பொது செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
மழை அளவு 69 சதவீதம் குறைந்தது
குடிநீர் சிக்கனம் குறித்து அரசு வேண்டுகோள்

சென்னை : 'தமிழகத்தில் பருவ மழை பொய்த்ததன் காரணமாக பல மாவட்டங்களில் மழை அளவு குறைந்துள்ளது. எனவே குடிநீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும்' என தமிழக குடிநீர் வடிகால் வாரிய மேலாண்மை இயக்குனர் மகேஸ்வரன் பொது மக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

rain, மழை, குறைவு,சராசரி, குடிநீர், சிக்கனம்


அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தமிழகத்தின் மழை அளவு வழக்கத்தை விட 69 சதவீதம் குறைந்துள்ளது. அனைத்து குடிநீர் திட்டங்களில் எடுக்கப்படும் தண்ணீர் கடைக்கோடி குடியிருப்புகள் வரை வரையறுக்கப்பட்ட அளவில் சென்றடைவதை உறுதி செய்ய 258 சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இக்குழுவில் உதவி நிர்வாகப் பொறியாளர்கள் உதவிப் பொறியாளர்கள் இளநிலைப் பொறியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

அனைவரும் மேற்பார்வை பொறியாளரின் நேரடி பார்வையில் பணியாற்றி வருகின்றனர். மாவட்டத்தில் பணிபுரிகிற வாரிய செயற்பொறியாளர் அனைவரும் பேரூராட்சிகள் உதவி இயக்குனர் கிராம ஊராட்சிகள் உதவி இயக்குனர் ஆகியோரோடு கலந்து பேசி தினமும் வரையறுக்கப்பட்ட குடிநீர் குடியிருப்புகளுக்கு வழங்கப்படுகிறதா என கேட்டு உரிய நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

மேலும் கிராம ஊராட்சிகளில் ஊராட்சி மற்றும் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் மேற்கொள்ளும் பராமரிப்பு பணிகளுக்கு தேவையான தொழில்நுட்ப ஆலோசனைகள் மற்றும் உதவிகளை வாரிய பொறியாளர்கள் வழங்க வேண்டும். குடிநீர் குழாய்களில் ஏற்படும் கசிவுகள் வெடிப்புகள் மின் மோட்டாரில் ஏற்படும் பழுதுகளை போர்க்கால அடிப்படையில் சரிசெய்ய வேண்டும். பாதுகாக்கப்பட்ட குடிநீர் தொய்வின்றி கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
வாரிய தலைமை அலுவலகத்தில் இணை தலைமை பொறியாளர் தலைமையில் சிறப்பு குறை தீர்வு குழு அமைக்கப்பட்டுள்ளது. இக்குழுவை 94458 02145 என்ற மொபைல் எண்ணில் தொடர்பு கொள்ளலாம். அந்த எண்ணில் குடிநீர் குழாய்களில் ஏற்படும் கசிவுகள் உடைப்புகள் வீணாகும் குடிநீர் போன்ற விபரங்களை

Advertisement

தெரிவிக்கலாம். குடிநீர் வாரியம் சார்பில் ஒவ்வொரு மாவட்டத்திலும் குடிநீர் தரப் பரிசோதனைக் கூடம் இயங்கி வருகிறது.

பொது மக்கள் குடிநீர் தரப் பரிசோதனை செய்ய இதை பயன்படுத்தலாம். மாநிலத்தின் ஆண்டு சராசரி மழை அளவு 96 செ.மீ. ஆனால் 2018ல் 81 செ.மீ. மழை மட்டுமே பெய்துள்ளது. தமிழகம் முழுவதும் 2019 ஜனவரி முதல் மே வரை 10 செ.மீ. மழை பெய்ய வேண்டும். ஆனால் 3.4 செ.மீ. மழை மட்டுமே பெய்துள்ளது. சராசரியை விட 69 சதவீதம் மழை குறைவாக பெய்துள்ளது. தமிழகம் முழுவதும் மழை நீர் சேகரிப்பு அமைப்பு முறைகளை செயல்படுத்த தேவையான தொழில்நுட்ப ஆலோசனைகளை குடிநீர் வாரியம் அளித்து வருகிறது. எனவே பொது மக்கள் அனைவரும் குடிநீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Advertisement

வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
skv - Bangalore,இந்தியா
20-மே-201914:27:47 IST Report Abuse

skv<srinivasankrishnaveni>டாஸ்மாக்கி நீர் கிடைக்கணும்னா எங்கேருந்தும் நீர் எடுப்பாங்களோ என்னவோமேயாருக்காண்டா

Rate this:
sankar - ghala,ஓமன்
15-மே-201914:00:02 IST Report Abuse

sankarநீங்கள், நீங்கள் என்பது யார் அது நாம் தான் வேற யாரும் இல்லை

Rate this:
Murugesan Ppm - dubai,ஐக்கிய அரபு நாடுகள்
15-மே-201910:22:32 IST Report Abuse

Murugesan Ppmபோர்க்கால அடிப்படியில் மரம்நட வேண்டும் ..எதிர்காலத்தில் இதுபோன்ற மழை பற்றக்குறை இருக்காது...

Rate this:
மேலும் 2 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X