பொது செய்தி

தமிழ்நாடு

'கஜா'வில் குடியிருப்பை இழந்தவருக்கு வீடு கட்டி கொடுத்த ராகவா லாரன்ஸ்

Added : மே 15, 2019 | கருத்துகள் (2)
Advertisement
 'கஜா'வில் குடியிருப்பை இழந்தவருக்கு வீடு கட்டி கொடுத்த ராகவா லாரன்ஸ்

புதுக்கோட்டை:'கஜா' புயலால் வீட்டை இழந்த சமூக சேவகர், கணேசனுக்கு, 10 லட்சம் ரூபாய் செலவில், நடிகர் ராகவா லாரன்ஸ், வீடு கட்டி கொடுத்துள்ளார்.

புதுக்கோட்டை, ஆலங்குடியைச் சேர்ந்தவர், சமூக சேவகர் கணேசன், 68. இவர், 48 ஆண்டுகளாக சமூக சேவை செய்துவருகிறார்.நிவாரண உதவி'சுனாமி' பாதிப்பு துவங்கி, 'தானே' புயல், சென்னை மழை வெள்ளம், மழையால், கேரளா மாநிலம் பாதிப்பு உட்பட பேரிடர் காலங்களில், தன், 515 என்ற எண் அம்பாசிடர் காரில் பயணித்து, பொதுமக்களிடம் வசூல் செய்து, 15 லட்சம் ரூபாய்க்கு மேல் நிவாரண உதவிகளை வழங்கியுள்ளார்.இதனால், இவரை, '515 கணேசன்' என்றே அழைப்பர்.

இதேபோல், தன் அம்பாசிடர் காரில், 5,000த்துக்கும் மேற்பட்ட சடலங்களை இலவசமாக ஏற்றி, உரிய இடத்தில் சேர்த்துள்ளார். தொடர்ந்து, சமூக சேவையில் ஈடுபட்டு வரும்கணேசனை பாராட்டி, பெங்களுரைச் சேர்ந்த பல்கலை ஒன்று, கடந்த ஆண்டு, டாக்டர் பட்டம் வழங்கி கவுரவித்தது.கடந்த ஆண்டு நவ., 16ல், புதுக்கோட்டை மாவட்டத்தில், 'கஜா' புயல் பல பாதிப்புகளை ஏற்படுத்தியது. இதில், கணேசன் வீடும் சேதம் அடைந்தது. வீட்டை இழந்த கணேசன், வாழ வழியின்றி தவித்து வந்தார்.


10 லட்சம் ரூபாய்


இதையறிந்த நடிகர் ராகவா லாரன்ஸ், கணேசனுக்கு, புதிய வீடு கட்டித் தருவதாக அறிவித்து இருந்தார். அவர் கூறியபடியே, ஆறு மாத காலத்தில், 10 லட்சம் ரூபாய் செலவில், கணேசனுக்கு புதிய வீட்டை கட்டினார், லாரன்ஸ்.வீட்டை கணேசனிடம் ஒப்படைக்கும் விழா, ஆலங்குடியில் நடந்தது. ராகவா லாரன்ஸ் பங்கேற்று, குத்து விளக்கேற்றினார்.லாரன்ஸ் கூறுகையில், ''ஆயிரக்கணக்கான மக்களுக்கு தொடர்ந்து சேவை செய்து வரும், ஆலங்குடி கணேசனுக்கு புதிய வீடு கட்டிக் கொடுத்தது, அளவற்ற மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது,'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
15-மே-201908:36:35 IST Report Abuse
Srinivasan Kannaiya விளம்பரம் இல்லாமல் செய்தால் இன்னும் புகழ் கூடும்
Rate this:
Share this comment
sundara pandi - lagos ,நைஜீரியா
15-மே-201916:22:53 IST Report Abuse
sundara pandiஜாதிவெறி அரசியல்(எல்லா ஜாதிகளும் அடக்கம்) , ஊழல் அரசியல் , சுயநல மனிதர்கள் , இவர்களுக்கு மத்தியில் தன்னலம் கருதாமல் தான் உழைத்து சம்பாத்தித்த பணத்தை மற்றவர்களுக்காக செலவுசெய்யும் திரு .ராகவா லாரன்ஸின் தனித்தன்மையை மற்றவர்களுக்கு தெரியப்படுத்துவது மிகவும் அவசியமான ஒன்று. அப்போதாவது சில ஜென்மங்கள் திருந்தாதா...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X