பதிவு செய்த நாள் :
சாலையில் காரை நிறுத்திய பிரியங்கா
வெறுப்பேற்ற முயன்றவர்களுக்கு, 'ஷாக்'

இந்துார் : மத்திய பிரதேசத்தில், காங்கிரஸ் பொது செயலர், பிரியங்காவை பார்த்து, கூச்சலிட்ட, பா.ஜ.,ஆதரவாளர்களிடம், அவர், கைகுலுக்கி நட்புடன் பேசிய வீடியோ, சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

பா.ஜ, பிரியங்கா, பாடம், Priyanka, வாழ்த்து, கார், பிரசார கூட்டம்


பிரசார கூட்டம் ம.பி.,யில், முதல்வர் கமல்நாத் தலைமையில், காங்., ஆட்சி நடக்கிறது. இங்குள்ள எட்டு லோக்சபா தொகுதிகளுக்கு, வரும், 19ல், தேர்தல் நடக்கிறது.

இதையொட்டி, தேர்தல் பிரசாரம் செய்வதற்காக, காங்., பொது செயலர் பிரியங்கா, நேற்று இந்துார் வந்தார்.

விமான நிலையத்தில் இருந்து, பிரசார கூட்டம் நடக்கும் இடத்திற்கு காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது, சாலையோரம் நின்ற, பா.ஜ., ஆதரவாளர்கள், பிரியங்காவை பார்த்து, 'மோடி... மோடி...' என கூச்சலிட்டனர்.

இதை பார்த்ததும், தன் கறுப்பு நிற, 'டாடா சபாரி' காரை நிறுத்தி, இறங்கி வந்த பிரியங்கா, கூச்சலிட்டவர்களிடம் கைகுலுக்கினார். இதை சற்றும் எதிர்பாராத, பா.ஜ., ஆதரவாளர்கள், முதலில் அதிர்ச்சி அடைந்தனர். பின், இயல்பாக அவருடன் கைகுலுக்கி வாழ்த்து தெரிவித்தனர்.

உற்சாகம் :


அவர்களுடன் சில வார்த்தைகள் நட்புடன் பேசிய பிரியங்கா, பின், காரில் ஏறி புறப்பட்டுச் சென்றார். இந்த வீடியோ, சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. முன்னதாக, ம.பி.,யில் உள்ள ரட்லம் என்ற இடத்தில் நடந்த பிரசார கூட்டத்தில்,

Advertisement

பிரியங்கா நேற்று பேசினார். கூட்டம் முடிந்து புறப்படுகையில், மக்கள் அவரைப் பார்த்து, உற்சாகத்துடன் கை அசைத்தனர்.

இதையடுத்து, கூட்டத்தை கட்டுப்படுத்த அமைக்கப்பட்டு இருந்த மர தடுப்பை, திடீரென ஏறி குதித்து தாண்டிய பிரியங்கா, மக்கள் அருகே சென்று, கை குலுக்கினார். இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த பாதுகாப்பு படையினர், அவரை பத்திரமாக அழைத்துச் சென்றனர்.


Advertisement

வாசகர் கருத்து (41+ 11)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Malick Raja - jeddah,சவுதி அரேபியா
16-மே-201914:46:27 IST Report Abuse

Malick Rajaகேட்டாலும் மேன்மக்கள் மேன்மக்களே என்பதன் விளைவுதான் இது

Rate this:
meenakshisundaram - bangalore,இந்தியா
16-மே-201905:02:14 IST Report Abuse

meenakshisundaramஅதை இப்படி புரிஞ்சுக்கோணும் .முடிவுகள் வந்த பின்னே அந்த அம்மா காரில் இருந்து இறங்கவே முடியாது

Rate this:
வல்வில் ஓரி - Koodal,இந்தியா
15-மே-201916:29:06 IST Report Abuse

வல்வில் ஓரி கான்கிராஸ் காரன் ஆட்சியில இருந்தா இப்போ நடக்கிறது வேற மாதிரியா இருந்திருக்கும்...இப்போ வேற ஒன்னும் பண்ண முடியாது...

Rate this:
மேலும் 38 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X