பதிவு செய்த நாள் :
7ம் கட்டத்தில் மேற்கு வங்கத்தில்
வன்முறை நடக்குமா?

அனல் பறக்கும் அரசியல் விமர்சனங்களுக்கும், ஆக்ரோஷ கொள்கை பிடிப்புக்கும் பெயர் பெற்ற மேற்கு வங்கத்தில், வரும் ஞாயிறு அன்று நடக்க உள்ள, ஏழாவது கட்ட தேர்தலில், கடும் வன்முறை நடக்கும் என, உளவுத்துறை தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேற்கு வங்கம்,வன்முறை,நடக்குமா?


அதன் முன்னோட்டம் தான், நடந்து முடிந்த, ஆறாவது கட்ட தேர்தலில் நடந்த வன்முறை வெறியாட்டங்கள். இதில், பா.ஜ., தொண்டர் ஒருவர் கொல்லப்பட்டார்; பலர் படுகாயம் அடைந்தனர். பா.ஜ., வேட்பாளர், பாரதி கோஷ் என்பவரை, போலீஸ் நிலையத்திற்குள்ளேயே தாக்கும் நிலையும் ஏற்பட்டது.

மேலும், பரூய்பாரா என்ற இடத்தில் நடக்கவிருந்த, பா.ஜ., பொதுக் கூட்டத்தில் பங்கேற்க, அக்கட்சியின் தலைவர், அமித் ஷா வந்த ஹெலிகாப்டருக்கு, தரையிறங்க அனுமதி அளிக்கவில்லை; இதனால், அந்த கூட்டமே ரத்து செய்யப்பட்டது.இதனால், பா.ஜ., மற்றும் திரிணமுல் காங்கிரஸ் கட்சியினர் போர்க்கோலம் பூண்டுள்ளனர்.

பிற பிரசார கூட்டங்களில், மம்தாவுக்கு சவால் விடும் வகையில், அமித் ஷா பேசியது, திரிணமுல் காங்கிரஸ்காரர்களை கோபப்படுத்தியுள்ளது. மம்தாவுக்கும், சவால் ரொம்ப பிடிக்கும் என்பதால், ஏழாவது கட்டத்தில், கடும் வன்முறை நடக்கும் என கூறப்படுகிறது. அதற்கேற்ப, தேர்தல் நடக்கும் தொகுதிகள், தலைநகர் கோல்கட்டா மற்றும் அதை சுற்றியுள்ள, ஒன்பது தொகுதிகள்; இங்கு, பா.ஜ.,வும் பலமாக உள்ளது.

ஆறாவது கட்ட தேர்தலுக்கு பின், பா.ஜ., கூட்டங்களில் கல் வீச்சு, ரகளைகள்

Advertisement

நடத்தப்படுவது, அக்கட்சியினருக்கு கடும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.இரு கட்சியினரின் மோதலை, மகிழ்ச்சியாக ரசிக்கும் கம்யூனிஸ்ட்காரர்கள், 'இந்த இரு கட்சிகளும் எப்படியாவது அழியட்டும்; அதன் பிறகாவது மாநிலம் மேன்மையாகட்டும்' என்கின்றனர்.

- சாந்தனு பானர்ஜி -
சிறப்பு செய்தியாளர்


Advertisement

வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Ambika. K - bangalore,இந்தியா
15-மே-201912:07:47 IST Report Abuse

Ambika. Kசிங்கார கூவம் மணக்கும் சென்னை தீதி போராட்டம் எல்லாம் மே 23 அன்று க்ளோஸ்

Rate this:
அசோக்ராஜ் - சேலம் ,இந்தியா
15-மே-201910:12:23 IST Report Abuse

அசோக்ராஜ் 11:00 மணிக்கு எலக்சன் கமிசன் செய்தி வரப்போவுதாம். மாவோமாதா டப்பா டான்ஸ் ஆடப்போவுது.

Rate this:
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
15-மே-201908:18:36 IST Report Abuse

Srinivasan Kannaiya'இந்த இரு கட்சிகளும் எப்படியாவது அழியட்டும் அதன் பிறகாவது மாநிலம் மேன்மையாகட்டும்' ...கெடுவான் தானே கெடுவான்

Rate this:
மேலும் 2 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X