அரசியல் செய்தி

தமிழ்நாடு

நன்மை செய்யும் ஓட்டு: முதல்வர், இ.பி.எஸ்., பேச்சு

Added : மே 15, 2019 | கருத்துகள் (3)
Advertisement
 நன்மை செய்யும் ஓட்டு: முதல்வர், இ.பி.எஸ்., பேச்சு

கோவை:''நீங்கள் போடும் ஓட்டு, நன்மை செய்யும் ஓட்டாக இருக்க வேண்டும்,'' என, முதல்வர், இ.பி.எஸ்., பேசினார்.

கோவை மாவட்டம், சூலுார் இடைத்தேர்தலில் போட்டியிடும், அ.தி.மு.க., வேட்பாளர் கந்தசாமியை ஆதரித்து, சின்னியம்பாளையத்தில் நேற்று அவர் பேசியதாவது:ஆளும் கட்சியான, அ.தி.மு.க., வேட்பாளர் வெற்றி பெற்றால் தான், மக்களின் கோரிக்கை என்னிடம் வந்து சேரும். நான் முதல்வர் ஆனது முதல், தி.மு.க., - எம்.எல்.ஏ., ஒருவர்கூட என்னை சந்தித்து, மக்கள் நலன் கருதி, மனு கொடுத்தது இல்லை. நீங்கள் போடும் ஓட்டு, நன்மை செய்யும் ஓட்டாக இருக்க வேண்டும்.

ஆட்சியை கவிழ்க்கவும், அ.தி.மு.க.,வை உடைக்கவும், தி.மு.க.,வுடன் ரகசிய கூட்டணி வைத்து தினகரன் சதித்திட்டம் தீட்டியுள்ளார். தி.மு.க,வும், அ.ம.மு.க.,வும் ஒன்றுதான். வெளியே எதிரியை போன்றும், உள்ளே நண்பர்களாகவும் நடந்து கொள்கின்றனர்.ஸ்டாலினிடம் என்றுமே நிலையான பேச்சு கிடையாது. ராகுலை பிரதமராக முன்மொழிந்த ஸ்டாலின், கொல்லைப்புறம் வழியாக, தெலுங்கானா முதல்வர், சந்திரசேகர ராவை சந்தித்து, மூன்றாவது அணி அமைப்போம் என்கிறார்.இவ்வாறு அவர் பேசினார்.

Advertisement


வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
meenakshisundaram - bangalore,இந்தியா
26-மே-201905:26:22 IST Report Abuse
meenakshisundaram மிக அழகான வார்த்தை பிரயோகம் ,ஆனா மக்கள் புரிஞ்சுக்கணும் இப்போது அவர்கள் கையில் உள்ள வாக்கு சீட்டு தீ' போன்றது ,விளக்கேற்றவும் உதவும் ,வீட்டை அழிக்கவும் உதவும்,
Rate this:
Share this comment
Cancel
sridhar - chennai,இந்தியா
15-மே-201913:13:38 IST Report Abuse
sridhar இதற்கு முன்னாலும் கூட இந்த தொகுதியில் அதிமுக தானே ஜெயித்தது?? அப்போது என்ன நன்மைகள் செய்தீர்கள் என்பதை இந்த ஏழை விவசாயி முதல்வர் கூறட்டும்..
Rate this:
Share this comment
Cancel
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
15-மே-201908:31:56 IST Report Abuse
Srinivasan Kannaiya ''நீங்கள் போடும் ஓட்டு, நன்மை செய்யும் ஓட்டாக இருக்க வேண்டும்,'' என, முதல்வர், இ.பி.எஸ்., பேசினார்... இல்லவே இல்லை.. அவரை முதல்வாராக தக்கவைக்கும் ஓட்டு என்று சொல்லலாம்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X