பொது செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
மேலும் 3 நாட்களுக்கு
தகிக்க போகுது அனல்

சென்னை : 'தமிழகத்தில் மேலும் மூன்று நாட்களுக்கு அனல் காற்றுடன் கோடை வெயில் தகிக்கும்' என வானிலை மையம் எச்சரித்துள்ளது.

Chennai, சென்னை, அனல், மழை, எச்சரிக்கை


கோடை வெயில் தமிழகம் முழுவதும் உக்கிரம் காட்டி வருகிறது. சில இடங்களில் கோடை மழை கொட்டுகிறது. நேற்று மாலை 5:30 மணி

நிலவரப்படி தமிழகம், புதுச்சேரியில் அதிகபட்சமாக திருத்தணியில் 43 டிகிரி செல்ஷியஸ் வெயில் பதிவானது. வேலுார் 42; மதுரை, திருச்சி 41; கரூர் பரமத்தி, சேலம் 40; சென்னையில் 37 டிகிரி செல்ஷியஸ் வெப்பம் பதிவானது.

நேற்று காலை 8:30 மணி நிலவரப்படி தமிழகத்தில் அதிகபட்சமாக சூலகிரியில் 6 செ.மீ., மழை பதிவானது. நத்தம் 3; பெரியநாயக்கன் பாளையம், ஈரோடு, மணப்பாறை, கேத்தி 2; நாங்குநேரி, கோத்தகிரி, திருப்பத்துார், வாடிப்பட்டி 1 செ.மீ., மழை பதிவானது. சில இடங்களில் இடி, மின்னலுக்கும் வாய்ப்புள்ளது. இந்த மாவட்டங்களில் மிதமான மழைக்கும் வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

Advertisement

கோடை வெயில் நிலவரத்தை பொறுத்தவரை 'அடுத்த மூன்று நாட்களுக்கு மாநிலம் முழுவதும் வெப்பம் தகிக்கும். அனல் காற்று வீசும். சென்னையில் அதிகபட்சம் 39 டிகிரி செல்ஷியஸ் வரை வெயில் கொளுத்தும்' என எச்சரிக்கப்பட்டுள்ளது.


Advertisement

வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Being Justice - chennai ,இந்தியா
15-மே-201917:17:51 IST Report Abuse

Being Justice எந்த கேடுகெட்ட தலைவனும் மரம் வளர்க்கும் விஷயத்தில் அக்கறை கொள்ளவில்லை. தங்கள் ஆட்சியை தக்கவைத்துக்கொள்வதிலும், ஆட்சியை கவிழ்ப்பதிலும் மட்டுமே முழு கவனம் செலுத்துகின்றனர்.

Rate this:
Viswanathan - karaikudi,இந்தியா
15-மே-201909:21:43 IST Report Abuse

Viswanathan காற்றை உறிஞ்சி காசு பண்ண முடியும் என்றால், எவன் செத்தால் எனக்கு என்ன என்று, காற்றை கூட முழுதும் அழித்துவிடும் கயவர்கள் இந்த அரசியல் வாதிகள்

Rate this:
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
15-மே-201908:30:07 IST Report Abuse

Srinivasan Kannaiyaஅரசியல்வாதிகளுக்கு பூமியை குளிர்ச்சியாக வைத்துகொள்ள தெரியவில்லை... குளிர்ச்சி தரும் சமாச்சாரங்கள் அனைத்தும் அழிக்கப்பட்டுவிட்டது... அப்பறம் வெப்பம் தகிக்காமல்... தென்றலா வீசும்...

Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X