எக்ஸ்குளுசிவ் செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
புறக்கணிப்பு!
ரூ.11 ஆயிரம் கோடி முதலீடு
வேண்டாம் என்கிறது தமிழகம்

தெரு விளக்கை உள்ளடக்கிய, மின் சிக்கன திட்டங்களில், மத்திய அரசு, 11 ஆயிரம் கோடி ரூபாய் முதலீடு செய்ய முன்வந்த நிலையில், அதை, தமிழகம் புறக்கணித்து உள்ளது.

ரூ.11 ஆயிரம் கோடி முதலீடு வேண்டாம் என்கிறது தமிழகம்


மத்திய அரசின், நான்கு பொதுத்துறை நிறுவனங்கள் இணைந்து, 'எனர்ஜி எபிஷியன்சி' என்ற, கூட்டு நிறுவனத்தை துவக்கியுள்ளன. இந்நிறுவனம், குறைந்த மின்சாரத்தில் இயங்கும், 'எல்.இ.டி., பல்பு, டியூப் லைட்' மற்றும் மின் விசிறி, 'ஏசி' சாதனம், தெரு விளக்கு, 'பேட்டரி கார்' போன்றவற்றை விற்பனை செய்கிறது.

விலை குறைவு:


இவற்றின் விலை மிகவும் குறைவு. மத்திய மின்துறை அறிவுறுத்தலுக்கு ஏற்ப, மாநில அரசுகள், எனர்ஜி எபிஷியன்சி நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து, அதனிடம் இருந்து, மின் சாதனங்களை வாங்குகின்றன. அவற்றுக்கான பணத்தை, உடனே தர

தேவை இல்லை. ஏற்கனவே பயன் படுத்திய மின் சாதனங்களுக்கு மாற்றாக, எனர்ஜி எபிஷியன்சி சாதனங்களை பயன்படுத்துவதால் ஏற்படும், மின் கட்டண மிச்சத்தில் இருந்து, தவணை முறையில் பணத்தை செலுத்தலாம்.

இதையடுத்து, தமிழகத்தில், 'டெடா' எனப்படும், எரிசக்தி மேம்பாட்டு முகமை, எனர்ஜி எபிஷியன்சி உடன் ஒப்பந்தம் செய்து, அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு, 11 ஆயிரம் கோடி ரூபாய் முதலீட்டுடன், மின் சிக்கன நடவடிக்கை மேற்கொள்ள இருப்பதாக, தமிழக அரசு, 2017 ஜூன் மாதம், சட்டசபையில் தெரிவித்தது.இதே தகவல், 2018 பட்ஜெட்டிலும் அறிவிக்கப்பட்டது. இதுவரை, ஒப்பந்தம் கையெழுத்தாகவில்லை. இந்நிலையில், அத்திட்டத்தை, தமிழகம் புறக்கணிக்க உள்ளதாக தெரிகிறது.

முறைகேடுகள்:


இதுகுறித்து, டெடா அதிகாரி ஒருவர் கூறியதாவது:தமிழக அரசின் பல்வேறு துறைகள், தங்களுக்கு வேண்டிய மின் சாதனங்களை, 'டெண்டர்' வாயிலாக வாங்குகின்றன. அதில், குறிப்பிட்ட நிறுவனத்திடம் வாங்குவது போன்ற முறைகேடுகள் நடக்கின்றன.அந்த சாதனங்கள், தரமற்று உள்ளன. எனர்ஜி எபிஷியன்சி நிறுவனம், மின் சாதனங்களை, மொத்தமாக கொள்முதல் செய்கிறது. இதனால், தரமான சாதனங்கள், குறைந்த விலைக்கு கிடைக்கின்றன.

Advertisement

அதே விலைக்கு, மாநில அரசுகளுக்கு வழங்குகிறது. பல மாநில அரசுகள், அந்நிறுவனத்திடம் இருந்து, சாதனங்களை வாங்கி பயன்படுத்தி வருகின்றன.எனர்ஜி எபிஷியன்சியிடம் இருந்து வாங்கினால், கமிஷன் கிடைக்காது என்பதால், ஒப்பந்தம் செய்ய, தமிழகம் தாமதம் செய்து வந்தது.தற்போது, அரசு விதிப்படி, உபகரணங்கள், டெண்டர் வாயிலாக மட்டுமே வாங்கப் படுகின்றன;

புரிந்துணர்வு ஒப்பந்தப்படி வாங்குவது கிடையாது என்று முடிவு எடுத்து, எனர்ஜி எபிஷியன்சி யுடன் ஒப்பந்தம் செய்யும் முடிவை, எரிசக்தி முகமை கைவிட உள்ளது.அனைத்து அரசு நிறுவனங்களுக்கும், மின் சாதனங்களை வாங்கி தரும், ஒருங்கிணைப்பு நிறுவனமாக, டெடாவை நியமிக்கவும் திட்டமிடப்பட்டு உள்ளது. இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement

வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
svs - yaadum oore,இந்தியா
15-மே-201906:39:21 IST Report Abuse

svsமாநிலத்திற்கு முதலீடு வருமா என்று எதிர்ப்பார்கள் ..இங்கே வேண்டாம் என்கிறார்கள் ....ஊழலில் மட்டும் தமிழ் நாட்டில் எல்லா கட்சிகளிடையே ஒற்றுமை உண்டு .....தமிழ் நாடு முன்னேறிய மாநிலம் .....

Rate this:
Indhuindian - Chennai,இந்தியா
15-மே-201906:17:52 IST Report Abuse

Indhuindianநல்ல முடிவு தமிஷனத்தை, தமிஷகத்தை இருட்டிலேயே இருக்கட்டும் என்ற சித்த்தாந்தம் உடைய திராவிட கட்சிகளால் வேறே என்ன செய்யமுடியும். அப்படியே செய்ய ஆரம்பிச்சாலும் அவங்க போடற கண்டிஷனலாம் பாத்துட்டு ஆர்பாட்டம் பண்ண காத்துகிட்டு இருக்காங்க - ஸ்டாலின், வைகோ, திருமா, சீமான், வீரமணி போன்றவர்கள். ஏதோ சூரியன் கிட்டே ஒன்னும் பண்ண முடியலே அதனாலே பகலிலே இருட்டு இல்லே அது வரிக்கும் சந்தோஷப்படுங்க

Rate this:
Tamil Nesan - Chennai,இந்தியா
15-மே-201906:09:08 IST Report Abuse

Tamil Nesanகமிஷன் இல்லாமல் எத்தனை ஆயிரம் கோடி வந்தாலும் எங்களுக்கு தேவை இல்லை. பணம் கொடுத்தால் ஓட்டு கிடைக்கிறது. பின் எதற்கு நல திட்டங்கள் எல்லாம்....

Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X