சுருங்குவதால் நிலவில் நடுக்கம்; 'நாசா' அமைப்பு புதிய தகவல்

Added : மே 15, 2019
Advertisement
 சுருங்குவதால் நிலவில் நடுக்கம்; 'நாசா' அமைப்பு புதிய தகவல்

வாஷிங்டன்: 'நிலவு சுருங்கி வருவதால் அதில் பூமியில் ஏற்படும் நிலநடுக்கம் போல நிலவு நடுக்கமும் ஏற்படுகிறது' என அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி அமைப்பான 'நாசா' கூறியுள்ளது.

அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி மையமான 'நாசா' வின் சார்பில் அனுப்பப்பட்டுள்ள எல்.ஆர்.ஓ. எனப்படும் நிலவை சுற்றி வரும் விண்கலம் புகைப்படங்களை அனுப்பி வருகிறது.


12 ஆயிரம் புகைப்படம்:


நிலவின் வட முனைக்கு அருகில் உள்ள பகுதியில் எடுக்கப்பட்ட 12 ஆயிரம் புகைப்படங்கள் ஆய்வு செய்யப்பட்டன. அதன்படி நிலவில் 450 கோடி ஆண்டுகளுக்கு முன் இருந்த வெப்பத்தின் அளவு குறைந்து வருகிறது. பூமிக்கு அடியில் உள்ளது போன்ற பல்வேறு நிலப்படிவுகள் நிலவில் கிடையாது. மேலும் அதன் மேற்பகுதி மாற்றத்துக்கு உட்படக் கூடியது. வெப்பநிலை குறைந்து வருவதால் பல லட்சம் ஆண்டுகளுக்கு முன் இருந்ததைவிட 150 அடி நிலவு சுருங்கி உள்ளது.


ஆய்வறிக்கை:

இவ்வாறு சுருங்கும்போது நிலவில் வெடிப்புகளும் சுருக்கங்களும் ஏற்பட்டுள்ளன. மேலும் பூமியில் ஏற்படும் நில நடுக்கம்போல நிலவிலும் நடுக்கம் ஏற்பட்டுள்ளது. உதாரணத்துக்கு திராட்சை பழத்தை காய வைத்தால் அதில் உள்ள ஈரத்தன்மை குறைந்து தோல் சுருங்கி உலர் திராட்சை ஆவதுபோல் நிலவின் மேற்பகுதியில் சுருக்கங்கள் ஏற்பட்டுள்ளன. அமெரிக்காவில் அறிவியல் ஆய்வு பத்திரிகையில் வெளியிடப்பட்டுள்ள ஆய்வறிக்கையில் இந்தத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.


'ஆர்திமிஸ்' பெயர் சூட்டல்:

'நாசா' வின் சார்பில் 2024ல் நிலவுக்கு மனிதர்களை அனுப்ப திட்டமிடப்பட்டுள்ளது. முதல் முறையாக ெண்ணை அனுப்பவும் நாசா முடிவு செய்துள்ளது. இந்நிலையில் இந்த திட்டத்துக்கு ஆர்திமிஸ் என பெயரிடப்பட்டுள்ளது. கிரேக்கர்களின் புராணத்தின்படி நிலவுக்கான பெண் கடவுளான ஆர்திமிஸ் பெயர் புதிய திட்டத்துக்கு வைக்கப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X