பொது செய்தி

தமிழ்நாடு

கனிமொழிக்கு அர்ச்சனை கணவர் அரவிந்தன் ஏற்பாடு

Added : மே 15, 2019 | கருத்துகள் (32)
Advertisement
 கனிமொழிக்கு அர்ச்சனை கணவர் அரவிந்தன் ஏற்பாடு

ஸ்ரீவில்லிபுத்துார்:ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோவிலில், தி.மு.க., மாநில மகளிரணி செயலர் கனிமொழியின் கணவர் அரவிந்தன், தன் பெயரிலும், மனைவி பெயரிலும், அர்ச்சனை செய்து, தரிசனம் செய்தார்.

துாத்துக்குடியில் இருந்து, நேற்று காலை, 11:20 மணிக்கு, கனிமொழியின் கணவர் அரவிந்தன், ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோவிலுக்கு வந்தார். ஆண்டாள் சன்னிதியில் தன் பெயரிலும், மனைவி கனிமொழி பெயரிலும் அர்ச்சனை செய்தார். அவருக்கு பட்டர்கள் மாலையணிவித்து, துளசி, குங்கும பிரசாதம் மற்றும் மார்கழி எண்ணெய் காப்பு தைலம் வழங்கினர்.

பின், வடபத்ரசயனர் கோவிலில் தரிசனம் செய்த அவர், அங்கும் இருவர் பெயரிலும் அர்ச்சனை செய்தார். ராஜகோபுரத்தை தரிசித்த அரவிந்தன், 12:20 மணிக்கு புறப்பட்டு சென்றார். கோவில் பட்டர்களிடம், ''42 ஆண்டுகளாக, ஆண்டாள் கோவிலுக்கு வரவேண்டும் என நினைத்து கொண்டிருந்தேன். இன்று தான், அதற்கான வாய்ப்பு கிட்டிஉள்ளது,'' என்றார்.கடை வீதியில், ஆண்டாள் திருப்பாவை, நாச்சியார் திருமொழி புத்தகங்கள், பாடல், 'சிடி'க்களையும், ஆண்டாள், ரெங்கமன்னார், கருடாழ்வார் படங்களையும் வாங்கி சென்றார்.

Advertisement


வாசகர் கருத்து (32)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
kalyanasundaram - ottawa,கனடா
01-ஜூன்-201915:29:26 IST Report Abuse
kalyanasundaram let him pray that his wife be near him
Rate this:
Share this comment
Cancel
TamilArasan - Nellai,இந்தியா
26-மே-201904:51:21 IST Report Abuse
TamilArasan பாவம் சேர கூடாத இடத்தில் சேர்ந்து.....
Rate this:
Share this comment
Cancel
Bhaskar Srinivasan - Trichy,இந்தியா
25-மே-201915:47:01 IST Report Abuse
Bhaskar Srinivasan கோவில் உள்ள விடாதீங்க சொல்ல தோணுது. ஆனா கடவுள் கிட்ட இவனுங்கதான்னு அடையாளம் கட்ட வேணும்ல
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X