளவு மென்பொருள் தானாகவே பதிவிறக்கம் ஆகிறது. இதையடுத்து, அந்த குறிப்பிட்ட எண்ணை, இணைய உளவாளிகள் கண்காணிக்க துவங்குகின்றனர். அவரது மொபைல் போனில் உள்ள தகவல்கள் அனைத்தும் திருடப்படுகின்றன. அவரது, அழைப்புகள் ஒட்டுக் கேட்கப்படுகின்றன. இதை தடுக்க, நவீன பாதுகாப்பு அம்சங்களை உள்ளடக்கிய, 'அப்டேட்'கள் வந்துள்ளன. உடனடியாக 'ப்ளே ஸ்டோர்' சென்று, வாட்ஸ் ஆப் செயலியை, பயனாளர்கள், அப்டேட் செய்து கொள்வதன் மூலம், இந்த ஊடுருவலில் இருந்து தப்ப முடியும். இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement

நெருங்கும் ஆபத்து!

இன்றைய நவீன உலகில், 'வாட்ஸ் ஆப்' பயன்பாடு, இளைய தலைமுறையினரிடையே தவிர்க்க முடியாத ஒரு விஷயமாகி விட்டது. வாட்ஸ் ஆப் பயன்பாடு இல்லாமல், செயல்படவே முடியாத நிலைக்கு கூட, சிலர் தள்ளப்பட்டுள்ளனர். தகவல் பரிமாற்ற வசதி என்பதை கடந்து, பலரது அன்றாட வாழ்வில், முக்கியமான அங்கமாகி விட்டது, வாட்ஸ் ஆப். இதன் மூலம், தங்கள் நண்பர்கள், உறவினர்களுக்கு, முக்கியமான மற்றும் குடும்ப விஷயங்களை கூட, சிலர் பகிர்ந்து கொள்கின்றனர். அதுமட்டுமல்லாமல், தங்கள் குடும்ப நிகழ்வுகளில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள், வீடியோக்களை பகிர்ந்து கொள்கின்றனர். சிலர், தொழில் ரீதியான ரகசியமான விஷயங்களையும், உயர் அதிகாரிகளுக்கும், உடன் பணியாற்றுவோருக்கும் பகிர்கின்றனர். தற்போது, 'ஹேக்கர்'கள் ஊடுருவி, தகவல் பரிமாற்றங்களை திருட முயற்சிப்பதாக வெளியாகியுள்ள தகவல், பலரையும், அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. சொந்த விஷயங்கள் மட்டுமின்றி, தொழில் ரீதியான விஷயங்கள், புகைப்படங்களும், கண்காணிக்கப்பட்டு, திருடப்படுவது, பல்வேறு ஆபத்துகளை ஏற்படுத்தும் என்பதால், வாட்ஸ் ஆப் பயனாளிகள் கவனமாக இருக்கும்படி, எச்சரிக்கின்றனர், தொழில்நுட்ப நிபுணர்கள்.


Advertisement

வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Vijay - Bangalore,இந்தியா
15-மே-201912:24:58 IST Report Abuse

Vijayஆக ஊடுருவ முயன்ற உளவாளிகளை இரும்பு கரம் கொண்டு தடுக்க தவறிய மத்திய மாநில அரசுகள் உடனடியாக பதவி விலக வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன் .

Rate this:
viji - madurai,இந்தியா
15-மே-201920:33:11 IST Report Abuse

viji பதவி விலகுமுன்பு இலங்கை அப்பாவி மக்களை கொன்ற தீவிரவாதிகளையும்,அவர்களுக்கு செம்பு தூக்கும் உள்நாட்டு தீவிரவாதி துரோகிகளையும் போட்டுத்தள்ளிவிட்டு விலகவும்.....மோடிஜிக்கு ஜே ...

Rate this:
Nesan - JB,மலேஷியா
15-மே-201910:01:45 IST Report Abuse

Nesan நமது அனைத்து தகவல்களையும் 'வாட்ஸ் ஆப்' சேகரித்து வைத்துக்கொள்ளும். தேவையானால் பயன்படுத்திக்கொள்ளும்.

Rate this:
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
15-மே-201908:17:30 IST Report Abuse

Srinivasan Kannaiyaநல்ல அறிவுரை

Rate this:
மேலும் 1 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X