பொது செய்தி

இந்தியா

ரூ.483 கோடி சொத்து பறிமுதல்

Added : மே 15, 2019 | கருத்துகள் (2)
Advertisement

புதுடில்லி:வங்கிக் கடன் மோசடியில் ஈடுபட்ட, கோல்கட்டாவைச் சேர்ந்த நிறுவனத்துக்கு சொந்தமான, 483 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களை, அமலாக்கத் துறையினர் பறிமுதல் செய்தனர்.

மேற்கு வங்கத்தில், முதல்வர், மம்தா பானர்ஜி தலைமையில், திரிணமுல் காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது.தலைநகர் கோல்கட்டாவைச் சேர்ந்த பிரவீன் குமார் தாயல் என்பவர், தாயல் குழும நிறுவனங்களை நடத்தி வந்தார்.இந்நிறுவனத்துக்காக, 'பேங்க் ஆப் இந்தியா' மற்றும் ஆந்திரா வங்கி கிளைகளில், 2008ம் ஆண்டில், 524 கோடி ரூபாய் கடன் பெற்று, அதை திருப்பிச் செலுத்தாமல் மோசடி செய்தார்.

இதையடுத்து, இந்நிறுவன உரிமையாளர் பிரவீன் குமார் தாயல் மீது, பணப்பரிமாற்ற மோசடி தடுப்பு சட்டத்தின் கீழ், அமலாக்கத் துறை வழக்குப் பதிவு செய்து, விசாரித்து வருகிறது. இந்நிலையில், தாயல் குழும நிறுவனத்துக்கு சொந்தமான, 483 கோடி ரூபாய் சொத்துக்களை, அமலாக்கத் துறை பறிமுதல் செய்தது.முன்னதாக, இந்நிறுவனம், யூகோ வங்கியில் கடன் பெற்று மோசடி செய்த வழக்கில் சிக்கியது. இதில், இந்நிறுவனத்துக்கு சொந்தமான, 234 கோடி ரூபாய் சொத்துக்களை, அமலாக்கத் துறையினர், 2016ல் பறிமுதல் செய்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement


வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
skv - Bangalore,இந்தியா
18-மே-201906:43:19 IST Report Abuse
skv<srinivasankrishnaveni> மமதையே இருக்கும் மமதாஜிக்கு ஜன்மதத்துலே சனியா
Rate this:
Share this comment
Cancel
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
15-மே-201908:41:24 IST Report Abuse
Srinivasan Kannaiya அகப்பட்டவனுக்கு அஷ்டமத்தில் சனி... ஓடியவனுக்கு ஒம்பதாம் இடத்தில் குரு
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X