செய்தி சில வரிகளில்...

Added : மே 15, 2019
Advertisement

ஜூன் 4ல் தென்மேற்கு பருவமழை

புதுடில்லி: தென்மேற்கு பருவமழை, கேரளாவில் ஒவ்வொரு ஆண்டும், ஜூன், 1ல் துவங்கும். இந்த ஆண்டு, மூன்று நாட்கள் தள்ளி, 'ஜூன், 4ல், பருவமழை துவங்கும்' என, டில்லியில் உள்ள தனியார் வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.'இந்த ஆண்டிற்கான தென்மேற்கு பருவமழை, சராசரிக்கும் சற்று குறைவாகவே இருக்கும்' என, ஆய்வாளர்கள் தெரிவித்தனர்.

காஷ்மீர் பயங்கரவாதி கைது

புதுடில்லி: ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தை சேர்ந்தவன், அப்துல் மஜீத் பாபா. சோபோர் மாவட்டத்தை சேர்ந்த இவன், ஜெய்ஷ் - இ - முகமது பயங்கரவாத அமைப்பில் இணைந்து செயல்பட்டு வந்தான்.இவனை பற்றிய தகவல் தந்தால், 2 லட்சம் ரூபாய் வெகுமதி அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில், அப்துல் மஜீத்தை,ஸ்ரீநகரில், போலீசார் கைது செய்தனர்.

ஆயுள் கைதிக்கு, 'பரோல்'

புதுடில்லி: டில்லி பல்கலைக்கழகத்தில் சட்டம் பயின்று வந்த, பிரியதர்ஷினி மாட்டோ, 25, என்ற மாணவி, 1996ல், பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு, கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில், பிரியதர்ஷினியுடன் படித்த, சந்தோஷ் குமார் சிங் என்ற மாணவனை, போலீசார் கைது செய்தனர். முன்னாள், ஐ.பி.எஸ்., அதிகாரியின் மகனான சந்தோஷுக்கு, ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. டில்லி சிறையில் உள்ள அவன், தற்போது முதுநிலை சட்ட படிப்பு படித்து வருகிறான். வரும், 24ல் இருந்து தேர்வு நடைபெறுவதையொட்டி, அவனுக்கு, டில்லி நீதிமன்றம், மூன்று வாரங்கள், 'பரோல்' வழங்கி உள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X