உஜ்ஜயின் : ''பிரதமர் நரேந்திர மோடி, என் குடும்பத்தாரை இழிவுபடுத்தும் வகையில் பிரசாரம் செய்கிறார். ஆனால், நான் அவ்வாறு செய்ய மாட்டேன்,'' என, காங்., தலைவர், ராகுல் கூறியுள்ளார்.
பரிசளிப்போம்:
மத்திய பிரதேசத்தில், முதல்வர் கமல்நாத் தலைமையிலான, காங்., அரசு அமைந்துள்ளது. லோக்சபா தேர்தலையொட்டி, இங்குள்ள உஜ்ஜயினில், நேற்று நடந்த, காங்., தேர்தல் பிரசார கூட்டத்தில், காங்., தலைவர், ராகுல் பேசியதாவது:
லோக்சபா தேர்தல் பிரசார கூட்டங்களில், என் தந்தை ராஜிவ், பாட்டி இந்திரா, கொள்ளு தாத்தா, ஜவஹர்லால் நேரு ஆகியோரை
இழிவுபடுத்தும் வகையில், பிரதமர் நரேந்திர மோடி பிரசாரம் செய்து வருகிறார்.
ஆனால், அவரது குடும்பத்தார் குறித்து, நான் எதுவும் பேச மாட்டேன். ஏனென்றால், நான், பா.ஜ., அல்லது ஆர்.எஸ்.எஸ்., அமைப்பைச் சேர்ந்தவன் அல்ல; காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவன். வெறுப்பை உமிழ்ந்தாலும், பதிலுக்கு அன்பை கொடுப்போம். பிரதமர் நரேந்திர மோடிக்கு, இந்தத் தேர்தலில், அன்புடன் தோல்வியை பரிசாக அளிப்போம்.
மாங்காய் கதை:
'மேக மூட்டத்துடன் இருந்தால், ரேடாரில் நம் போர் விமானங்கள் சிக்காது' என, ஆலோசனை கூறியதாக மோடி பேசியுள்ளார். மாமரத்தில் ஏறி மாங்காய் பறித்த கதையையும் கூறியுள்ளார். மக்களுக்கு உள்ள பிரச்னைகள் குறித்தோ, பா.ஜ., அரசு நிறைவேற்றிய திட்டங்கள் பற்றியோ, மோடியும், பா.ஜ.,வும் பேசுவதில்லை.
'ரபேல்' போர் விமான ஒப்பந்தத்தில், மோடி, ஊழல் செய்துள்ளார். இது குறித்து விவாதிக்க அழைத்தும், அதற்கு அவர், முன்வரவில்லை.
அவ்வாறு விவாதித்தால், நாட்டு மக்களை அவரால் சந்திக்க முடியாது. இவ்வாறு, அவர் பேசினார்.
உத்தர பிரதேச முன்னாள் முதல்வரும், பகுஜன் சமாஜ் தலைவருமான, மாயாவதி, லக்னோவில் நிருபர்களிடம் நேற்று கூறியதாவது: பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு, மூழ்கும் கப்பல். அந்தக் கட்சியை, ஆர்.எஸ்.எஸ்., அமைப்பும் கைவிட்டு விட்டது. அதனால், இந்த லோக்சபா தேர்தலில், பா.ஜ.,வின் தோல்வி உறுதியாகி விட்டது. 'டீக்கடைக்காரன், சேவகன், காவல்காரன்' இந்த நாட்டுக்கு தேவையில்லை. இந்தத் தேர்தலில், நாட்டு மக்களுக்கு நன்மை செய்யும் பிரதமர் கிடைக்கப் போகிறார். இவ்வாறு, அவர் கூறினார்.
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
வாசகர் கருத்து (54)
Reply
Reply
Reply